.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 23 September 2013

நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்...


சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், அடுத்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு சேர்க்கை நடக்க இருக்கிறது. 


டிசம்பரில் தொடங்கும் பயிற்சி வகுப்புகளில், தங்கும் வசதியுடன் 200 மாணவர்களுக்கு முழுநேரப் பயிற்சியும், தங்கும் வசதியின்றி 100 மாணவர்களுக்கு பகுதி நேரப் பயிற்சியும் வழங்கப்படும்.

எத்தனை இடங்கள்?

300 இடங்கள் கொண்ட இம்மையத்தில், ஆதிதிராவிடர்  123, அருந்ததியர்  24, பழங்குடியினர்  3, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்  54, பிற்படுத்தப்பட்டோர்  72, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்)  9, மாற்றுத் திறனாளிகள்  9, இதர வகுப்பினர்களுக்கு 6, இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

தகுதிகள்

பட்டப்படிப்பு படித்த 21 வயது பூர்த்தியடைந்த, 30 வயதுக்கு மேற்படாத இதர பிரிவினர் விண்ணப்பிக்க தகுதியுடையோர். ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு உண்டு. விடுதியில் தங்கிப் பயிற்சி பெறுவோருக்கு இலவச பயிற்சி, தங்கும் வசதி செய்துதரப்படும்.

கட்டணம்

முழுநேரப் பயிற்சியில் பயிற்சி பெற இதர பிரிவினர் மட்டும் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். பகுதிநேர பயிற்சிக்கு இதர பிரிவினர் ரூ.3000 கட்டணமாக செலுத்தவேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய நபர்கள், அலுவலக வேலைநாட்களில் ஜாதி, வயது, பட்டப்படிப்பு சான்றிதழ்களின் நகல்களை, சம்பந்தப்பட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து, விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து அவர்களிடமே அளிக்க வேண்டும். 

சென்னை மாவட்ட விண்ணப்பதாரர்கள், ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் மையத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே ஒப்படைக்க வேண்டும்.

சென்னை, திருச்சி, மதுரை கோவை, நெல்லை, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சை, தர்மபுரி, சிவகங்கை போன்ற இடங்களில் நடக்கும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். இம்மையங்களில் 10.11. 2013 அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். 

நுழைவுத் தேர்வில் இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய,  உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு, பொருளாதாரம், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பருவநிலை மாற்றங்கள், அடிப்படை எண் அறிவு, புத்திக் கூர்மை, பகுத்தறியும் திறன், புரிந்து கொள்ளும் திறன் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும். 

நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு, சென்னை மையத்தில் வகுப்புகள் நடக்கும். 

நுழைவுத் தேர்வு, மாதிரி வினாத்தாள் 

http://www.civilservicecoaching.com 

என்ற இணையதளத்தில் உள்ளன. 

விண்ணப்பிக்க கடைசி நாள் 15.10.2013. 

விவரங்களுக்கு 044 - 2462 1475 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். 

1 comments:

Ramanasri IAS INSTITUTE said...

Thank You!!
IAS Study Material

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top