.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 22 September 2013

சினிமா நூற்றாண்டு 2–ம் நாள் நிகழ்ச்சி: சென்னையில் திரண்ட கன்னட– தெலுங்கு நடிகர், நடிகைகள் !

    இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல்– அமைச்சர் ஜெயலலிதா நேற்று இவ்விழாவை தொடங்கி வைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியாக தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை 2–ம் நாள் நிகழ்ச்சியாக கன்னட திரைப்பட விழா நடந்தது. கர்நாடக மந்திரிகள் கே.ஜே. ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, உமாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். பின்னர் கன்னட நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கன்னட மொழி பாடல்களுக்கு நடிகர், நடிகைகள் நடனம் ஆடினார்கள். விழாவில் ஏராளமான கன்னட ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். இன்று மாலை 6 மணிக்கு தெலுங்கு திரைப்பட விழா நடக்கிறது. இதில் ஆந்திர துணை முதல்வர் தாமோதர்ராஜா நரசிம்மா,...

இந்து மத கலைக்களஞ்சியம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது!

இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது. 25 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்து மதத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் எழுதிய சுமார் ஏழாயிரம் கட்டுரைகளின் 11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது. இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து இந்தக் கலைக்களஞ்சியம் பேசுகிறது. தவிர இந்து மதம் சார்ந்த இந்திய சரித்திரம், கலாச்சாரம், கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்திய பாரம்பரிய ஆய்வு அறக்கட்டளை...

அக்டோபர் 28 ஆம் தேதி மங்கள்யான் ஏவப்படும்!

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விடும் முதல் ஆய்வுக் கோள் வரும் அக்டோபர் 28 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், தற்போது இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதிக்கும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தேவிப் பிரசாத் கார்னிக் தமிழோசையிடம் தெரிவித்தார். வானிலை சீராக இருந்தால்...

டிசைனர் குஷனில் குஷியான லாபம்!

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மஞ்சுபாஷிணியின் வீட்டுக்குள் நுழைந்தால், திரும்பின பக்கமெல்லாம் அழகழகான குஷன்கள். சதுரமாக,  வட்டமாக, இதய வடிவத்தில், திண்டு மாடலில்.... இன்னும் விதம்விதமான வடிவங்களில் அசத்தும் அத்தனையும் அழகு குஷன்கள்.கார் வைத்திருப்பவர்களும், வீட்டை ஆடம்பரமாக வைத்திருப்போரும் மட்டும்தான் ஒரு காலத்தில் குஷன் உபயோகிப்பார்கள். இன்று வீட்டுக்கு வீடு  அவற்றின் உபயோகத்தைப் பார்க்க முடிகிறது. ‘‘எம்.ஏ எகனாமிக்ஸ் படிச்சிருக்கேன். அடிப்படையில நான் ஒரு பியூட்டிஷியன். அழகு விஷயத்துல  ஆர்வம் அதிகம். அழகழகான கைவினைப் பொருள்கள் பண்றதுலயும் ஈடுபாடு உண்டு. ஒருமுறை ஒரு கடையில குஷன் பார்த்தேன். அதோட  நேர்த்தியும், டிசைனும்...

கற்பனையும் கைத்திறனும்: வீட்டுக்குள் மரம்!

என்னென்ன தேவை? பிவிசி பைப் - 1 (விருப்பமான சைஸில் கட் செய்து வாங்கிக் கொள்ளவும்) கயிறு - தேவையான அளவு பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பவுடர் - 1 கிலோ (செராமிக் பவுடரும் பயன்படுத்தலாம்) ஃபெவிகால் - 1 பாட்டில்அக்ரிலிக் பெயின்ட் - (பிடித்த வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளவும்)பிளாஸ்டிக் இலைகள் - தேவையான அளவு (கடைகளில் கிடைக்கும்) மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி - 1பிளாஸ்டிக் பூக்கள் - ஒரு கொத்துகூழாங்கற்கள் - தேவைக்கேற்ப பிரஷ் - 1. “மிரட்டும் அலங்காரங்கள் வேண்டாம்... ஆடம்பரமான பொருள்களை அறைக்குள் திணித்து அடைக்க வேண்டாம்... கலைநயம் மிளி ரும் சின்னச்  சின்னப் பொருள்கள் போதும்... கலையழகு வீட்டில் தாண்டவமாடும். அதற்கு நிச்சயம் உதவும்...

பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.!

புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு. கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது. இணையதள முகவரி :      http://www.good-tutorials.com CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில்...

பால் கொழுக்கட்டை - சமையல்!

என்னென்ன தேவை? பச்சரிசி மாவு - 1/2 கப், பொடித்த வெல்லம் - 1/2 கப், தேங்காய் - 1/2 மூடி, ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - சிறிது. எப்படிச் செய்வது? பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, வெந்நீர் விட்டு கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக  உருட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவி, முதல் இரண்டு பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தையும் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இரண்டாம்  தேங்காய் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு அதிலேயே உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு  வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும் முதல் பால் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி, பின்...

பால் பாயசம்! - சமையல்!

என்னென்ன தேவை?  பால் - 1 லிட்டர், பச்சரிசி நொய் - 1/4 கப், சர்க்கரை - 300 கிராம், ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, முந்திரி, திராட்சை - அலங்கரிக்க, குங்குமப்பூ - சிறிது, நெய் - சிறிது. எப்படிச் செய்வது?  பாலில் சிறிது தண்ணீர் விட்டு நொய் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். பாலில் வெந்த நொய்யில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து  அடிப்பிடிக்காமல் கிளறவும். நெய்யில் ஏலக்காய், முந்திரி, திராட்சை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். குங்குமப்பூ வேண்டுமென்றால் கையால்  நொறுக்கிச் சேர்க்கவும். சுலபமான, சுவையான பால் பாயசம் ரெடி....

தமிழ்வழி பி.இ. படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை!

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பி.இ. சிவில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படிக்கும் 120 மாணவ-மாணவிகளுக்கும் படிப்பை முடிக்கும்போது கண்டிப்பாக அரசு வேலை உறுதியாக காத்திருக்கும். அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உறுதியாக அரசு வேலை காத்திருக்கிறது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடுதான் இந்த அதிர்ஷ்டத்திற்கு காரணம்.  தமிழ்வழியில் கல்வி    தமிழில் படித்தால் வேலையே கிடைக்காது என்ற ஏளனப்பேச்சை சர்வ சாதாரணமாக எங்கும் கேட்கலாம். மழலை கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும்...

வளர்ச்சிக்கு வழிகாட்டிய வண்ணத்துப் பூச்சிகள்!

  வடிவழகன்              குறிப்பிட்ட வகைப் பூக்களிடம் மகரந்தச் சேர்க்கை விவசாயத்தில் குறிப்பிட்ட வகை பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சிகளின் மரபணுவைத் தூண்டியோ, கட்டுப்படுத்தியோ, சில நுண்ணிய மாற்றங்களைச் செய்தோ அவை பயிர்களுக்கு தீங்கு செய்யாதபடி மாற்றலாம். அது கடினமாக இருக்கும்பட்சத்தில் பயிரின் மரபணுவில் மாற்றம் செய்து அக்குறிப்பிட்ட வகை பூச்சி தன்னிடம் வராமல் செய்யலாம்.   கேயாஸ் கோட்பாடு கேள்விப்பட்டி ருப்போம். ஏறத்தாழ அப்படியான ஓர் கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார் இளம் ஆராய்ச்சியாளரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை முனைவருமான வடிவழகன். வண்ணத்துப்...

குளு..குளு..கொடைக்கானல்..! - சுற்றுலாத்தலங்கள்!

 குளு..குளு..கொடைக்கானல்..! குளு..குளு..கொடைக்கானல் கொடைக்கானல்-இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக்கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளில் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.22 சதுர கிலோமீட்டர் பரப்பு...

மானும்..ஓநாயும் (நீதிக்கதை)!

      ஒரு ஊரில் மான் கூட்டம் ஒன்று வசித்து வந்தன.அவற்றுள் ஒரு சின்ன மான் மிகவும் புத்திசாலியாய் இருந்தது.   அதே நேரம் தன் புத்திசாலித்தனத்தைக் கண்டு மற்ற மான்களிடம் சற்று கர்வமாகவே நடந்துவந்தது.   ஒரு நாள் எல்லா மான்களும் மேய்ச்சல் முடிந்து திரும்புகையில் இருட்ட ஆரம்பித்தது..ஆனால் அப்போதும் அந்த  சின்ன மான் திரும்ப வரவில்லை.. 'இருட்டில் எந்தமிருகமாவது வந்து உன்னை அடித்து உண்டு விடும்'என்று வயதான மான் ஒன்று அறிவுரை கூறியும் சின்ன மான் கேட்கவில்லை..'சரி' என மற்ற அனைத்து மான்களும் திரும்பின.. அந்த நேரம் அங்கு வந்த ஒரு ஓநாய் ஒன்று சின்ன மான் தனியாய் இருப்பதைப் பார்த்து ...அதை கொன்று...

ஓவியப் போட்டி: ரூ.1 லட்சம் பரிசு!!

மத்திய மின்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பீரோ ஆஃப் எனர்ஜி எபிசியின்சி (BEE) நிறுவனம், 4 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்காக இந்திய அளவில் ஓவியப்போட்டியை நடத்துகிறது. இப்போட்டி இருபிரிவாக நடத்தப்பட இருக்கிறது. இருபிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். ஏ - பிரிவுக்கான (4, 5, 6-ஆம் வகுப்பு) தலைப்பு: 1. Save money - Practice energy conservation, 2. Save electricity, illuminate every home, 3. Save one unit a day, keep power cut away. பி - பிரிவுக்கான (7,8,9-ஆம் வகுப்பு) தலைப்பு: 1. Energy conservation - A vision of the future,  2. Energy conservation is the foundation of energy security, 3. Energy efficiency is a journey not destination. இப்போட்டிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக, பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில்...

தமிழ் திரையுலகம் பயணிக்கும் பாதை சரியில்லையே!

ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் – அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு படைப்பாளி சிற்பியாக இருந்தால் – அவனது சிற்பங்கள் செய்நேர்த்தி மிக்கவையாக, செய்திகளைச் சொல்பவையாக, படைத்தவனின் கடுமையான உழைப்பாற்றலைப் பிரதிபலிப்பவையாக இருக்கும்பட்சத்தில் அவை ரசிக்கப்படுகின்றன, விலைகொடுத்து வாங்கப்படுகின்றன, கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டு வணங்கப்படுகின்றன. ஒரு படைப்பாளி பெருங்கதை புனைபவனாக இருந்தால் – அவனது...

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழர் கட்சி முன்னணி ஆட்சியை பிடித்தது!

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு ஆட்சியை பிடித்தது.இதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.   இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு, 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இன்று தேர்தல் நடைபெற்றது. தனித்தமிழ் ஈழ நாடு கோரி நடத்திய போரின்போது, விடுதலைப்புலிகளின் மையப்பகுதியாக வடக்கு மாகாணம் திகழ்ந்தது. இந்த மாகாணத்தில்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைனில் வசதி!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இப்படி ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்கெனவே உள்ளது. அனால் சொந்தமாக இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் மையங்கள் மூலம் இனி பலன் கிடைக்கும். வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைன் வசதியை பெற வெப்சைட் முகவரி: www.elections.tn.gov.in   இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் “இந்தியாவில்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top