இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல்– அமைச்சர் ஜெயலலிதா நேற்று இவ்விழாவை தொடங்கி வைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியாக தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று காலை 2–ம் நாள் நிகழ்ச்சியாக கன்னட திரைப்பட விழா நடந்தது. கர்நாடக மந்திரிகள் கே.ஜே. ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, உமாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். பின்னர் கன்னட நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கன்னட மொழி பாடல்களுக்கு நடிகர், நடிகைகள் நடனம் ஆடினார்கள். விழாவில் ஏராளமான கன்னட ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.
இன்று மாலை 6 மணிக்கு தெலுங்கு திரைப்பட விழா நடக்கிறது. இதில் ஆந்திர துணை முதல்வர் தாமோதர்ராஜா நரசிம்மா, மத்திய மந்திரி கே.சிரஞ்சீவி, அமைச்சர் டி.கே. அருணா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் தெலுங்கு நடிகர்கள், வெங்கடேஷ், நாகார்ஜூனா, டாக்டர் ராஜசேகர், சுமன், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுனா, நாகசைதன்யா, ராம்சரன் தேஜா உள்ளிடட்ட பலர் பங்கேற்கின்றனர்.
நாளை (23–ந்தேதி) காலை மலையாள நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் மம்முட்டி, மோகன்லால், திலீப் பங்கேற்கின்றனர்.
0 comments: