.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 22 August 2013

துணுக்குச் செய்திகள்

துணுக்குச் செய்திகள்

1. மிதக்கும் அரண்மனை!



உலகின் மிகவும் விலை உயர்ந்த, அரண்மனை போன்று தோற்றமளிக்கும் கப்பல் ஒன்று தயாராகி வருகிறது. இந்த கப்பலின் விலை, 5,150 கோடி ரூபாய்.

பிரிட்டன் நாட்டில் துறைமுகம் ஒன்றில் கட்டப்பட்டு வரும் இந்த கப்பல், மொனாக்கோ நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்காக தயாராகி வருகிறது. அவர் பெயரை வெளியிட இந்த கப்பல் கட்டுமான நிறுவனம் மறுத்து விட்டது. 500 அடி நீளமுள்ள இந்த கப்பலுக்கு, "ஸ்டீரீட்ஸ் ஆப் மொனாக்கோ' என, பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்த கப்பலில் ஓட்டல்கள், நீச்சல் குளம், சூதாட்ட விடுதி, கார் ரேசுக்கான தனி பாதை, டென்னிஸ் மைதானம் ஆகியவை உள்ளன.

அரண்மனை போன்று வடிவமைக்கப் பட்டுள்ள இந்த கப்பலை இயக்குவதற்கு, 70 ஊழியர்கள் தேவை. கப்பலை இயக்கு வதற்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.



2. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் செயற்கை மேகம்

           விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தார் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சாவூத் அப்துல் கனி. இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயில் மற்றும் வெப்பத்தை தடுத்து, குளுமையாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகின்றனர்.
 
           இது குறித்து, சாவூத் அப்துல் கனி கூறியதாவது: திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயிலை தடுப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகிறோம். இது, 100 சதவீத கார்போனிக் பொருட்களாலானது. இந்த செயற்கை மேகத்தை, "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்க முடியும். இதனால், நாம் விரும்பும் இடத்தில், இந்த மேகத்தை நகர்த்தி வைத்து கொள்ளலாம். 2022ம் ஆண்டில், தோகா நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, இந்த செயற்கை மேகம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், கடற்கரை, கார் நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தும் விதத்தில், செயற்கை மேகங்களை உருவாக்கி வருகிறோம். இதை, மொபைல் போன்கள் மூலம் இயக்கலாம். இதன் துவக்க விலை, 23 லட்ச ரூபாய். எனினும், இது விற்பனைக்கு வரும் போது, இதன் விலை, கூடவோ, குறையவோ செய்யலாம்.

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

ஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை


ஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை :

 
ஸ்டெதஸ் கோப்பை 'லேனக்"என்ற பிரெஞ்சு டாக்டர் 1816 - ம்ஆண்டில் கண்டறிந்தார். சிறுவர்கள் ஒரு குழாயின் மேல்பகுதியில் ஒலிஎழுப்பி,அதை குழாயின் கீழ்ப்பகுதி மூலம் கேட்டு மகிழ்ந்தார்கள்.இதனை லேனக் பார்த்தபோது , நமது இதயம் மற்றும் நுரையீரல் ஒலிகளை இப்படிக் கேட்க முடியுமா? என்ற யோசனை தோன்றியதாம்.இந்த எண்ணத்துக்குக் கிடைத்த பரிசுதான் ஸ்டெதஸ் கோப் எனும் கருவியாகும்.


டன்லப்புக்கு ஒரு மகன். அவன் தோட்டத்தில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான்.அந்தக் காலத்தில் சைக்கிள்களுக்கு இரும்புச் கக்கரம்தான். இரும்புச் கக்கரம் ஈரத்தரையில் பதிந்து கொண்டு நகர மறுத்தது. மகன் படும்பாட்டை டன்லப் பார்த்தார்.அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றும்ரப்பர் குழாய் கிடைத்தது. அதை எடுத்து வெட்டி, சக்கரங்களில் வைத்து கட்டினார்.இரும்புச் சக்கரம் எளிதாக ஓடியது. இதைப் பார்த்த டன்லப் டயர்களில் சக்கரங்கள் செய்யத்தொடங்கினார்.

தமிழ் கவிதை! ஹைக்கூ கவிதை!

ஹைக்கூ கவிதை

மையின் வேலை
விரலில் கருமை
வாழ்வில் வறுமை
தேர்தல் மை ...

 வர்க்கம்
களத்து நெல் மாடிவீட்டில்
விதை நெல் உலைச்சட்டியில்
பசுமைப் புரட்சி

வயிற்றுப் பசி
மரக்கிளையில் தொட்டில்
களையெடுக்கும் தாய்
தொட்டில் குழந்தை

ஈர நினைவு
மேகத்திலிருந்து மழைத்துளி
துவட்டப்படாத அவள்
கூந்தல்!
 
தொழிற்கல்வி
மூட்டை தூக்கிக் கொள்ள
முன்பயிற்சி
நர்சரிப் பள்ளிகள் ...
 
விண்மீன்
வான ஆடையின்
சலவைக் குறிகளோ
நட்சத்திரங்கள் ...

சந்தோசம்
சரவெடிச் சிரிப்பு
மனைவி முகத்தில்
தீபாவளிப் பட்டு

முதியோர் இல்லம்
ஓயாமல் உழைத்த தந்தை
ஓய்வெடுக்கிறார்
முதியோர் இல்லத்தில்

இரவல் முகங்கள்
சுயத்தைப் புதைத்த
இரவல் முகங்கள்
விரிசல் விழுந்த கண்ணாடி!

விடாது மழையிலும்
புயலுக்குப் பிறகு, சிறுவன்
ஆகாயத்தைத் துடைக்கிறான்.
மேசைகளின் மீதிருந்து!

இன எதிரி
கோடாரியின் கைப்பிடியிலும்
மரம்
இன எதிரி ...

தலைகீழ்
மிதப்பதாக நினைத்து
மூழ்கினான்
குடிகாரன் ...

பழங்களின் நிறங்களும், குணங்களும்...


இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.

பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.சிவப்பு நிறப் பழங்கள்கண்ணைக் கவரும் பழங்கள்தான்

சிவப்பு நிறப் பழங்கள்.

இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள்,பிளம்ஸ்,செவ்வாழை,மாதுளம்பழம்,இலந்தை,செர்ரி,போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

மஞ்சள் நிறப் பழங்கள்

எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும். வாழைப்பழம் - பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும். ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.

பச்சை நிறப் பழங்கள்

பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் போன்றவை அடங்கும் .இப்பழங்கள் காய்கறிகளை ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.

ஆரஞ்சு நிறப் பழங்கள்

மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும்.உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

நீல நிறப் பழங்கள்

நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும். மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும். துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.

மண் நிற பழங்கள்

சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

புலம்பெயர் பொன்மொழிகள்:

புலம்பெயர் பொன்மொழிகள்:

வாங்கியதை வாங்கிய நேரத்தில் வாங்கிவிட்டுகொடுப்பதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுப்பது தான் – கைமாத்து.

வாங்கியதை வாங்கி வேண்டிய நேரத்தில் வாங்கிவிட்டுகொடுப்பதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுக்காமல் விட்டால் அது – ஏமாத்து.

வாங்கியதை வாங்கிவிட்டு, கொடுத்தவன் கேட்டபோது எடுத்ததைஇல்லை என்றால் அது – சுத்துமாத்து.

கையில் பணம் குறைவாக இருப்பவன் விலையை பார்ப்பான்கையில் பணம் அதிகம் இருப்பவன் தரத்தை பார்பான்கையில் பணமே இல்லாதவன் முகட்டை முகட்டை பார்ப்பான்.

நேற்றய நண்பர்கள் இன்றய எதிரிகள்இன்றய நண்பர்கள் நாளைய எதிரிகள்எனவே எமது வாழ்வில் நண்பர்களை விட எதிரிகள் அதிகம்.

நல்ல நட்பை தேடிக்கொள்ள பல வருடம் போதாது.நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்

பென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்!



பென் ட்ரைவ் என்பது இப்பொழுது கணினி   உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருள் இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணினியில் பதியவோ உபயோகபடுத்த படுகிறது. இந்த பென்ட்ரைவ்கள் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணினிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. இதிலிருந்து நம் பென்ட்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்களை கீழே கொடுத்துள்ளேன்.
 
1. USB WRITE PROTECTOR :

 
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்ட்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ட்ரைவ்களை கண்டறிய முடியவில்லை. இந்த மென்பொருள் மிக சிறிய அளவே(190KB) உடையது.

2. USB FIREWALL :

 
பென்ட்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். USBயில் இருந்து கணினிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன் படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும். ஏதேனும்  வைரஸ் உங்கள் கணினியில் புக முயற்சிக்கும் போது இந்த இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. நன்றாக வேலை செய்கிறது.

3. PANDA USB VACCINATION TOOL :

 
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf பைலை முற்றிலுமாக தடைசெய்கிறது. உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கபடுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

 
4. USB GUARDIAN :

 
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான பைலை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.


மேலே கூறிய நான்கு மென்பொருட்களும் உங்கள் பென்ட்ரைவை பாதுகாக்க உதவுகின்றன. தரவிறக்கி கொள்ளுங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

படித்ததில் பிடித்தது!

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.

துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை. தீமையையும் விரட்டுகிறது.

அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம். இரண்டாமவள் ஒரு புதையல்.

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.

பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும், மதிப்பு இல்லாதவை!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே.

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை.

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்...

நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்...

நண்பர்களைப் பற்றிய பல்வேறு பொன்மொழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

• நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

• பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

• எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

• உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

• வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

• உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

• உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

• பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன்

• ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

• புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

• நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.

• பிரச்சினைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.

• புத்தகங்களும், நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:

ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்
ஜாதிபத்திரி - Mace - மெக்
இஞ்சி - Ginger - ஜின்ஜர்
சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்
பூண்டு - Garlic - கார்லிக்
வெங்காயம் - Onion - ஆனியன்
புளி - Tamarind - டாமரிண்ட்
மிளகாய் - Chillies - சில்லிஸ்
மிளகு - Pepper - பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies
பச்சை மிளகாய் - Green chillies
குடை மிளகாய் - Capsicum
கல் உப்பு - Salt - ஸால்ட்
தூள் உப்பு - Table salt
வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ
சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்
கற்கண்டு - Sugar Candy
ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
கிஸ்மிஸ் - Dry Grapes
லவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்
கசகசா - Poppy - பாப்பி
உளுந்து - Black Gram - பிளாக் கிராம்
கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு - Moong Dal
கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்
உழுத்தம் பருப்பு - Urid Dhal
துவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு - Millet - மில்லட்
கேழ்வரகு - Ragi - ராகி
கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்
கோதுமை - Wheat - வீட்
கோதுமை ரவை - Cracked Wheat
சோளம் - Corn
சோளப்பொறி - Popcorn
எள்ளு - Sesame seeds / Gingelly seeds
நெல் - Paddy - பாடி
அரிசி - Rice - ரய்ஸ்
அவல் - Rice flakes
பச்சை அரிசி - Raw Rice
புளுங்கல் அரிசி - Par boiled rice
கடலை மா - Gram Flour
மக்காச்சோளம் - Maize - மெய்ஸ்
வாற்கோதுமை - Barley - பார்லி
பச்சை பட்டாணி - Green peas
சேமியா - Vermicelli
சவ்வரிசி - Sago
ரவை - Semolina
கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
கடுகு - Mustard - முஸ்டார்ட்
சீரகம் - Cumin - குமின்
வெந்தயம் - Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds
பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா
மஞ்சள் - Turmeric - டர்மரிக்
ஓமம் - Ajwain / Ajowan
தனியா - Coriander - கோரியண்டர்
கொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை - Curry Leaves
கஸ்தூரி - Musk - மஸ்க்
குங்குமப்பூ - Saffron - சஃப்ரான்
பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்
கற்பூரம் - Camphor - கேம்ஃபர்
மருதாணி - Henna - ஹென்னா
துளசி - Tulsi
எலுமிச்சை துளசி - Basil
எண்ணெய் - Oil - ஆயில்
கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்
பாமாயில் - Palm Oil
ஆலிவ் ஆயில் - Olive Oil
பால் - Milk - மில்க்
பால்கட்டி - Cheese - ச்சீஸ்
நெய் - Ghee - கீ
வெண்ணெய் - Butter - பட்டர்
தயிர் - Curd/Yoghurt - க்கார்ட்
மோர் - Butter Milk - பட்டர் மில்க்
கீரை - Spinach - ஸ்பீனச்
அவரை - Beans - பீன்ஸ்
கர்பூரவள்ளி - Oregano
நார்த்தங்காய் - Citron - சிட்ரான்
திருநீர்பச்சை - Ocimum-basilicum
சீத்தாப்பழம் - Custard-apple
மாதுளை - Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் - Pumpkin
கருங்காலி மரம் - Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் - Bermuda Grass
வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
புதினா இலை - Mint leaves
வெற்றிலை - Betel leaves
நொச்சி இலை - Vitexnegundo (Chaste Tree)
அத்தி - Fig
கீழாநெல்லி - Phyllanthus nururi
தாழை மரம் - Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை - Purple-fruited pea eggplant
துத்திக்கீரை - Abutilon indicum
பிரமத்தண்டு - Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் - Coccinia grandis
முடக்கத்தான் கீரை - Cardiospermum halicacabum
குப்பைமேனி - Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி - Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை - Aloe Vera
நாவல் பழம் - Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி - Heliotropium
நிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica
நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) - Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் - Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia
அகத்திக்கீரை - Sesbania grandiflora
செண்பகப் பூ - Sonchafa (champa)
சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி - Hibiscus(Shoe Flower)
கரும்பு - Sugar cane
நீர்முள்ளி - Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ - Star Anise
பூவரசு - Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை - Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry
கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் - Guava
மரவள்ளிக் கிழங்கு - Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு - Yam
விளாம் பழம் - Wood apple
முள்ளங்கி - Radish / parsnip
புடலங்காய் - Snake gourd
பாகற்காய் - Bitter gourd
வெண்டைக்காய் - Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை - Peanut
வாழைக்காய் - Ash Plantain
வாழைப்பழம் - Banana
ஊறுகாய் - Pickle
உருளைக் கிழங்கு - Potato
தேங்காய் - Coconut
இளந்தேங்காய் - Tender Coconut
இளநீர் - Tender Coconut water
பதநீர்/பயினி - Neera /Palmyra juice
கள்ளு - Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு - Lime
ஆப்பச் சோடா - Baking Soda
தீப்பெட்டி - Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick

கம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள்...

கம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள்...

கணினி  பயன்படுத்துபவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் விஷயம்  வைரஸ்கள். சில கம்ப்யூட்டர் வைரஸ்களை பற்றி கீழே பார்ப்போம்.   

1.ADWARE:
கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies என்பவையும் இதில் சேரும்.

2. BACKDOOR SANTA:
இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. Alexa மற்றும் Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs சென்று அதனை நீக்கவும்.

3. BHO:
இதனை விரித்தால் Browser Helper Object என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்கும். சில ட்ரோஜன் வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.

4. BLENDED THREAT:
கம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். Nடிட்ஞீச் என்பது இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.

5. BOTNETS:
குழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ ("robot network")போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.

6. BROWSER HIJACKER:
இந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். மீண்டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தை மாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.

7. ADWARE COOKIES:
பொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். Adware Cookies எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.

8. DIALERS:
ஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.
 
9. GRAYWARE:
இது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.
 
10. KEYLOGGERS:
நாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த புரோகிராம்கள் பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.
 
11. MALWARE:
Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம்.

12. STALKING HORSE:
இவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்.

சிறந்த 25 பொன்மொழிகள்!

சிறந்த 25 பொன்மொழிகள்!

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

 2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். 
  
4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான். 

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம். 

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை. 

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது. 

பேஸ்மேக்கர் கண்டுபிடிக்கப்பட்ட கதை:-


   இதயம் இயற்கையாக நின்று போனாலும், தொடர்ந்து சீராக இயங்க வைக்கும் சாதனங்களை இன்றைய மருத்துவ அறிவியல் கொண்டுள்ளது. அவற்றுள் இன்றியமையாதது தவிர்க்க முடியாதது, பேஸ் மேக்கர். சரசரியாக ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது, ஒரு நிமிடத்துக்கு 70 முதல் 100 வரை இருக்க வேண்டும். இதற்கு மேலே போனாலோ அல்லது குறைந்தாலோ ஆபத்து தான். இது போன்ற நிலையற்ற இதயத்துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவியைக் கண்டுபிடித்த கதை சுவாரஸியமானது.

   1952ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த வில்சன் கிரேட்பேட்ச் என்ற பொறியாளர், இதயத் துடிப்புகளைப் பதிவு செய்து மருத்துவருக்கு தெரிவிக்கும் கருவியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். வெற்றிகரமாக ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்த போது, ஒருநாள் தவறான ரெசிஸ்டர் வகையை தனது கருவிக்குள் பொருத்தி, அதை கவனிக்காமல் இயக்கினார். உடனே அவரது கருவி முன்பு போல செயல்படாமல் வித்தியாசமாக செயல்படத் தொடங்கியது. அமைதியாக இருந்து, மீண்டும் துடிப்புகளைப் பதிவு செய்து, மீண்டும் அமைதியாக இருந்து செயல்பட்டது.

     இந்த வித்தியாசத்தால் குழப்பமடைந்த வில்சன் விலங்குகளுக்கும், அதன் பின் மனிதர்களுக்கும் இந்த கருவியை வைத்து சோதனை செய்தார். சராசரிக்கும் அதிகமாக அல்லது குறைவாக இதயத் துடிப்பைக் கொண்டவர்களின் இதயம், இந்த கருவியின் மூலம் சீராக துடிப்பதைக் கண்டறிந்தார்.

   இதன் பின் பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு, மார்புப் பகுதியில் பொருத்தப்படும் மிகச் சிறிய பேஸ்மேக்கர் கருவி கொண்டுவரப்பட்டது. தற்போது டிஜிட்டல் பேஸ்மேக்கர் கருவி பலரது வாழ்நாளை நீட்டித்துக் கொண்டிருக்கிறது.

பொது அறிவு தகவல் துளிகள்...


  1. சராசரியாக ஒரு கோழி ஆண்டொன்றுக்கு 228 முட்டைகள் இடும்.
  2. ஒரு மனிதனின் பாலினம், வயது மற்றும் மரபை, ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர்.
  3. உலகில் மொத்தமுள்ள விஞ்ஞானிகளில் 50% பேர் ராணுவத் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  4. மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா
  5. இரண்டாம் உலகப் போரில் மிக அதிகளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்த நாடு, ரஷ்யா
  6. விலங்குகள், பறவைகள் இடும் முட்டையின் எடையில் 12 சதவீதத்தை அதன் ஓடுகள் கொண்டிருக்கும்.
  7. மிக அதிக மொழிகளைக் கொண்ட நாடு, பப்புவா நியூ கினியா
  8. தோட்டத்தில் வளரும் மண்புழுக்களின் தலையில் 248 தசைகள் உண்டு
  9. மிக நீளமான எல்லையைக் கொண்ட நாடு, சீனா (22, 143 கி.மீ)
  10. கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு, நெதர்லாநது.
  11. உலகின் விலை உயர்ந்த நகரம் என்ற பெருமையை, டோக்கியோவிடமிருந்து ஹாங்காங் தட்டிப் பறித்துள்ளது.
  12.  உலகிலேயே, பணக்காரர்களின் நகரம் என்றழைக்கப்படும் ஹாங்காங்கில் தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  13.  மின்னல் தாக்குவதால் அதிக சேதங்களை அடிக்கடி சந்திக்கும் பகுதிம் அமெரிக்காவின் ஃபுளோரிடா.
  14. பாலைவனங்களே இல்லாத கண்டம், ஐரோப்பா.
  15. துருப்பிடித்த பின் இரும்பின் எடை மேலும் அதிகரிக்கும்.
  16. உலகிலுள்ள விஞ்ஞானிகளில் 50 சதவீதம் பேர் ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  17. ஒவ்வொரு நாளும், 150 வகையான பூச்சியினங்கள் அழிந்து வருகின்றன. எவ்வளவு குளிரூட்டினாலும், திரவ எரிவாயு உறையாது.
  18. ஈ தனது உணவை உண்ட பின், அதை வெளியே துப்பி விட்டு மீண்டும் உண்ணும்.
  19. தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாக அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது.
  20. தேசியக் கொடியின் உயரத்துக்கு இணையாக, மாநிலத்தின் கொடியும் பறக்கும் ஒரே இடம், அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ்.

ஆங்கில மாதங்கள் பிறந்தது எப்படி?

ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் ஒரு காரண பெயர் சுட்டும் விளக்கம் உள்ளது. அதைப்பற்றி இங்கு கீழே காண்போம். 

ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள்.

பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம்.

மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம் தோன்றியது.

ஏப்ரல்: ஏப்ரலிஸ் என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் தோன்றியது. ஏப்ரலிஸ் என்பதற்கு `புதிய ஆரம்பம்’ என்று பொருள்.

மே: ரோமானிய கடவுளான மெர்குரியின் தாயாரான மேயா (விணீவீணீ) என்ற பெயரில் இருந்து மே வந்தது. மேயா என்றால் செழிப்பிற்கான தேவதை என்று பொருள் சொல்லலாம்.

ஜுன்: ஜுனோ என்ற ரோமானிய இளமைக் கடவுளின் பெயரில் இருந்து ஜுன் வந்தது.

ஜுலை: ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தில் பிறந்ததால் இந்த பெயர் வந்தது.

ஆகஸ்டு: ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீசர் என்பவரை பெருமைப்படுத்த இந்த பெயர் சூட்டப்பட்டது.

செப்டம்பர்: ரோமானிய காலண்டர்படி மார்ச் மாதத்தில்தான் ஆண்டு ஆரம்பமானது. அந்த கணக்குப்படி பார்த்தால் `செப்ட்’ என்றால் ஏழு என்று அர்த்தம். 7-வது மாதமாக இது உள்ளதால் செப்டம்பர் என்று ஆனது.

அக்டோபர்: ரோமானிய கால்ண்டர்படி இது 8-வது மாதம். அக்டோ என்றால் லத்தீனில் 8 என்று அர்த்தம் ஆவதால் அக்டோபர் என்று பெயர் வந்தது.

நவம்பர்: லத்தீன் மொழியில் நவம் என்றால் 9 என்று பொருள். இதனால் இப்பெயர் வந்தது.

டிசம்பர்: ரோமானிய காலண்டர்படி இது 10-வது மாதம். டிசெட் என்றால் லத்தீன் மொழியில் 10 என்று அர்த்தம் ஆகும்.

எளிய அன்றாட வாழ்விற்கான மருத்துவ குறிப்புகள்!

  1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
  2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
  3. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
  4.  வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
  5. கால் தடுமாறி பிசகிவிட்டால் உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
  6. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா? நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா? என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

ஹைக்கூ கவிதைகள்...

தெருவிளக்கு:

மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில் முகம் பார்த்தது
தெருவிளக்கு..

அளவீடு:
நீந்தி நீந்தி சோர்ந்து விட்டது
தொட்டியை அளவெடுக்கிறது
மீன்தொட்டியில் தங்கமீன்!

தேசிய கீதம்:
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்!

மாற்றம்:
வசந்தம்
வேலையின்றிக் கிடக்கிறது
பனைவிசிறி...

உழைப்பு:
விடிய விடிய உழைத்தும்
வியர்வை இல்லை
கடிகார முட்கள்.

நட்சத்திரம்:
யார்சூட மலர்ந்திருக்கின்றன
விண்வெளித் தோட்டத்தில்
நட்சத்திரப் பூக்கள்...

ஏக்கம்:
பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.

பனித்துளி:
பச்சை நாற்றுகளின்
பனித்துளி கண்ணாடிகளில்
வியர்வைபிம்பங்கள்...

மணிக்கூண்டு
கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?


அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும்.

நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும். அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.
 

பிரபலங்களின் பின்புலம்:


உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய பிரபலங்களின் பின்புலம்(பேக்ரவுண்டு) மிகவும் எளிமையாகவும், வறுமையாகவும் இருந்துள்ளது. இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.அதில் சில, 

வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.


பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டடத்தொழிலாளி.

ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.


அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும். பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?  மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் முன்னேற்றத்தையும் தனித்துவத்தையும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

" உழைப்பிற்கான முதற்படி, வெற்றிக்கான ஏணிப்படி"

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top