.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 22 August 2013

தமிழ் கவிதை! ஹைக்கூ கவிதை!

ஹைக்கூ கவிதை

மையின் வேலை
விரலில் கருமை
வாழ்வில் வறுமை
தேர்தல் மை ...

 வர்க்கம்
களத்து நெல் மாடிவீட்டில்
விதை நெல் உலைச்சட்டியில்
பசுமைப் புரட்சி

வயிற்றுப் பசி
மரக்கிளையில் தொட்டில்
களையெடுக்கும் தாய்
தொட்டில் குழந்தை

ஈர நினைவு
மேகத்திலிருந்து மழைத்துளி
துவட்டப்படாத அவள்
கூந்தல்!
 
தொழிற்கல்வி
மூட்டை தூக்கிக் கொள்ள
முன்பயிற்சி
நர்சரிப் பள்ளிகள் ...
 
விண்மீன்
வான ஆடையின்
சலவைக் குறிகளோ
நட்சத்திரங்கள் ...

சந்தோசம்
சரவெடிச் சிரிப்பு
மனைவி முகத்தில்
தீபாவளிப் பட்டு

முதியோர் இல்லம்
ஓயாமல் உழைத்த தந்தை
ஓய்வெடுக்கிறார்
முதியோர் இல்லத்தில்

இரவல் முகங்கள்
சுயத்தைப் புதைத்த
இரவல் முகங்கள்
விரிசல் விழுந்த கண்ணாடி!

விடாது மழையிலும்
புயலுக்குப் பிறகு, சிறுவன்
ஆகாயத்தைத் துடைக்கிறான்.
மேசைகளின் மீதிருந்து!

இன எதிரி
கோடாரியின் கைப்பிடியிலும்
மரம்
இன எதிரி ...

தலைகீழ்
மிதப்பதாக நினைத்து
மூழ்கினான்
குடிகாரன் ...

2 comments:

sivaraman said...

அருமையான வரிகள்
என் கவிதை, கதை படிக்க
www.sisuworld.org

V.Nadarajan said...

யாருங்க நீங்க என்னுடைய ஒரு பதிவு விடாம அப்படியே காப்பி பண்ணி போஸ்ட் போடறீங்க...

அதுவும் ஒரு பதிவு விடாம?


ஏங்க எழுத்துரு வண்ணம் (font கலர்) மாத்தியாவது பதிவிடுங்க... ஹி ஹி,,,,


http://vienarcud.blogspot.com/

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top