.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 14 December 2013

காதல் மனைவியைப் பிரிகிறார் ஹ்ரித்திக் ரோஷன்!

பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஹ்ரித்திக் ரோஷன் தன் காதல் மனைவியிடம் இருந்து பிரிகிறார். இது ஹ்ரித்திக் மனைவி சுசன்னேவின் விருப்பமாம்.நடிகர் சஞ்சய்கானின் மகள் சுசன்னே மீது காதல் பற்றிக் கொள்ளவே, கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ல் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.  இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்.''எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னை விட்டுப் பிரிய அவர்(சுசன்னே) தீர்மானித்துவிட்டார், இது எனது குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனால் என்  ரசிகர்கள் துவண்டுபோய் விடக் கூடாது. இதிலிருந்து நான் மீண்டுவர தொடர்ந்து...

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?

ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்து விடுகிறது.இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற்காலிகமானவையே தவிர, நிரந்தரமானவை அல்ல.இவ்வாறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் வேறு விதமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.எனவே நிரந்தரமான தீர்வைப்பெற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.தேன்:...

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி!

பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் ...என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது .உதாரணத்திற்கு நான் இந்த பள்ளியில் இந்த ஆண்டு படித்தேன், என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் எடுத்து வரிசையாக எழுதுங்கள். அதன் நடுவே மானே தேனே பொன்மானே போடுவது போல சில எழுத்துக்களை பெரிய எழுத்தாக எழுதுங்கள். எண்கள் வருவது போல பார்த்துக்கொள்ளுங்கள்:. இப்போது கிட்டத்தட்ட 15-16 எழுத்துக்களைல்...

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி!

 எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா?இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் பல சாப்ட்வேர்கள் , அவற்றை இன்ஸ்டால் செய்யும் போது கூடவே தேவையில்லாத வேறு சில சாப்ட்வேர் துண்டுகள் அல்லது நீட்டிப்புகளையும் சேர்த்தே நிறுவுகின்றன. இந்த அழையா...

ஆன்லைனில் படம் காட்டலாம்; புதிய இணையதளம்.!

லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க்க லைவ்.பிக்ஸ்.இயோ சேவையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடிப்படையில் புகைப்பட பகிர்வு சேவையான இந்த தளம் இணையம் வழி புகைப்படங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. புகைப்பட பகிர்வு சேவை தான் ஏற்கனவே நிறைய இருக்கின்றனவே என்று அலுத்துக்கொள்ளும் முன் கவனிக்க, இந்த சேவை புகைப்பட பகிர்வில் புதுமையை கொண்டு வந்திருக்கிறது .எல்லா புகைப்பட பகிர்வு சேவை போலவே ,இதிலும் முதலில் பகிரவேண்டிய புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம் என்பதைவிட புகைப்படங்களை பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும். உடனே உங்கள் புகைப்பட்டத்துக்கான இணைய முகவரி...

Xolo Opus Q1000 பேப்லட் ரூ.9,999 விலையில் ஆன்லைனில் கிடைக்கும்!

Xolo- வின் சமீபத்திய பேப்லட்டானா, Opus Q1000, இந்திய சந்தையில் இப்போது கிடைக்கிறது. Xolo Opus Q1000 இ-காமர்ஸ் இணையதளத்தில் ப்ரீ ஆர்டர்கள் மூலம் ரூ.9,999 விலையில் கிடைக்கும். Xolo Opus Q1000 ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் பேப்லட் ஆகும். அது 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே. பேப்லட்டில் ரேம் 1GB உடன் 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு எல்இடி ப்ளாஷ் இணைந்துள்ள 5 மெகாபிக்சல் Autofocus பின் கேமரா உள்ளது, மேலும் ஒரு VGA முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. Xolo Opus Q1000 microSD அட்டை உதவியுடன் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய...

லெனோவா S650, லெனோவா S930 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

லெனோவா அதன் S தொடரை விரிவுபடுத்தி புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களான, லெனோவா S650 மற்றும் லெனோவா S930 அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் புதிய S தொடர் ஸ்மார்ட்போன்கள் அறிவித்துள்ளனர், மற்றும் இந்த புதிய போன்களின் விலையும் வெளிப்படுத்தியுள்ளனர். லெனோவா S650 மற்றும் லெனோவா S930 ஸ்மார்ட்போன்கள்  உலகளவில் கிடைப்பது பற்றி விரிவாக கொடுக்கப்படவில்லை. லெனோவா S650 11.990 ரஷியன் ரூபிள் (சுமார் ரூ 22,600) கிடைக்கும், லெனோவா S930 13990 ரஷியன் ரூபிள் (ரூ. 26,500 தோராயமாக) கிடைக்கும். லெனோவா S650:ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்கும் மற்றும் ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் சாதனம் ஆகும். இது 4.7இன்ச் qHD (540x960) டிஸ்ப்ளே வருகிறது....

வீரம் படத்தின் இசை டிச.20 இல் வெளியீடு!

தல அஜீத்தின் பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 10 ஆம் வெளியாகும் வீரம் படத்தின் இசை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிப்பில்  சிவா இயக்கியுள்ள பிரமாண்டம்மாண படம் வீரம். தல ரசிகர்களை கவரும் வண்ணம் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பபில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் ஜுங்கலீ மியூசிக் நிறுவனம், படத்தின் இசையை வெளியிட உள்ளது. அஜீத்துடன், தமன்னா, நாசர், அதுல் குல்கர்னி, ரமேஷ்...

இசையில் சர்வதேசத்தையும் அதிர வைக்கும் மானாமதுரை கடம்!

இசையால் வசமானவர்கள், அதை மீட்டும் கலைஞரைப் பாராட்டுவார்கள். இசையை இழையோடவிட்ட இசைக் கருவியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் முதல்முறை யாக, இசைக்கருவி தயாரிக்கும் கலைஞர் ஒருவருக்கு விருது அறிவித்து கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சங்கீத நாடக அகடமி, 60 ஆண்டுகளை கண்ட அமைப்பு. ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்க ளுக்கு புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்து வரும் இந்த அமைப்பு, முதல்முறையாக இந்த ஆண்டு, கடம் தயாரிக்கும் கலைஞரான மானா மதுரை மீனாட்சி அம்மாளுக்கு புரஸ்கார் விருதை அறிவித்திருக்கிறது. கலக்கும் கடம்  மண்பாண்டத் தொழிலுக்கு பேர் போன மானாமதுரையில் கடம் தயாரிக்கும் தொழிலில்...

டிசம்பர் 15 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்!

தேதி : 15 Dec 2013 திரையரங்கம் : WOODLANDS 11:00 am : A Long And Happy Life ரஷ்யாவின் சிறிய கிராமம் ஒன்றில் வசிப்பவன் சாஷ்சா. அவனுக்கு கொஞ்சம் நிலம்.. கொஞ்ச ஒரு காதலி. இப்படி மிக எளிமையாகக் கழிகிற அவன் வாழ்க்கையில் திடீரென புயல். அரசாங்கம் அவன் நிலத்தைப் பறித்துக் கொள்கிறது. சாஷ்சாவுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. வேறெங்காவது போ.. கூலி வேலை செய் என்று விரட்டுகிறது அரசு, சாஷ்சா தன் நிலத்தை மீட்பதென முடிவெடுக்கிறான். ஒரு அரசாங்கத்தை எதிர்த்து ஒற்றை மனிதனின் போராட்டம். ரஷ்ய சினிமாவில் அன்று புடவ்கின், ஐசன்ஸ்டீன் காலத்தில் கம்யூனிச ஆதரவு பிரச்சாரம். இன்று அதே சினிமாவில் கம்யூனிச எதிர்ப்பு. 2:00 am : Puppy Love மனதின் விசித்திரம்.....

முன்கூட்டியே வெளியாகும் ரம்மி!!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ரம்மி.இந்த படத்தை பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இனிகோ, சூரி ஆகியோரும் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி ஜோடியாக ஐஸ்வர்யாவும், இனிகோ ஜோடியாக காயத்ரியும் நடித்துள்ளனர்.படத்தில் இனிகோவுக்கு விஜயசேதுபதியை விட முக்கியமான வேடம் என்கிறார்கள். சமீபத்தில் ரம்மி படத்தின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த விஜய் சேதுபதி மிகவும் திருப்தியடைந்தாராம். என்னுடன் நடித்துள்ள இனிகோ, சூரி ஆகிய இருவருமே நல்ல ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள்.அதனால், எங்கள் மூவர் கூட்டணிக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி காத்திருக்கிறது என்று...

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.7.தன் தங்கைக்கு தான் இன்னொரு...

ஜி மெயில் தரும் வசதிகள்...!

நாம் தினசரி பயன்படுத்தும் மெயிலான ஜி மெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது. நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல, தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன. எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின்...

மனம் மாறிய ஹீரோ!

சொந்த படம் தயாரிக்க பயந்த ஹீரோ, சினிமா அனுபவம் இல்லாதவர் படம் தயாரிப்பதை பார்த்து மனம் மாறினார். ராமன் அப்துல்லா, சூரி, வாணி மஹால், ஆச்சார்யா போன்ற படங்களில் நடித்திருப்பவர் விக்னேஷ். தற்போது புவனக்காடு படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமாவில் ரீ என்ட்ரிக்காக காத்திருந்தேன். அப்போது வி.எம்.மோகன் என்பவர் என்னை சந்தித்து புவனக்காடு படத்தில் நடிக்க கேட்டார். கதை கேட்டேன் பிடித்திருந்தது. யாரிடம் உதவி இயக்குனராக இருந்தீர்கள் என்றேன். யாரிடமும் உதவி இயக்குனராக இருந்ததில்லை, சினிமாவுக்கு நான் புதியவன் என்றார். முன்னதாக சொந்த படம் தயாரிக்க வேண்டும் என்று நான் எண்ணியபோது பயமாக இருந்தது. சினிமாவில் சம்பாதித்ததை அதிலேயே விட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். பிறகு, சினிமா பற்றியே தெரியாதவர் சினிமா தயாரிக்க முன்வந்திருக்கிறாரே என்று எண்ணியபோது நானும் மாறினேன். பூனை புலியாகிறது...

திருடவேண்டிய டாப் 10 சீனா படங்கள்!

ம்ஹும். அவ்வளவு சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். உலக நாடுகளின் மக்கள் தொகையில் எப்படி சீனா நம்பர் ஒன்னோ அதே போல் திரைத்துறையில் ஹாலிவுட்டுக்கு அடுத்தபடியாக சீனப் படங்களுக்கே உலகளவில் மார்க்கெட் இருக்கிறது. சீனா என்றால் வெறும் சீனா மட்டுமல்ல, ஹாங்காங்கையும் சேர்த்து தான்.இந்தப் படங்கள் நமக்கு புதியதும் அல்ல. இன்று சன் டி.வி. நீங்கலாக மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான ஹாலிவுட்(!) டப்பிங் படங்கள், சீனப் படங்கள்தான். ஆக்ஷன்தான் இந்தப் படங்களின் அடிநாதம். குறிப்பாக மார்ஷியல் ஆர்ட்ஸை இவர்கள் அளவுக்கு படங்களிலும், காட்சிகளிலும் பயன்படுத்துபவர்கள் வேறு யாருமே அல்ல. அதனால்தான் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் கூட சீன ஸ்டண்ட் மாஸ்டர்களை வைத்தே...

விழா இல்லாமல் ஜில்லா ஆடியோ வெளியிட விஜய் முடிவு!

ஜில்லா பட ஆடியோவை விழா எதுவும் இல்லாமல் நேரடியாக வெளியிட முடிவு செய்திருக்கிறார் விஜய். துப்பாக்கி, தலைவா படங்களையடுத்து விஜய் நடிக்கும் படம் ஜில்லா. காஜல் அகர்வால் ஹீரோயின். விஜய் தந்தையாக மோகன்லால் நடிக்கிறார். டி.இமான் இசை. ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இப்படம் பொங்கல் தினத்தையொட்டி வரும் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியிட விழாக்கள் நடத்தப்படும். இப்படத்தை பொறுத்தவரை பாடல் வெளியீடு என்பது மிக எளிமையாக நடந்தால் போதும் என்று விஜய் கேட்டுக்கொண்டார். இதையடுத்து தயாரிப்பாளர் சவுத்ரி விழா ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. வரும் 22ம்தேதி தமிழ்நாடு முழுவதும்...

மசால் தோசை - சமையல்!

தேவையானவை: தோசை மாவு - 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு - 3, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 கப். துவையலுக்கு: தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, உப்பு, இஞ்சி - ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு - 2 பல். செய்முறை:  ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக...

உடல் எடையை குறைக்க உதவும் 10 உணவுகள்!

உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது. வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன.ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிப்பதாகும். உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன் எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க ஒரு உடனடி சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும்...

தடைகளே ஓடி வா!

1.எங்கு தடைகள் உள்ளதோ அந்த இடத்தில் தான் நாம் அடைய வேண்டிய இலக்கு இருக்கின்றது என்று தெரியுமா?.வாழ்க்கையின் பல கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளை நாம் கடந்து வர வேண்டியுள்ளது,நாம் ஒன்றை நடக்கும் என்று எதிர்பார்ப்பது அங்கு நடக்கவில்லை என்றால் அங்கு தடை உள்ளது.தடைகளை கண்டு அணைவரும் கொஞ்சம் கலங்குவது நிஜம்.அந்த தடைகளை எப்படி எதிர் நோக்குவது?2.தடைகள் என்று நாம் நினைக்கும் எந்த விசயமும் மோசமானதல்ல,தடைகள் தான் வாழ்க்கை,அந்த தடைகளை நாம் எதி நோக்கவில்லை என்றால் வாழ மறுக்கின்றோம் என்றுதான் பொருள்.நமது வாழ்க்கையை நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோம் என்றால் எந்தெந்த காலகட்டங்கள் எல்லாம் நாம் கடினமானது என்று அதனை எதிர் நோக்கியிருந்தோமோ, அந்த கால கட்டங்கள் மட்டும் தான் நம் நினைவில் இருக்கும் .3.நாம் இன்பமான காலங்கள் என்று நினைத்த கால கட்டங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் மறந்து போகும் .வாழ்க்கை என்பது அனுபவங்களின்...

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல!

பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.நோர்மா ஜீன் பேக்கர் என்ற இளம்பெண் மாடலாகும் கனவுடன்...

ஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள்!

அறிவுரை வழங்க அறிவு தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அறிவுரை வழங்க தங்களுக்கு முழுத் தகுதியும் இருப்பதாகத் தான் பெரும்பாலானோரும் நம்புகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே விவரமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய சாதனைகள் செய்து காட்டியவர், மிக வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவர், மற்றவர்கள் எட்டாத உயரங்களுக்கு சென்று காட்டியவர் அறிவுரை வழங்குவாரேயானால் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் கோடி பெறும்; வெற்றிக்கு வழி காட்டும்; எத்தனையோ அனுபவங்களுக்கு ஈடாகும். அது போன்ற அறிவுரைகளைக் கேட்டு கடைப்பிடிக்க எந்த ஒரு புத்திசாலியும் தவறி விடக் கூடாது.ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதர் அப்படிப்பட்ட வெற்றிகரமான மனிதர். இன்று நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர்களின் உருவாக்கத்திற்கு...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top