.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 14 December 2013

தன்னில் எது சமூக மாற்றம் ? கவிதை!




தன்னில் எது சமூக மாற்றம் ?

தேவைக்கு அதிகமாய்
 எதையும்
 சேர்க்காமல் இருப்பது.


வீட்டில் எது சமூக மாற்றம் ?
அவரவர் வீட்டுக்குப்பையை
 அடுத்தவீட்டு வாசலுக்கு
 தள்ளாதிருப்பது.


வீதியில் எது சமூக மாற்றம் ?
மற்றவர் வைத்த
 மரங்களெனினும்
 பற்றுவைத்து பராமரிப்பது.


சாலையில் எது சமூக மாற்றம் ?
பின்னே ஒலி எழுப்பும்
 வாகனத்திற்கு
 முன்னே செல்ல வழிவிடுவது.


ஊரில் எது சமூக மாற்றம் ?
இன்னொரு இனத்தின்
 இழவிற்கு
 கண்ணீரோடு கலந்துகொள்வது.


மாநிலத்தில் எது சமூக மாற்றம் ?
வீணாய் கடல்சேரும் முன்
 தானாய் மனமுவந்து
 தண்ணீரை திறந்துவிடுவது.


நாட்டில் எது சமூக மாற்றம் ?
மரபணுக்களில் ஊறிப்போன
 ஊழல் தொற்றை
 அறவோடு அழிப்பது.


உலகில் எது சமூக மாற்றம் ?
உரிமைக்காக போராடும்
 உணர்வாளர்களுக்கு
 உண்மையாக குரல்கொடுப்பது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top