அரசு விரைவில், உத்தியோகபூர்வமான தகவல் தொடர்புக்கு கூகுளின் ஜீமெயில் பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சைபர் வேவு பரந்த முறையில் வெளிப்படுத்துதல்களுக்குப் பிறகு இரகசியமாக அரசாங்க தகவல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் அரசாங்க சர்வர்களான ஜீமெயில் போன்ற மின்னஞ்சல் சேவை வழங்குபவர்களை தடுக்க கிட்டத்தட்ட 5 லட்சம் பணியாளர்களுக்கு அறிவிப்பை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக, இந்தியாவின் தேசிய தகவலியல் மையம் மூலம் மின்னஞ்சல் சேவை வழங்கப்படும்...
Friday, 30 August 2013
+2 முடித்தவர்களுக்கு ஸ்டெனோகிராபர் பணி வாய்ப்பு!
சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆண், பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி சப்-இன்ஸ்பெக்டர்(ஸ்டெனோ)காலியிடங்கள்: 112
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கவும், அதை கணினியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் நகலெடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்து பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்...
இரத்த பரிசோதனை மூலம் தற்கொலை முயற்சியை கண்டறிய முடியும்!
சமீப காலமாக உலகம் முழுவதும், ஒரு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்துகொள்கின்றனர். இரத்த பரிசோதனை செய்வது மூலம் ஒரு சில மரபணுகளையும் அதிலுள்ள வெளிப்பாடுகளையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், இந்த பரிசோதனை மூலம் மிகவும் துல்லியமாக தற்கொலை முயற்சி ஆபத்தில் இருக்கும் நபர்களை அடையாளம் காட்டுகிறது.
தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் நபர் எப்பொழுதும் அவருடைய எண்ணங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார். இதனால் தற்கொலை ஆபத்து ஏற்படும் மாற்றங்கள் கண்டறிந்து மரணத்தை தடுப்பதற்கு ஒரு நம்பிக்கையான ‘கருவியாக’ உள்ளது.
மருத்துவம் இந்தியானா பல்கலைக்கழகம் பள்ளி பேராசிரியர் அலெக்சாண்டர் நிகுலெஸ்சு தலைமையிலான ஒரு குழு, இண்டியானாபோலிஸ்...
சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது – ஆய்வில் தகவல்!
தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்த காலை உணவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரு நகரங்களில் சாப்பிடப்படும் காலை உணவுடன் ஒப்பிடுகையில் சென்னையின் இட்லி, சாம்பார் தான் அதிக சத்துக்கள் நிறைந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய காலைநேர உணவு பழக்கம் குறித்து மும்பை, டில்லி, கோல்கட்டா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 8 முதல் 40 வயது வரையிலான சுமார் 3600 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் உடலில் நிறைந்துள்ள சத்துக்களின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கார்போஹைட்ரோட், ஆற்றல், புரோட்டீன், கொழுப்புக்கள், கால்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு...
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் சொன்ன குட்டி கதைகள்! .
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற திருமணங்களை நடத்தி வைத்து ஆற்றிய சிறப்புரையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார்.
”அறநெறிப்படி வாழ்பவர் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம். சாதகம், பாதகம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் துன்பங்களே வரக் கூடாது என்று நினைப்பது கோழைத்தனம்.
துன்பங்களை எதிர்கொண்டு அவற்றை வெல்வது தான் வாழ்வின் சுவை. இருட்டு இருந்தால் தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல், துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால் தான், அதன் முழுப்...
உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கார் தயாரிப்பு குழுவில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி இளம்பெண்!
:உலகின் அதிவேக சூப்பர்சோனிக் கார் தயாரிப்பு குழுவில் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் இடம் பெற்றுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பெவர்லி சிங் (29). தென் ஆப்ரிக்காவில் தயாராகும் ப்ளட்ஹான்ட் சூப்பர்சானிக் கார் எனப்படும் உலகிலேயே அதிவேக கார் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிஸ்டல் அருகில் உலகின் மிகச் சிறந்த சுமார் 30 பொறியியல் வல்லுநர்கள் அடங்கிய குழு, சூப்பர்சானிக் கார் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மணிக்கு 1,220 கி.மீ என்ற வேகத்தில் செல்லும் கார்தான் இதுவரை உலக சாதனையாக உள்ளது. தற்போது ராக்கெட் இன்ஜின் பொருத்தப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வரும் சூப்பர்சானிக் கார்...
கண்ணாடியின் கதை!
சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான்.
அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான்.
கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள்.பன்னிரண்டாம்...
பக்கவாதத்தை தடுக்கும் சாக்லேட் (Chocolate)
தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால், சாக்லேட்டுக்கள் உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவை முளையை பக்கவாதம் தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை காரணம் காட்டி யாரும் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டுவிடக்கூடாது என்று ஆய்வாளர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான...
நரைமுடியை கருப்பாக்க புதுமருந்து!
வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது.
பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை...
கணனியால் அழிக்க முடியாது என்ற File ஐ எவ்வாறு Delete செய்வது
ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம்செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு...
டிவிட்டர் அச்சு இயந்திரம்.
டிவிட்டர் அச்சு இயந்திரம்.
டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இணைய யுகத்தில் தேவை இல்லாமல் போய்விட்ட மற்றொரு தொழில்நுட்பமான தந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டவை இவை.அந்த காலத்தில் பங்கு சந்தை நிலவரத்தை அச்சிட இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
பங்குகளின் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்வது இன்று ஒரு விஷயமே இல்லை. டிவி,டெஸ்க்டாப்,ஸ்மார்ட்...
பேஸ்புக் மூலம் வேலை தேடுவது எப்படி?
பேஸ்புக் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளலாம்.நண்பர்களோடு தொடர்பு கொள்ளலாம்.புகைப்படங்களையும்,சமீபத்தில் பார்த்த திரைப்படம் பற்றிய விமர்சனத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.இன்னும் பலவிதங்களில் இந்த சமுக வலைப்பின்னல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவை எல்லாம் தெரிந்தது தான்.
பேஸ்புக் சேவையை வேலை வாய்ப்புக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் தெரியுமா? ஆம், பேஸ்புக் நட்பு வளர்கவும் ஊர் வம்பு பகிர்ந்து கொள்வதற்கான இடம் மட்டும் அல்ல: அதை பலவிதங்களில் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.வேலைக்கு வலை வீசவும் தான்!.புதிய வேலை தேடுவதாக இருந்தாலும் சரி ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் வேலையை விட சிறந்த வேலை தேவை என்றாலும் சரி பேஸ்புக் கைகொடுக்கும்.
சரி,பேஸ்புக் மூலம் வேலை வாய்ப்பு தேடுவது எப்படி?
முதல் வழி,மிகவும் எளிதானது.உங்கள் நண்பர்களிடம் கேளுங்கள்.ஆம் நீங்கள் வேலை தேடிக்கொண்டிருப்பதை உங்கள் பேஸ்புக்...
இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி.
வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு.
இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும் எந்த கப்யூட்டர் கில்லாடியையும் உள்ளே விடாமல் தடுப்பது தான் இவற்றின் பணி.
ஆனால் இந்த சாப்ட்வேர்களின் கண்ணில் மண்ணை...