.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 10 October 2013

வியாழனை விட எட்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு!

பால்வெளியில் வியாழனை விடவும் மிகப் பெரிய கோள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். பால்வெளி அண்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் குறித்தும், கோள்கள் உருவான விதம் குறித்தும் விண்வெளி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அத்துடன் வானவெளியில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து இவர்கள் தகவல் தெரிவிப்பது வழக்கம். வால் நட்சத்திரங்களின் தோற்றம், அவற்றின் பயணம் போன்ற பல தகவல்களை ஆய்வாளர்கள் தந்துள்ளனர். வானவெளியில் கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதன் முதலாக கடந்த 2011ம் ஆண்டு புளூட்டோவுக்கு அப்பால் ஒரு கோள் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து இதைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோது, ஜப்பான், நியூசிலாந்து, போலந்து மற்றும் இஸ்ரேல் போன்ற...

டெக்ஸ்டாப் கணனிகளுக்கான யூடியூப் அப்பிளிக்கேஷன்!

இணைய உலாவிகளைப் பயன்படுத்தாது டெக்ஸ்டாப் கணனிகளில் யூடியூப் வீடியோக்களை பார்வையிடுவதற்கு Minitube எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரையறையற்ற வீடியோக்களை பார்வையிடும் வசதியைக் கொண்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் மூலம் புதிய முறையில் வீடியோக்களை பார்வையிடக்கூடியதாகவும் காணப்படுகின்றது.  அத்துடன் பார்வையிட வேண்டிய வீடியோக்களுக்கான சொற்களை டைப் செய்வதன் மூலம் விரைவாக வீடியோக்களை பெறக்கூடியதாகவும் இருக்கின்றது.  இதன் உதவியுடன் 1080p வரையான HD வீடியோக்களை பார்வையிட முடியும்.  தரவிறக்கச் சுட்டி Windows Mac OS ...

50 விதமான மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம்!

வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய...

தமிழர்கள் வரலாறு ! - காவிரிப்பூம்பட்டினம்!

                                                         காவிரிப்பூம்பட்டினம் தமிழகத்தில் 99 % ஊர்களின் பெயர் காரனப்பெயராகவே அமைந்துள்ளது அதன் படியே சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் 'புகார்' என்றும், 'பூம்புகார்' என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும் கடற்கரை நகரத்தைப் பட்டினமென அழைப்பது பழந்தமிழ் வழக்கு. காவிரியின் கழிமுகத்தில் உருவான நகரமென்பதால் 'காவிரிப்பூம்பட்டினமென்றும்'...

லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு!

  உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் மூடப்பட்டது - அண்மையில் இந்தச் செய்தியை நாளிதழ்களில் பார்த்தபோது நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வலி! பேப்பரை சுருட்டி கேன்ட் பாரில் செருகிக் கொண்டு, சைக்கிள் மிதித்து டைப் கிளாஸிற்கு சென்ற காலத்தை மறக்க முடியுமா? டைப் செட்டானதோ இல்லையோ தோழர்கள் பலபேருக்கு அந்தக் காலத்தில் லைஃப் செட்டானது இங்குதானே !  ஹென்றி மில் 1714-ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார். அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் டைப்ரைட்டருக்கு மூன்றாவது செஞ்சுரி முடிகிறது. நொடிக்கு நொடி நவீனமயம் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 300 ஆண்டுகள் ஒரு இயந்திரம் தாக்குப்பிடித்திருக்கிறது என்றால் அதற்காக ஒரு விழாவே கொண்டாடலாம்....

சஸ்பென்ட் செய்த கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற மாணவர்கள் – தூத்துக்குடி பயங்கரம்!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலுள்ள இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் அக்கல்லூரி மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டார். கல்லூரியிலிருந்து சஸ்பென்ட் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முதல்வர் சுரேஷை படுகொலை செய்துள்ளனர்.   திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 16 கி.மீட்டர் தொலைவில் வல்லநாடு கிராமம் உள்ளது. இங்கு இன்ப்ன்ட் ஜீசஸ் என்ற பொறியியல் கல்லூரி உள்ளது.. இங்கு சுமார் 2 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு 9 மணியளவில் முதல்வர் சுரேஷ் காரில் வந்து இறங்கினார். இந்நேரத்தில் தயாராக இருந்த 3 பேர் கொண்ட மாணவ கும்பல் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால்...

கூகுளில் இனி குற்றவாளிகளின் புகைப்படம் இருக்காது!

இதுவரை கூகுள் தேடுதலில் கிடைக்காத படங்களே இல்லை என்ற நிலையில் தற்போது குற்றவாளிகளின் புகைப்படங்களை தனது தேடுதளத்தில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பொதுவாக் குற்றவாளிகள் தங்களது கைகளில் தன்னை பற்றிய குறிப்புகள் அடங்கிய பலகையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மக் ஷாட் எனப்படுகின்றன. இவற்றை தனது தேடுதளத்தில் இருந்து நீக்குவதால் குற்றவாளிகள் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பாக இருக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.   இதற்கிடையில் “சட்ட அமலாக்க கழகங்களின் உதவியுடன் இது போன்ற மக் ஷாட் புகைப்படங்களை பெற்று அவற்றை பொது மக்கள் பார்க்கும் வகையில் வெளியிடுவதற்கு என பல்வேறு வலைதளங்கள் உள்ளன. இதனை பொது சேவையாகவே...

சோள ரொட்டி - சமையல்!

என்னென்ன தேவை? மக்காச்சோள மாவு - 2 கப், கோதுமை மாவு - அரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது?   சோள மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அத்துடன் நெய், உப்பு, மல்லித்தழை சேர்த்து சற்று இளம் சூடான தண்ணீர்  கொண்டு நன்கு பிசைந்து சிறிது நேரம் வைத்தபின் கனமான ரொட்டிகளாக திரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுங்கள். பிரமாதமான  உணவு இது. ருசியும் கூட. பஞ்சாப் ஸ்பெஷல் இது. இதற்கு தால் மக்கானி மற்றும் ஒரு காரமான சப்ஜி நல்ல சைட் டிஷ். குறிப்பு:   மஞ்சள் சோள மாவு பெரிய கடைகளில் கிடைக்கும். காய்ந்த மக்கா சோளத்தை மாவு மில்லிலும்...

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் பிரச்சனை!

ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்னை மிகவும் சகஜம். இது 2வது, 3வது மாதத்தில் தொடங்கி, 8வது மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி (pregnancy gingivitis)   என்று பெயர். ஈறுகளில் வீக்கம், சிவந்து, ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரிதான்  இதுவும். கவனிக்கப்படா விட்டால், பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளை பாதித்து, திசு இழப்புக்கு வித்திடும். அரிதாக சில நேரங்களில் வீங்கிய ஈறு திசுக்களானது, அந்த இடத்தில் கட்டிகளைப் போன்று உருவாக்கலாம். அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால் பயப்படத் தேவையில்லை. அந்தக் கட்டிகள் வலியின்றி இருக்கும்....

ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது!

எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இன்னும் கருத்தடை ஆபரேஷன் செய்துகொள்ளவில்லை. ‘‘இந்தக் காலத்தில் ஆபரேஷன் என்றெல்லாம்  கஷ்டப்பட வேண்டாம். பிளாஸ்திரி போல ஒரு ஒரு சின்ன பேட்ஜ்... அதைத் தோளில் ஒட்டிக் கொண்டாலே கருத்தரிக்காது. விசாரித்துப் பார்’’  என்கிறாள் என் தோழி. இது உண்மையா? பதில் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் செந்தாமரைச் செல்வி  கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றை விட ஒன்று எளிமையாகவும்,  பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நோக்கம். அந்த வகையில் இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை முறைதான் தாங்கள்  அறிந்த அந்த பேட்ஜ். ‘ஹார்மோன் பேட்ஜ்’ என அழைக்கப்படுகின்ற இவற்றை...

HTC டிசயர் 500 ரூ.21.490 விலை-க்கு இந்தியாவில் அறிமுகம்!

HTC நிறுவனம் அதன் டிசயர் 500 ஸ்மார்ட்போன் ரூ 21.490 விலை-க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சாதனத்தில் இரட்டை சிம் ஆதரவுடன் கிடைக்கும். HTC டிசயர் 500 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: 1.2GHz Quad-core செயலி, 4.3 இன்ச் காட்சி, 8MP முதன்மை கேமரா, 1.6MP முன் எதிர்கொள்ளும் கேமரா, 4GB உள் நினைவகம், 1GB ரேம், ஆடியோ பீட்ஸ், 1,800 Mah பேட்டரி, microSD 64GB வரை ஆதரிக்கும், அண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்) ஓஎஸ் இயங்குகிறது. ...

கூகுள் Chromebooks அக்டோபர் 17 முதல் இந்தியாவில் அறிமுகம்!

கூகுள் நிறுவனம் அக்டோபர் 17 முதல் Chromebooks இந்தியாவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. Chromebooks-இல் மைக்ரோசாப்ட் விண்டோஸ்-க்கு பதிலாக கூகுள் Chrome OS மூலம் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் HP மற்றும் Acer தங்களது Chromebooks விற்பனையை இந்திய சந்தையில் தொடங்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. அக்டோபர் 17 முதல் வாடிக்கையாளர்கள் Acer C720 அல்லது HP Chromebook 14 வாங்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. Acer C720 ரூ.22.999 விலைக்கும் மற்றும் HP Chromebook 14 ரூ.26.990 விலைக்கு கிடைக்கும். விண்டோஸ் உடன் Chrome OS ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அது light மற்றும் web-based சார்ந்த பணிகள் இன்னும் பொருத்தமானதாக இருக்கும்...

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய அல்ட்ரா HD டிவி அறிமுகம்!

சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் அதன் F9000 வரம்பின் கீழ் இந்தியாவில் மூன்று புதிய அல்ட்ரா உயர் வரையறை (Ultra High-Definition) தொலைக்காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த தொலைக்காட்சிகள் நான்கு மடங்கு முழு HD தொலைக்காட்சி தீர்மானம் கொண்டுள்ளன மற்றும் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 85 இன்ச் ஆகிய மூன்று அளவுகளில் வந்துள்ளது. இந்நிறுவனம் 55 இன்ச் தொலைக்காட்சி ரூ.3.29 லட்சமும் மற்றும் 65 இன்ச் தொலைக்காட்சி ரூ.4,39 லட்சமும், 85 இன்ச் மாடல் ரூ.28 லட்சத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சாம்சங் புதிய F9000 UHD தொலைக்காட்சிகளில் துல்லிய பிளாக் புரோ தொழில்நுட்பம் மற்றும் மைக்ரோ அல்டிமேட் டிம்மிங்கால் அம்சம் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய சாம்சங்...

தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாறு !

தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது. கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது.முற்கால, பிற்கால தமிழ் இலக்கியத்தின் மாபெரும்...

ஆப்பிள் ஐபோன் 5s மற்றும் ஐபோன் 5c நவம்பர் 1 முதல் இந்தியாவில் அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5s மற்றும் ஐபோன் 5c நவம்பர் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது என்று அறிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 5s மற்றும் ஐபோன் 5c அக்டோபர் 25-க்குள் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.  ஐபோன் 5s ஆப்பிள்-வடிவமைக்கப்பட்டுள்ளது A7 64-bit chip உடன் வருகின்றது. 8 மெகாபிக்சல் iSight கேமரா, ட்ரூ டோன் ஃபிளாஷ் மற்றும் டச் ஐடி கைரேகை சென்சார் உள்ள அனைத்து புதிதாக இருக்கும். ஐபோன் 5c அனைத்தும் புதிய வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது, பல நிறங்கள் மற்றும் பேக்ஸ் இண்டர்னல்ஸ் உடன் வருகின்றது.  இப்போது இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5S மற்றும் ஐபோன்...

செம்மொழி வளர்ச்சியில் ஈடுபட்ட 14 பேருக்கு விருது!

 மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் குடியரசு தலைவரின் செம்மொழி விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் 2009, 10, 2010,11ம் ஆண்டில் செம்மொழி வளர்ச்சியில் ஈடுபட்ட முனைவர்கள் 14 பேருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். 2009,10ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது ஐராவதம் மகாதேவன், அயல்நாட்டு அறிஞருக்கு வழங்கப்படும் குறள் பீட விருது செக் குடியரசை சேர்ந்த  ஐரோஸ்லாவ் வசேக், இளம் அறிஞர் விருதுகள் டி.சுரேஷ் (மதுரை), எஸ்.கல்பனா (அண்ணாமலை நகர்), ஆர்.சந்திரசேகரன் (நாமக்கல்), வாணி அறிவாளன்...

200-வது டெஸ்டுக்குப் பின் ஓய்வு பெறுவதாக சச்சின் அறிவிப்பு!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்டுக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதனால், கடந்த சில மாதங்களாக, கிரிக்கெட் உலகில் நிலவி வந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் பட்டியல்களை மலைக்க வைத்தவரான 40 வயது சச்சின், சமீப காலமாக முழுமையான ஃபார்மில் இல்லை. இந்தச் சூழலில், தனது ஓய்வு முடிவை, பிசிசிஐ-க்குத் தெரிவித்திருக்கிறார். இதனால், 24 ஆண்டுகால அற்புதமான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.  சச்சின் உருக்கம்   "இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது என் வாழ்க்கையின் கனவு. இந்தக் கனவுடன் 24 ஆண்டு...

ஆலிக் மென்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!

2013ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆலிக் மென்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்வீடனில் ஸ்டாக் ஹோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆலிக் மென்ரோ தேர்வு செய்யப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை மாலை தேர்வுக் குழு அறிவித்தது. ...

நாமே முடிவு செய்யவேண்டும். (நீதிக்கதை)!

ராமன் தனது மனைவியுடனும்,அவன் வளர்க்கும் குதிரையுடனும் பக்கத்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். வழியில் அவனது நண்பன் முருகன்...நீயாவது...மனைவியாவது குதிரையில் அமர்ந்து செல்லலாமே என்றான். உடனே ராமன் தன் மனைவியை குதிரையின் மீதேற்றி அழைத்து சென்றான். அப்போது ராமனின் மற்றொரு நண்பன் கணேசன் வந்தான்....ராமா..உன் மனைவியை விட நீ வயதானவன்..ஆகவே நீ குதிரையின் மீதேறிச் செல்லலாமே என்றான்.உடன் மனைவியை குதிரையிலிருந்து இறக்கிவிட்டு விட்டு ராமன் குதிரை மீதேறி அமர்ந்தான். சிறிது தூரம் சென்றதும்..கந்தன் வந்தான்...அவன் ராமனைப் பார்த்து..'குதிரை இரண்டு பேரையுமே சுமக்குமே..இருவரும் குதிரையில் ஏறிச் செல்லலாமே' என்று சொல்ல ராமன் தன் மனைவியையும்...

'மனைவி கட்டிய தாஜ்மஹால்' -சுற்றுலாத்தலங்கள்!

      'மனைவி கட்டிய தாஜ்மஹால்'  'மனைவி கட்டிய தாஜ்மஹால்' காதலும்,கலைரசனையும் மொகலாயர்களின் உணர்வில் ஊறியது போலும். மனைவி மீது கொண்ட காதலால், அவரை அடக்கம் செய்த இடத்தில் பளிங்கு மாளிகை எழுப்பினார் ஷாஜகான். அது, தாஜ்மஹால்.  அன்புக்கணவர் ஹுமாயுன் நினைவாக, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கலையநயமிக்க மாளிகை ஒன்றை எழுப்பினார் ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம். அது, ஹுமாயுன் கல்லறை (Humayun's Tomb). டெல்லியில் கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் ஹுமாயுன் கல்லறைதான் இந்தியாவில் மொகலாயர் கட்டிய கலை ரசனைமிக்க முதல் கட்டடம். ஆம். இது மனைவி கட்டிய தாஜ்மஹால்.   ஹுமாயுன் ...

சந்தேகம் - குட்டிக்கதைகள்!

ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ""இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்'' என்பது போல் சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.அப்போது இறைவன், ""தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்'' என்றார்.உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.ஒருவன், ""நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,'' என்றான்.அடுத்தவன், ""நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,''...

பட்ஜெட், அதிகமாவதால் அனுஷ்கா படம் இரண்டு பாகமாகிறது!

0   0   0     பட்ஜெட், அதிகமாவதால் அனுஷ்கா படம் இரண்டு பாகமாகிறது 10/10/2013 12:22:50 PM பட்ஜெட் எகிறுவதுடன் படத்தின் நீளமும் அதிகமாவதால் அனுஷ்கா நடிக்கும் படம் திடீரென்று 2 பாகமாக உருவாகிறது. நான் ஈ படத்தை இயக்கிய ராஜமவுலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்குகிறார். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார்....

பெயர் மாற்றம் நடிகைகளுக்கு கை கொடுக்கிறதா?

     ராசி, சென்டிமென்ட், நியூமரலாஜி, வாஸ்து போன்ற இன்னும் என்னென்ன இருக்கிறதோ, அவ்வளவும் சினிமா நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இன்றியமையாத விஷயமாகி விட்டது. பெயரை மாற்றியும், தோற்றத்தை மாற்றியும், மூக்கு ஆபரேஷன் செய்தும், எப்படியாவது முன்னணி இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று துடிக்கின்றனர். அந்தவகையில் பல ஹீரோயின்கள் தங்கள் பெயரை இப்போது அதிரடியாக மாற்றி வருகின்றனர். பல படங்களில் நடித்துள்ள சுனேனா, இப்போது அனுஷா என்று மாறியுள்ளார்.  வசுந்தரா, அதிசயா என்ற பெயரில் நடித்தார். ஒர்க்கவுட் ஆகவில்லை. வசுந்தரா கஷ்யப் என்ற பெயரில் நடிக்கிறார்.  அமலா பால், அனகா என்ற பெயரில் சில படங்களில் நடித்தார். ‘மைனா’ அவருக்கு மைலேஜ்...

விஞ்ஞானி பென்சிகர் ராஜன் தகவல் மங்கல்யான் விண்கலம் வரும் 29ல் விண்ணில் ஏவப்படும்!

குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் உலக விண்வெளி வாரவிழா நடைபெற்றது.  விழாவில் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி பென்சிகர் ராஜன் பேசியதாவது,  மங்கல்யான் விண்கலம் வரும் 29ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இது அதன் சுற்றுவட்டப்பாதையை சென்றடைய சுமார் 300 நாட்கள் ஆகும். இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதா? நீர்ப்பரப்பு இருக்கிறதா என  ஆய்வு செய்யும். மீத்தேன் வாயு இருந்தால் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்புண்டு.  இந்தியா அனுப்பியுள்ள ஐஆர்எஸ் என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் காடு, மீன், கனிமவளங்கள் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.  70 நாடுகள் இணைந்து ஐநா சபை...

‘நான் மலாலா’ புத்தகம் விற்பனைக்கு வந்தது!

தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது.தற்போது பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது.   பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச...

வெட்கபட வைக்கும் புள்ளி விவரம்!

உலகிலேயே அதிகக் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பது குறித்து வருத்தம் மட்டுமல்ல வெட்கமும் பட வேண்டும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கும் கீழே 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஏறத்தாழ 5 லட்சம் பேர்! இதில் முதன்மைத் தொழிலாளர்கள் 50.78 லட்சம் பேர். குறுந்தொழிலில் ஈடுபடுவோர் 60.89 லட்சம். அதன்பின் வெளியான் “தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (என்.எஸ்.எஸ்.ஓ.) 2007′ தகவல்படி தொழிலாளர் சந்தையில் 50 லட்சம் குழந்தைகள் தீவிரமாகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது 5-லிருந்து 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில்...

2020-க்கு பிறகு சாக்லேட் சாமான்யர்களுக்கு எட்டாத அரிபொருளாகி விடுமாக்கும்!

கொஞ்சுண்டு சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி அதிகளவில் சாப்பிடுவதால் போதைக்கு அடிமையானவர்களாக மாறவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அதிலும் அதிக அளவு சாக்லேட் சாப்பிடுவதால் போதையில் தள்ளப்படுவர்களாம்! மேலும் அபின் போன்ற போதை மருந்து சாப்பிடுவர் போன்று அடிமையாக மாறி விடுவர்கள் என்று ஒரு அதிர்ச்சி தரும் தகவல் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்லியிருந்தனர்ர்.   அதாவது இயற்கையாவே நம் மூளையினுள் என்கெப்லின் என்ற ரசாயன திரவம் உள்ளது. சாக்லேட் அதிகம் சாப்பிடும் போது என்கெப்லின் திரவம் இரு மடங்காக சுரக்கின்றது. எனவே மூளைக்கு செல்லும் உணர்வு நரம்புகளை பாதித்து செயலிழக்க...

தாம்பத்ய உறவால் விளையும் நன்மைகளின் பட்டியல்!

தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும்,புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட தாம்பத்ய உறவு குறைக்கிறது என்றும் சமீப கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .தற்போது தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றனர. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.   அத்துடன் உடலுறவினால் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள்...

உலக மனநல தினம் – அக்டோபர் 10!

பொதுவாக் மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது.. ஆரோக்கியமான வாழ்வுக்கு,உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம்..உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்..என புள்ளிவிவரம் கூறுகிறது……எனினும்,நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதித்தவர்களாகவே இருக்கிறோம்…   அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது..நீண்டகால சோகம்,வேலையின்மை,ஏமாற்றம்,ஏக்கம்,தொடர்தோல்வி,மதுப்பழக்கம்,பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள்..மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர்..ஆண்டு தோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர்..இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம்..இந்நிலையில்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top