என்னென்ன தேவை?
மக்காச்சோள மாவு - 2 கப்,
கோதுமை மாவு - அரை கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
சோள மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அத்துடன் நெய், உப்பு, மல்லித்தழை சேர்த்து சற்று இளம் சூடான தண்ணீர் கொண்டு நன்கு பிசைந்து சிறிது நேரம் வைத்தபின் கனமான ரொட்டிகளாக திரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுங்கள். பிரமாதமான உணவு இது. ருசியும் கூட. பஞ்சாப் ஸ்பெஷல் இது. இதற்கு தால் மக்கானி மற்றும் ஒரு காரமான சப்ஜி நல்ல சைட் டிஷ்.
குறிப்பு:
மஞ்சள் சோள மாவு பெரிய கடைகளில் கிடைக்கும். காய்ந்த மக்கா சோளத்தை மாவு மில்லிலும் அரைப்பார்கள். இதை மெல்லியதாக விருப்பம்போல் திரட்டலாம்.
0 comments: