.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 16 November 2013

சூர்யா (நடிகர்) - வாழ்க்கை வரலாறு (Biography)

எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர், நடிகர் சூர்யா அவர்கள். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனும், தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக விளங்கிய நடிகை ஜோதிகாவின் கணவரும் ஆவார். மூன்று முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது’, மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது’, நான்கு முறை ‘விஜய் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரே படத்திலேயே மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து சாதனைப் படைத்துள்ளார். இவரது அற்புதமான நடிப்புத்...

மனதைத் தொட்ட வரிகள் !!!

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும். Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!! Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக்...

"இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது!

தலைசிறந்த பொருளாதார நிபுணரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு சிறு சேமிப்புத் திட்ட ஆதரவு விழா, ராஜாஜி ஹாலில் நடைபெற்றது.அந்த விழாவில் பேசிய கலைவாணர், ஒரு சந்தேகத்தை எழுப்பினார். "ஓர் ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி, கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஊருக்குப் போகும்போது வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். கேஷியர் தர வேண்டிய பாக்கியைக் கேட்டு ஒரு மளிகைக் கடைக்காரர் வந்தார். உடனே..., அந்த 100 ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார் கேஷியர்.மளிகைக் கடைக்காரர் அந்த நோட்டை, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குத் தந்தார். மறுநாள் டாக்டர், ஒரு டீ பார்ட்டி வகையில் அந்த ஓட்டலுக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, அதே நோட்டை ஓட்டலுக்குக் கொடுத்து அனுப்பினார். அன்று மாலை, ஓட்டலில் தங்கியதற்கான பணத்தைத் தந்துவிட்டு, அதே 100 ரூபாய் நோட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டார் அந்தப் பிரயாணி. அப்போது கேஷியரிடம்,...

மின்மினிப் பூச்சிக்கு வெளிச்சம் எப்படி வருகிறது?

கிராமத்து வயல்காட்டில் அடர் செடிகள் இரவில் வண்ண ஒளியால் தகதகக்கும். இதில் ஒளிப்பாய்ச்சலுக்கு காரணம் விளக்குப்பூச்சி எனப்படும் மின்மினிப் பூச்சிகளே. இந்த வெளிச்சம் எப்படி உருவாகிறது.பொதுவாக ஒரு பொருள் ஒளி விடும் போது அதிலிருந்து பெரும்பாலும் வெப்பமே வரும். அதாவது ஒரு மின் விளக்கில் 90 சதவீத வெப்பமும், 10 சதவீத ஒளி மட்டுமே வரும். அப்படி என்றால் இந்த சிறியப்பூச்சி வெந்து கருகிவிடாதா? அப்படி எல்லம் நடப்பது இல்லை.மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி (cold light), உயர் ஒளி (bioluminescence) என்றே அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்தப் பூச்சிகளின் வயிற்றில் உள்ள ஒளியைத் தரும் சிறப்பு செல்கள். அவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும். சிறிதுகூட...

பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள்!

மரியாதை நிமித்தமாகவும், அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களைக் கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது. கொடுக்கும் மலர்களின் வண்ணம் ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உண்டு.உதாரணமாக, சிவப்பு மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும், இளஞ்சிவப்பு வண்ண மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டு ஆகியவற்றோடு நேசத்துக்கான விண்ணப்பமாகவும் கருதப்படுகின்றன.வெள்ளைநிறப் பூக்கள், கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம் அல்லது மவுனம் ஆகியவற்றையும், பீச் அல்லது பவழ வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை, மகிழ்ச்சியான அடக்கம், வெட்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்துகின்றன. கருஞ்சிவப்பு வண்ணம், நேசத்தோடு கூடிய நம்பிக்கை, கற்பு ஆகியவற்றை அறிவிக்கிறது.விதவிதமான பூக்கள், அதைப் பெறுபவர் களுக்கு உரிய ஒரு தனியான செய்தியையும் வெளிப்படுத்துகின்றன. ரோஜா மலர்கள், `நான் உன்னை...

சென்னைக்கு பக்கத்தில ஒரு மர்மமான இடம்!

பல இடங்கள் நமக்கு பக்கத்திலேயே இருக்கும் ஆனால் மற்றவர்கள் சொல்லி தான் நமக்கு தெரியும். தெரியும் போது 'அட' என்று நினைப்போம். அப்படி பட்ட இடம் ஒன்று சென்னைக்கு அருகிலேயே இருக்கிறது. ஆம், சென்னைக்கு பக்கத்தில…. ஒரு 100 கிலோ மீட்டர்ல…. இருக்கும் ஒரு மர்மமான இடம் பற்றிய தகவலே இது….அப்படியா, என யோசிப்பவருக்கு…. ஒரு கேள்வியுடன் தொடங்குவோமே…உலகம் தோன்றி எவ்வளவு காலமாச்சு அது இருக்கும், கோடி வருசங்களுக்கு மேல…ம்… அப்படி 3000 கோடி வருசத்துக்கு முந்தி, வாழ்ந்த ஒரு மரம் இப்ப இருக்குது….பெரும்பாலான சென்னை வாசிகளுக்கும் ஏன் பாண்டிச்சேரி வாசிகளுக்கும் கூட தெரியாம ஒரு கிராமத்துக்குள்ள இன்னும் இருக்குது… இத்தனைக்கும் இந்த மரங்களை நாம் பார்க்கலாம், ஃபோட்டா எடுத்துக்கலாம்…. ஏன் தொட்டுக் கூட பாக்கலாம்…3000 கோடி வருசத்துக்கு முந்தியது எனும் போது, மரம் மக்கி போகாது என சிந்திப்பவருக்கு, இல்லை.. மக்கி போனால்...

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா - அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டினுள்ளும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளைகளை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர்மறை சக்தி கூடும். மேலும் வாஸ்து மற்றும் ஃபெங் சூயி வல்லுநர்களிடம் இருந்து பெறப்பட்ட சில டிப்ஸ்களை பயன்படுத்தினால், வாழ்க்கை இனிமையாக அமையும். அத்தகைய டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து...

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

அதென்ன பதினாறு? நிச்சயம் பதினாறு குழந்தைகளைப் பெறுவதாக இருக்கமுடியாது, பதினாறு வகைச் செல்வங்களை அடைதல் என்பதுதான் சரியான விளக்கம் என்று எல்லாருக்கும் தெரியும்.ஆனால், அந்தப் பதினாறு செல்வங்கள் எவை என்பது தெரியுமா? அப்படியே தெரிந்தாலும், அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?பிரச்னையில்லை, அபிராமி பட்டர் எழுதிய ‘திருக்கடவூர் அபிராமியம்மை பதிகம்’ என்ற நூலில் அந்தப் பதினாறு செல்வங்களும் ஒரே பாடலில் தரப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்துகொண்டால், அடுத்தமுறை இப்படி வாழ்த்தும்போது அர்த்தம் புரிந்து சொல்லலாம்:கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்துய்ய...

பூவின் 7 பருவங்கள்!

பூவின் 7 பருவங்கள்• அரும்பும் நிலையில் அரும்பு    • மொக்கு விடும் நிலை மொட்டு  • முகிழ்க்கும் நிலை முகை    • மலரும் நிலை மலர்  • மலர்ந்த நிலை அலர்    • வாடும் நிலை வீ  • வதங்கும் நிலை செம்ம...

பணம் சேமிக்க பத்து சூத்திரங்கள்!

அடுப்பை முறையான இடைவெளியில் நன்கு பராமரித்தாலே கேஸ் கணிசமான அளவு மிச்சமாகும். தீயின் ஜுவாலை நீல நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தால், பர்னரில் கோளாறு மற்றும் கேஸ் விரயம் என்று தெரிந்து கொள்ளலாம். இயன்றவரை 'சிம்'மில் வைத்து சமைத்தால் காய்கறிகளின் சத்தும் வீணாகாது. கேஸும் மிச்சமாகும். அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு கடுகு, எண்ணெய் என்று பொருட்களை எடுக்க அலைமோதாதீர்கள். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கையருகில் வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்றவையுங்கள். ஃப்ரிட்ஜில் இருந்து பொருட்களை எடுத்தவுடன் சமைக்க ஆரம்பித்தால்... எரிபொருள் அதிகம் செலவாகும்.மொத்த விற்பனைக் கடையை நாடுங்கள்! பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்காமல், கடைவீதியில் மொத்தமாக மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகளில் மாதத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கினால்... 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பணம் மிச்சமாகும். மேலும்...

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல்!

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும். மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது.  உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள் பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.பெருவிரலை பழையப்படி...

பிடிஎப் கோப்புகளை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய எளிய வழி!

முதலில் உருவாக்கப்பட்ட போது அதனை யாரும் எளிதில் எடிட் செய்ய முடியாது. மேலும் இதனை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான் செயல் இல்லை என்று இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை அது தலைகீழாக மாறிவிட்டது, பிடிஎப் கோப்புகளை எடிட் செய்வதற்கும், உருவாக்குவதற்கும் , கன்வெர்ட் செய்வதற்கும் மென்பொருள் சந்தையில் என்னற்ற மென்பொருளும் இணையத்தில் இலவச வலைமனைகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் Cometdocs. இதில் இரண்டுவிதமான சேவைகளும் உள்ளன. டெஸ்க்டாப் அப்ளிகேஷன் மற்றும் ஆன்லைன் கன்வெர்சன் ஆகியவை.மென்பொருளை தரவிறக்க http://www.cometdocs.com/desktopApp மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் பிடிஎப் கோப்பின் மீது சுட்டெலியின் உதவியுடன் வலது...

அசத்தலான ஆன்லைன் கலைக்களஞ்சியங்கள்!

உலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? 196!. இவற்றில் ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளிலேயே இளைய நாடு, அதாவது மிகவும் சமீத்தில் உதயமான நாடு எது தெரியுமா? தெற்கு சூடான்!.2001 ம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்பிரிக்க தேசமான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.1990 ம் ஆன்டுக்கு பிறகு உலகில் 29 புதிய நாடுகள் உதயமாகியிருக்கின்றன. இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஃபேக்ட்மான்ஸ்டர் ( http://www.factmonster.com/) இணையதளம் உங்களுக்கு வழிகாட்டும்.இந்த தளத்தை தகவல் சுரங்கம் என்று சொல்லலாம்.ஆன்லைன் கலைக்களஞ்சியம் என்றும் சொல்லலாம். ஆன்லைன் களஞ்சியம் என்றதுமே விக்கிபீடியா உங்கள் நினைவுக்கு வரலாம்.விக்கிபீடியா பொதுவான களஞ்சியம் என்றால் ஃபேக்ட்மான்ஸ்டர் சிறுவர்களுக்கானது.ஆர்வம் உள்ள சுட்டீஸ் இந்த தளத்தை தங்கள் பொது அறிவை வளர்த்து கொள்ள பயன்படுத்தி...

நெரிசலில் சிக்காது ஆம்புலன்ஸ் - மாணவர் கண்டுபிடிப்பு!

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் எளிதாகச் செல்ல தொழில்நுட்பம் ஒன்று பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது கண்டுபிடிப்பின் பெயர் : Emergency Traffic Clearing Remote Control kitகண்டுபிடிப்பாளர்களின் பெயர் : லோகேஸ்வரன், விஷ்ணுதாஸ், விகாஷ், ஜவகர்பள்ளியின் பெயர் : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காரமடைகண்டுபிடிப்பின் பயன் : ஆம்புலன்ஸ் டிரைவர் தன் கையில் உள்ள ரிமோட்டை பயன்படுத்தி போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிக்னலை மாற்றமுடியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை ஏற்றிச்  செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையை விரைவாகச் சென்று அடைந்திட, எமர்ஜென்ஸி டிராஃபிக் கிளியரிங் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் (Emergency Traffic clearing Remote control Kit) என்கிற கருவியை உருவாக்கியுள்ளனர் காரமடை, ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்...

ரஜினி, விஜய், அஜீத் படங்களுடன் போட்டி: 'விஸ்வரூபம் 2' படமும் ஜனவரியில் வருகிறது!

ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு போட்டியாக 'விஸ்வரூபம் 2' படமும் ஜனவரியில் வருகிறது. பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீசாவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாடல்கள் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியாகிறது. விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் பொங்கலையொட்டி ஜனவரி 14–ந்தேதி வருகிறது. தொடர்ந்து கமலின் 'விஸ்வரூபம் 2' படத்தை ஜனவரி 26–ல் ரிலீஸ் செய்ய உள்ளனர். 'கோச்சடையான்' படம் 700 தியேட்டர்களில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் விஜய், அஜீத் படங்களுக்கு தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் ஒரு படத்தை...

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்!

செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.***கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.***ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம் போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?காதலன புடிக்கலன்னு அர்த்தம் பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.***பொண்ணுங்க போன பத்தி என்னடா நினைக்கிற…ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..***கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு...

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மருத்துவமனையில் அனுமதி!

  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், காய்ச்சல் காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.டெல்லி ராஜாஜி மார்க்கில் இருக்கிறது அப்துல் கலாம் வீடு. வீட்டில் இருந்த அப்துல் கலாம், உடல்நலம் சரியில்லை எனக் கூறியதை அடுத்து அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் : அவருக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.ரத்த அழுத்தம், இதய செயல்பாடுகள் சீராகவே இருப்பதால் வேறு பிரச்சினை ஏதும் இல்லை. அவரை ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என தெரிவித்தனர்.அண்மை காலமாக அதிக அளவில் பிரயாணங்களை அப்துல் கலாம் மேற்கொண்டிருந்ததாகவும், அதனால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது....

பிறப்பிலும் அவசரம் ஆண்களுக்கு!

  பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே உரிய காலத்துக்கு முன் பிறந்து விடுவதாக சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது. பிரிட்டனில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 5,700 குழந்தைகள் இதுபோல் உரிய காலத்துக்கு முன் பிறப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.மேலும் இந்த புதிய ஆய்வறிக்கையின் படி உரிய காலத்துக்கு முன் பிறக்கும் குறை பிரசவ குழந்தைகள் நோய்வாய்படுவத்ற்கும் சீக்கிரம் மரணம் அடையவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் பள்ளியில் பேராசிரியர் ஜாய் நடத்திய ஆய்வில் இதுபோன்ற குறை பிரசவக் குழந்தைகள் மஞ்சல் காமாலை உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கு எளிதில் ஆட்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பெண் குழந்தைகளுக்கு  கருப்பையில் இருக்கும்போதே நுரையீரல்...

சச்சினுக்கு பாரத ரத்னா விருது!

  கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும்  வேதியியல் விஞ்ஞானி  சி.என்.ஆர்.ராவுக்கும் இந்திய நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.   இந்த விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது குறிப்பிடதக்கது ...

பீர் பாட்டில்களின் மேல் இந்து தெய்வங்களின் உருவங்கள் நீக்கம்!

பீர் பாட்டில்களில் இந்து கடவுளர்களான விநாயகர், லக்ஷ்மி ஆகியோரின் உருவங்களை லேபிள்களாகப் பதிந்து விற்பனை செய்து வந்த ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், லேபிள்களை அகற்றுவதாகவும் கூறியது.இதையடுத்து இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய நிவேதா பகுதி இந்து அமைப்பைச் சேர்ந்த ராஜன் ஸேத் இது சரியான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று கூறினார்.இதற்காக, தங்களுக்கு உதவி புரிந்த, தங்கள் குரலுக்கு செவிசாய்த்து, ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்து ஹிந்துக்களுக்கும் தங்கள் நன்றியைத் தெரிவிப்பதாக அவர் வெள்ளிக்கிழமை இன்று செய்தியாளர்களிடம்...

அமெரிக்காவில் மருத்துவ ஜெனரலாகிறார் இந்தியரான டாக்டர் விவேக் மூர்த்தி!

  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மருத்துவ சட்டத்தை நடைமுறை படுத்தும் குழுவுக்கு தலைவராக அமெரிக்காவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான இந்தியர் விவேக் எச். மூர்த்தி இருந்து வருகிறார். இந்த விவேக் எச். மூர்த்தியை அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறையை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் உயரிய பதவியில் ஒபாமா நியமிக்க திட்டமிட்டிருப்பதாக நேற்று அறிவித்தார். இவரது பரிந்துரையை செனட் சபை ஏற்ருக் கொண்டால் அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறிய வயதில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான பெருமைக்குரியவராக மூர்த்தி விளங்குவார்.                                  ...

சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16

கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமாக யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், வருங்காலத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, அகில உலக சகிப்புத்தன்மை நாள் கடைபிடிக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் 1995ம் ஆண்டு ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுதிமொழியின்படி 1996ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16ம் தேதி சர்வதேச உலக சகிப்புத் தன்மை நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றது.                                            ...

சர்வதேச ரோமிங் சிம் கார்ட் சென்னையில் சேல்ஸ்!

ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் சர்வதேச ரோமிங் சிம் கார்டை லைகா மொபைல் நிறுவனம் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சிம் கார்டுக்கு வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. அத்துடன் வாழ்நாள் முழுவதும் இந்த சிம் கார்டுகளுக்கு வாடகை கிடையாது என்பதுடன் முன் பணம் செலுத்தத் தேவையில்லை என்பதும விசேஷ தகவல்.                                              இந்த சர்வதேச சிம் கார்டில் வாடிக்கையாளர்கள் செலுத்திவரும்...

வாழை இலையின் பயன்கள்!

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 7. சோரியாசிஸ், தோல்...

புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன.பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது !தந்தி, தந்தி என்றொரு சமாச்சாரம் இருந்தது ஞாபகம் இருக்கிறதா ? அதை இனிமேல் அரசியல் தலைவர்களின் பேட்டிகளில் தான் கேட்க முடியும். எந்த பிரச்சினையானாலும் “பிரதமருக்கு தந்தி கொடுப்பது” அவர்கள் மட்டும் தான். மற்ற எல்லோருமே மின்னஞ்சல், போன், எஸ்.எம்.எஸ், 3ஜி என எங்கேயே போய்விட்டார்கள்.இப்படியே வழக்கொழிந்து போன...

விக்கிபீடியா வழங்கும் முன்னோட்ட வசதி!

விக்கிபீடியாவை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதிகளை விக்கிபீடியா ஆர்வலர்கள் முன்கூட்டியே பரிசோதித்து பார்க்கும் முனோட்ட வசதியும் அறிமுகமாகியுள்ளது. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வகித்து வரும் விக்கிமீடியா அமைப்பு இதை அறிவித்துள்ளது. இணைய பயனாளிகளின் பங்களிப்போடு உலகின் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவாகி இருக்கும் விக்கிபீடியாவை மேலும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியில் விக்கிமீடியா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் புதிய வசதிகளை அறிமுகம் நிலையிலேயே பயனாளிகள் அறிந்துகொண்டு அவற்றை பயன்படுத்திப் பார்க்கும் முன்னோட்ட வசதியை விக்கிமீடியா அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. அதாவது அனைவருக்கும் முன்பாகவே புதிய வசதிககளை ஆர்வம் உள்ளவர்கள்...

இந்திய சிகரெட்டில் நிகோடின் அதிகம் ; ஆண்‌டுதோறும் கேன்சர் நோய் அதிகரிப்பு!

 உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது வரையறுக்கப்பட்ட அளவை கட்டிலும் இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் மற்றும் கேடு விளைவிக்கும் தார் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது புகைப்பிடிப்போர்களின் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியாவில் மத்திய அரசு தரப்பில் ஆய்வுக்கூடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை ஆய்வுக்கூடம் முதன்முதலில் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரிலும் , தொடர்ந்து முக்கிய நகரங்களில் மண்டல அலுவலகங்களிலும் அமைக்கப்படுகிறது.கண்காணிப்பு தொழிலகம் வருகிறது :இது குறித்து மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்: லாபம் மற்றும் விற்பனையின் முக்கியத்துவம் கருதி இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் அளவீடு கொண்ட சிகரெட் விற்கப்படுகிறது. இது உலக அளவின் வரைமுறையை விட அதிகம். மத்திய புகையிலை ஆய்வு தொழிற்கூடம்...

அதிக செலவில்லாமல் வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்..

வீட்டை அலங்கரிக்க வேண்டுமெனில் நிறைய நேரம் ஆகும். அதிலும் எப்படி அலங்கரிக்கலாம்? எதைக் கொண்டு அலங்கரிக்கலாம்? வீட்டை அலங்கரிக்க எவ்வளவு செலவாகும் என்று பலர் பலவாறு யோசிப்பார்கள். ஆனால் உண்மையில் வீட்டை அலங்கரிப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டுமென்பதில்லை. புதுமையான கலைநயத்துடனான யோசனைகள் இருந்தாலே, வீட்டை அழகாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் அலங்கரிக்கலாம்.சில சமயங்களில் சிறிய பொருட்கள் கூட, வீட்டை அழகாக அலங்கரிப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் அதனை சரியான இடங்களில் வைத்தால், அதிக செலவின்றி எளிமையாக வீட்டை அலங்கரிக்கலாம். இப்போது பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு வீட்டை எப்படி அலங்கரிக்கலாம் என்று பார்ப்போமா!!!போட்டோ ஃப்ரேம்வீட்டை அலங்கரிக்கப் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் போட்டோ ஃப்ரேம். இந்த ஃப்ரேமில் அழகான தருணங்களை நினைவூட்டும் போட்டோக்களை வைத்து...

பித்தவெடிப்பு குணமாக!

 பித்தவெடிப்பு வந்தால்... கால் அசிங்கமாகத் தெரியும். வலி வேற ஒரு வழி பண்ணிரும். இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா...  பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம். பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும...

ஆறு தவறுகள்!

மனிதர்கள் எல்லோருமே பொதுவாக ஆறு தவறுகளை செய்கிறார்கள். பிறரை அழித்துதனக்கு லாபம் பெற முயற்சிப்பது. திருத்த அல்லது மாற்ற முடியாதவைகளைப் பற்றி நினைத்து  கவலைப்படுவது. நம்மால் முடியாது என்பதற்காக ஒரு செயலை எவராலும் செய்ய  முடியாது என்று சாதிப்பது. சில்லறை விவகாரங்களுக்கு எல்லாம் அலட்டிக் கொள்வது. மன வளர்ச்சிஇல்லாமை ,பக்குவம்பெறாமை ,பொறாமை  நாம் செய்வது போலவே மற்றவர்களும் செய்து வாழ வேண்டும் என்று  பிறரைக் கட்டாயப் படுத்துவது. 2000ஆண்டுகளுக்கு முன் ரோமானியத் தலைவரும் அறிஞருமான சிசரோ கூறியத...

தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு!

1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.2. பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.3.எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top