பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே உரிய காலத்துக்கு முன் பிறந்து விடுவதாக சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது. பிரிட்டனில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 5,700 குழந்தைகள் இதுபோல் உரிய காலத்துக்கு முன் பிறப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புதிய ஆய்வறிக்கையின் படி உரிய காலத்துக்கு முன் பிறக்கும் குறை பிரசவ குழந்தைகள் நோய்வாய்படுவத்ற்கும் சீக்கிரம் மரணம் அடையவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் பள்ளியில் பேராசிரியர் ஜாய் நடத்திய ஆய்வில் இதுபோன்ற குறை பிரசவக் குழந்தைகள் மஞ்சல் காமாலை உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கு எளிதில் ஆட்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பெண் குழந்தைகளுக்கு கருப்பையில் இருக்கும்போதே நுரையீரல் மற்ற உறுப்புகள் எல்லாம் வேகமாக வளர்ச்சி அடைந்து விடுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வின் படி பிரிட்டனில் கடந்த 2012ம் ஆண்டு 37 வாரங்களுக்கு முன்னதாக பிறந்த 34 400 ஆண்குழந்தைகளை மற்றும் 28,700 ஆண்குழந்தைகளிடம் ஒப்பிடுகையில் 6000 ஆண் குழந்தைகளுக்கு பெருமூளை வாதம், பார்வை கோளாறு சுகாதார பிரச்சனை உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என பேராசிரிய லாவன் கூறினார். மேலும் குறைபிரசவம் என்பது உலகம் முழுவது இருக்கும் பிரச்சனை எனவும் பிரிட்டனில் 7.8 சதவீதமும், அமெரிக்காவில் 5 சதவீதமும் குறைபிரசவ குழந்தைகள் பிறக்கிறது என்றும் தெரிவித்தார்.
பிரிட்டனில் ஆண்டுக்கு 28 வாரங்களுக்கு முன்னதாக பிறந்த குழந்தைகளில் 1,300 குழந்தைகள் இறந்துவிடுகிறது. உலக அளவில் 15.1 மில்லியன் குழந்தைகளுக்கு ஒரு மில்லியன் குழந்தை குறைபிரசவத்தில் பிறக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு குறை பிரசவ குழந்தைகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ரெட்டினோபதி தாக்கத்தால் குறைபிரசவ குழந்தைகளுக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. இந்த பார்வை இழப்பை தடுப்பதற்கு புற்றுநோய் மருந்து அவஸ்தின் உதவுகிறது. குறை பிரசவ குழந்தைகளின் கண்கள் முழுவளர்ச்சி அடைவதற்கு முன்னர் இம் மருந்து தரப்படும் பட்சத்தில் பார்வை இழப்பை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வு அறிக்கை நியூஇங்கிலாந்து ஜர்ன்ல் ஆப் மெடிசன் என்ற இதழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: