
நேற்றிரவு 'ஜில்லா' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு, ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்ம் 'ஜில்லா' படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று டிரெய்லரை வெளியிடாமல், சிறு சிறு டீஸர்களாக வெளியிடப்பட்டன.படத்தின் முதல் டீஸர் வெளியிடப்பட்டு YOUTUBE தளத்தில் இந்திய அளவில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட வீடியோவாக முதல் இடத்தை பிடித்தது மட்டுமன்றி 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர். தொடர்ச்சியாக 2வது, 3வது டீஸரும் வெளியிடப்பட்டன.இந்நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று (ஜனவரி 7) YOUTUBE தளத்தில் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அனைவருமே ஆர்வமாக...