அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.வாகனத்திலோ, இரயிலிலோ,...
Thursday, 12 December 2013
இத்தனை பெயர்களா?
அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல்... இவை எல்லாம் என்ன?ரொம்ப யோசிக்காதீங்க நண்பர்களே... நாம் தினமும் சாப்பிடும் 'சோறு’க்கான தமிழ்ப் பெயர்கள்தான் இவை.ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்களைச் 'சொல்லாட்சி’ என்பர். இத்தகைய சொல்லாட்சிச் சிறப்பு கொண்ட முதல் மொழி, நம் தமிழ் மொழிதான...
தெரிந்துக் கொள்வோம் : புகைத்தலைப் பற்றி?
இன்றைய உலகில் ஆண்களில் பெரும்பாலனோர்க்கு ஆறாவது விரலாய் இருப்பது சிகரெட் தான். இன்றைய வேகமான உலகில் புகைத்தல் ஒரு நாகரீகமான செயலாகப் பலராலும் கருதப்படுகின்றது. புகைத்தலால் வரும் கேடுகளை அறிந்தவர்கள் கூட புகைத்தலை நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள்.சுவாசப்பையில் புற்றுநோய் வந்து இறந்தவர்களில் 80 வீதமானவர்கள் புகைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் 20 சிகரெட்டுகள் புகைப்பவர் - ஒரு வருடத்தில் - தனது சுவாசப்பைக்குள் ஒரு கோப்பை தார் ஊத்துவதற்கான செயலைச் செய்து விடுகின்றார்.கணக்கெடுப்பின் படி மிகக் குறைந்த வயதில் இறப்பவர்களில் 50 வீதமானோர் புகைப்பதாலேயே இறக்கின்றனர்.உலகத்தில் 10 வினாடிக்கு ஒருவர் புகைத்தலினால் இறந்து கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organzation) அறிவிக்கிறது.புகைத்தலினால் வருடத்திற்கு 3 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். 2003ம் ஆண்டளவில் புகைத்தலினால் இறப்பவர்களின்...
ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.!
1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வுஎனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக!நாம் எதையும் மனம் வாக்குக் காயங்களாகிய திரிகரணங்களைக் கொண்டு அறிகிறோம். திரிகரணங்கள் சடப்பொருள்கள். சடப்பொருள்களைக் கொண்டு சடப்பொருள்களை யறியக்கூடுமேயன்றி சித்துப்பொருளாகிய கடவுளை யறிய முடியாது. திரிகரணங்களால் கடவுளை அறியக்கூடுமாயின்...
மெட்டி அணிவது ஏன்?

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்.பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம்,...
அம்மைநோயைத் தடுக்க!

அம்மைநோயைத் தடுக்கவும், அம்மைநோய் வேகத்தை தணிக்கவும், மேலும் பல நோய்கள் வரும் முன் தடுக்கவும் சில எளிய மருத்துவக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.அம்மைநோயைத் தடுக்க:ஒரு முற்றிய கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.அம்மைநோய் வேகத்தை தணிக்க:பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தழும்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவிடும். தினம் சந்தனச் சோப்பு போடவும். செந்தாழம்பூ...
வேதனையின் உச்சக்கட்டம்.....!!

இந்த வருடம் இவ்வளவு பெட்ரோல் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருடம் இவ்வளவு வாகனங்கள் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருடம் இவ்வளவு தங்கம் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது சுவிஸ் நாடு.
இந்த வருடம் இவ்வளவு சாராயம் விற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது தமிழ்நாடு.
இந்தப் பதிவு சிரிப்பதற்காக அல்ல... வேதனையின் உச்சக்கட்டம்
...
வேதனை!

100 கிலோ அரிசி மூட்டை
தூக்குபவனுக்கு
அதை வாங்க
சக்தி இல்லை.
100 கிலோ அரிசி மூட்டை
வாங்குபவனுக்கு
அதை தூக்க
சக்தி இல்லை...!
...
இன்சுலின் சுரக்க ‘வாழைப்பூ’!

வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் பயன்படுத்துகிறோம்.பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது. அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்: * வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்....
எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து!

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால்...
’மாத்தி யோசி’

கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லரையை போட ஆரம்பித்தனர்.மாலை ஆனதும் அந்த போர்ட் எழுதி வைத்தவர் வந்து பார்த்தார்.அந்த சிறுவன் கேட்டான் ஐயா அந்த போர்டில்...
தழும்புகளை தலைமறைய செய்ய சூப்பர் டிப்ஸ்!

பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் இந்த தழும்புகள் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும்.இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல்,...
நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த இருவர் !
நான் சிறுவயது முதலே என் மனதில் ஏற்றிப் போற்றும் நட்பிற்கு உதாரணமாக கூறப்படும் இச்சங்ககால உண்மைக் கதையினை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். இவ்வுலகில் உண்மையான நட்பு இல்லை என்று நினைக்கும் சிலருக்காக இந்த கதையை இங்கே பிரசுரிக்கிறேன். இக்கதையில் வரும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதில்லை. ஆனாலும் தன் நண்பனின் நம்பிக்கை வீண்போகாமல் அவர்களின் நட்பின் பொருட்டு அவனோடு உயிர்துறந்த இந்நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மயிர் கூச்செறிகிறது. அக்கதை இதோ...கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர். ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர். ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் ...
மணம் வீசும் மலர்களுக்குள் இத்தனை மருத்துவ குணமா?

இலுப்பைப் பூ:இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.ஆவாரம்பூ:ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.அகத்திப்பூ:அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த...
ஐஃபோன் & ஸ்மார்ட் ஃபோன் மூலம் அல்ட்ரா சவுண்ட்!
மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன.அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.பெரும்பாலான நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில...
உருளை கிழங்கின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.உருளைக்கிழங்கு, காரத்தன்மை நிறைந்த கிழங்கு. புளித்த ஏப்பம் பிரச்னையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.உருளை அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி காலையில் வெறும் வயிற்றில், உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து, சாறு எடுத்து சாப்பிட்டு வர, வயிற்றுப்புண் குணமாகும்.வாரத்துக்கு 2,3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர, பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் இந்தக் கிழங்கு.குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்புச் சக்தியும்...
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்: அப்துல் கலாம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயப் பள்ளிகள் சார்பில் கேந்திரிய வித்யாலய சங்கேதனின் பொன் விழா சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கலாம் பேசியது:கடந்த 1963ஆம் ஆண்டு 20 பள்ளிகளுடன் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் தொடங்கப்பட்டது. இப்போது இந்த அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.சென்னை மண்டலத்தில்...
ரிலீஸாகும் நாளிலேயே என் படத்தை இன்டர்நெட், கேபிளில் வெளியிடுவேன்: சேரன்!

“என்னுடைய ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யும் நாளிலேயே இன்டர்நெட், கேபிளில் வெளியிடப்போகிறேன்” என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.சமுத்திரக்கனியின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகிவரும் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடந்தது. இந்த விழாவில் திரைப்பட சங்கப் பொறுப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் பேசியதாவது: சமுத்திரக்கனி ஒரு போராளி. சமூகத்தின் பிரச்சினைகளை தொட்டுப்பேசும் படங்களை இயக்கும் போராளி. இந்தப்படம் வெளிவரும்போது சமூகத்தில் நிறைய மாற்றங்கள் நிகழும். இந்தப்படத்தில் நடிகர்...
ஏன் கூடாது மேலவை?
அசாம் மாநிலத்தில் சட்ட மேலவை வேண்டும் என்று அந்த மாநில சட்டப் பேரவை இயற்றிய தீர்மானத்தைப் பரிசீலித்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழு, “இது தொடர்பாக எல்லா அரசியல் கட்சிகளும் பேசி நிலையான ஒரு முடிவை எடுத்தால் நல்லது” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது. அது அப்படிக் கூறக் காரணம், எல்லா மாநிலங்களிலும் சட்ட மேலவை இல்லை என்பதுடன், ஒரே மாநிலத்தில் ஒரு கட்சி வேண்டும் என்றும் ஒரு கட்சி வேண்டாம் என்றும் நினைப்பதுதான்.நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்று இரு அவைகள் இருக்கின்றன. மாநிலங்களவையை மூத்தோர் அவை என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் இதைச் சட்ட மேலவை என்று அழைத்தனர். படித்தவர்களையும் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் நிரம்பப் பெற்றவர்களையும் மேலவைக்குத் தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருந்தது. மாநில அரசின் நிர்வாகத்தை நடத்திச் செல்ல அனுபவமும் அறிவும் நல்ல நடத்தையும் உள்ள...
ரஜினிக்கு அந்த தைரியமும் வேண்டும்!

ரஜினி பிறந்த நாளில் ரஜினிபற்றி ஒரு மீள்பார்வையில் நாம் யோசிக்கலாம். மற்ற நடிகர்களையும் ரஜினியையும் வேறுபடுத்திக் காட்டும் தன்மை என்னவென்றால், ரஜினியிடம் இருக்கும் ஒரு மின்காந்த வசீகரம். அதனால்தான் ஒரு சிறிய குழந்தைகூட ரஜினியைப் பார்த்தால் குதூகலம் அடைகிறது.
இயல்பே அழகு
உலக அளவில் இதே போன்ற வசீகரத்தைக் கொண்டவராக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவரைப் பார்த்த மாத்திரத்தில் ரசிகர்கள் பரவசம் அடைந்தார்கள். ஆனந்த மிகுதியில் கண்ணீர் விட்டார்கள். அப்பேர்ப்பட்ட மைக்கேல் ஜாக்ஸனைவிட ஒரு விதத்தில் ரஜினி சிறந்து விளங்கினார். எப்படியென்றால், ஒரு தேவதூதனைப் போல் கொண்டாடப்பட்ட மைக்கேல் ஜாக்ஸன், தன்னுடைய கருப்புத் தோலை மாற்றிக்கொள்வதற்காக என்னென்னவோ முயற்சிகளை...
ரஜினி 63 - மறுபார்வை: நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்?

மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்கு அழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின் பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.
‘‘உங்கள் கதாபாத்திரத்துக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது, “அமெரிக்கச் செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக் கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.
ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான்.‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக்...
சடங்குகள் நியாயமானவை என்று நிரூபிக்க முடியாது - மகாத்மா காந்தியடிகள்!
யக்ஞம் என்பது அழகும் சக்தியும் நிறைந்த ஒரு சொல்லாகும். யக்ஞம் என்பதற்கு நேர் பொருள் வழிபாடு என்பதே. அதாவது தியாகம் என்பதுதான். எவ்விதத் தியாகமும், எவ்விதத் தொண்டும் யக்ஞம்தான். யக்ஞத்தினால் அதாவது யாகத்தினால் மனித வர்க்கமே வாழ்கின்றது.ஹோமத் தீயில் நெய்யையும் மற்றப் பொருட்களையும் கொட்டுவதைக் காட்டிலும் யக்ஞத்திற்கு ஆழ்ந்த அர்த்தம் உண்டென்று உங்களுக்குக் கூற விரும்புகிறேன். மானிட வர்க்கத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்வதே யக்ஞம் ஆகும். என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆஹீதிகளுக்கு குறிப்பான அர்த்தம் உண்டு. தூய்மைப்படுத்தும் அக்னியில் நமது பலவீனங்களையும், வெறிக்குணங்களையும், குறுகிய புத்தியையும் எரித்து நாம் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்போதுதான் நம் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்ப்பார்.சாஸ்திரங்களில் விவரங்களாக்கிய எல்லா யக்ஞங்களையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது....
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட....
காலையில் விழித்தெழும் போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்" தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க...முதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.அடுத்த நாள் எழும் போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல்துலக்குவது, பால், காபி, டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்" செய்து கொள்ள சில யோசனைகள்...*...
பெண்களைக் கவரவா உடற்பயிற்சி?
தான் செய்யும் அல்லது செய்ய நேரும் ஒவ்வொரு காரியத்தையும் நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாகவே ஒவ்வொரு மனிதனும் நினைத்துக் கொள்கிறான். நாடு, மொழி, இன வேறுபாடுகளையும் கடந்து உலகம் முழுவதும் மனிதர்கள் இப்படி நினைப்பவர்களாகத் தான் உள்ளார்கள். இப்படியான செய்கைகளுக்கு டிஃபன்சிவ் (defensive attitude) அட்டிடுட் எனக் கொள்ளலாம்.உதாரணமாக, நேற்று ஜிம்மிலிருந்து திரும்பி வீட்டிற்குள் நுழைந்தேன். நண்பர் ஒருவர் வந்திருந்தார். நண்பருடன் இன்னொரு நபரும் வந்திருந்தார். வழக்கமான உபசரிப்புகளுக்குப் பிறகு உடற்பயிற்சி பற்றிய பேச்சு வந்தது. நானும் நண்பரும் உடற்பயிற்சி தேக ஆரோக்யம் என்றும் எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்க அந்த இன்னொரு நபர், ஜிம் என்பது பயனற்ற நேர விரயம் என்றும், தேகப்பயிற்சி செய்யாதவர்கள் ஆரோக்கியமற்றவர்களா? எனக் கேள்வி எழுப்பியும், பெண்களை வசப்படுத்த...
வாழ்க்கைக்கு வழிகாட்டும் மந்திரங்கள்!
மந்திரங்களைக் கேட்பதால் அல்லது உச்சரிப்பதால் எழும்பும் த்வனி மனிதனுடைய உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் தீய சக்திகளை அகற்றி விடுகிறது. மந்திரம் என்ற அரிய கருவி, உறங்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் ஒரு மனிதனை மாற்றுகிறது. சில நேரங்களில் மனிதன் ஆற்றிய செயலை மீண்டும் மீண்டும் செயல்படுத்துகின்றான். மனிதனுடைய வயது ஏற்றமடையும் போது, அவனது ஞாபக சக்தி பலவீனமடைகிறது. இந்த மந்திரங்கள் மனிதனுடைய ஞாபக சக்தியைப் பலப்படுத்தி, செயலற்ற நிலையிலுள்ள எண்ணங்களுக்கு புத்துணர்வு கொடுத்து, அவனை நல்லதொரு வழியில் வழி நடத்திச் செல்லுகின்றது.மந்திரங்களின் கருத்துக்கள் தெரியாமலிருந்தாலும் நம்மில் பலர் பல முறைகள் கேட்கின்றோம் அல்லது உச்சரிக்கின்றோம். அவற்றிலிருந்து எழும்பும் த்வனியானது மனிதனுக்கு புதிய பலத்தைக் கொடுத்து, அவனுடைய எண்ணங்களுக்கு ஒரு வடிகால் கொடுக்கத் தவறுவதில்லை. இவை ஒரு மனிதனுக்கு கர்ம...
குறட்டையை தடுக்க வழிகள்:-
நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம்காரணங்கள்:நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை ஏற்படுகிறது.முழு தூக்கம் இருக்காது:யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக...
பொண்ணு பார்க்கப் போறீங்களா?
உனது மனைவி எப்படி இருக்க வேண்டும்? என்று இன்றைய இளைஞர்களிடம் கேட்டால், அழகாக, அம்சமாக, அறிவாக... என்று ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு கேட்பார்கள்.அப்படியெல்லாம் பெண் பார்க்கக் கூடாது. இந்த பொறுப்பை இளைஞர்கள் தங்களது பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும் என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஏன் அவர் அப்படி சொல்கிறார்? அவர் சொல்வதை கேட்போமா...?"மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது....
பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள்!
சங்க காலத் தமிழகத்திலும் அதற்குப் பின்னரும் விநோதமான தண்டனைகள் வழக்கத்தில் இருந்தன. அரசன், போரில் வெற்றி பெற்றால் தோல்வியுற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவது, அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பது, தோல்வியடைந்த மன்னரின் திருமுடிகளை அல்லது மகுடங்களை உருக்கிக் காலடியில் பலகையாகப் போடுவது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவது, யவனர் போன்ற வெளிநாட்டினர் பிடிபட்டால் அவர்கள் தலையை மொட்டையடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிச் சாம்பல் பூசுவது, மாற்று மன்னர்களின் குழந்தைகளை யானையின் காலால் இடறச் செய்து கொல்வது, ஒற்றர்களுக்கு மரண தண்டனை அளிப்பது, கொலைத் தண்டனை கிடைத்தோருக்குச் செம்மாலைகளை அணிவிப்பது - இப்படி எத்தனையோ விசித்திரமான வழக்கங்களைக் காண முடிகிறது.1. சிறுமிக்கு...