.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 28 August 2013

கணினியின் தாக்கத்திலிருந்து கண்களை காப்பாற்ற!


கணினியால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்: 

நாள்தோறும் கணியைப் பயன்படுத்தி பணிபுரிபவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கண்களிலும் வலி, உறுத்தல், எரிச்சல், உலர்வுத் தன்மை ஏற்படும்.

  1. பொதுவாக கணினியில் தொடர்ச்சியாக 4 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிபவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் (Computer Vision Syndrome)எனப்படும் கண்சார்ந்த பாதிப்பு ஏற்படும். 
  2. கைகளில் விரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள், தோள்பட்டை என மூட்டு இணைப்புகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டு, வலி அதிகரிக்கும். 
  3. தொடர்ச்சியாக கணினித் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதாலும், வேலையில் தொடர்ச்சியான ஈடுபாடு காட்டுவதாலும் கண்கள் உலர்ந்து, இமைகள் சிமிட்டுவதைக் கூட மறந்து விடுகிறது. 
  4. இயல்பான சிமிட்டல்களின் அளவு குறைந்துவிடுகிறது. 
  5. கண்களில்  ஒரு வறட்சித் தன்மை ஏற்படும். 
இதன் விளைவாக
  • தெளிவற்ற பார்வை
  • கண்களைத் திறந்து வைத்திருக்கும்பொழுதே கண் முன்னே மின்மினிப் பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம்
  • திடீரென கண்ணின் முன்னே வெளிச்சப் புள்ளிகள் தோன்றி மறைதல்
  • கண்களில் நீர்வழிதல்
  • எழுத்துக்கள் மங்கலாக தெரிதல்
  • இரண்டிரண்டாக உருவங்கள் தெரிதல்
  • கண்ணிற்கு முன்பு பனிப்படலம் மூடியதைப் போன்ற ஒரு தோற்றம்
இவை அனைத்துமே ஏற்படும்.

இந்த பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? 

கணினி இருக்கை: 

முதலில் கணினியில் பணிபுரியதக்க இருக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த இருக்கையானது ஏற்றி, இறக்கும் வகையிலும் நன்கு சுழலும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
கணினியில் உள்ள விசைப்பலகைக்கு இணையாக நீங்கள் அமரும் இருக்கையில் கைப்பிடி உங்கள்  கைகளைத் தாங்க வேண்டும். அதாவது கணினியில் உள்ள விசைப் பலகையில் விரல்களை வைத்து தட்டச்சிடும்பொழுது உங்கள் முழங்கையானது கீழே இறங்காமல்  நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் கைப்பிடியில் இருக்குமாறு உங்கள் இருக்கையின் உயரத்தை வைத்திருக்க வேண்டும்.

போதுமான வெளிச்சம்: 

  1. நீங்கள் பயன்டுத்தும் கணினி திரைக்கும், கணினியிலுள்ள விசைப்பலகைக்கும் போதுமான அளவில் வெளிச்சத்தை ஏற்படுத்தி, உங்கள் பணியை நீங்கள் தொடரலாம். 
  2. உங்களுக்கு எதிர்புறமிருந்து ஜன்னல் வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ வெளிச்சம் ஏற்பட்டு அது உங்கள் கண்களில் பட்டு எதிரொளிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எதிர்புறம் இருந்து வரும் வெளிச்சமானது கண்டிப்பாக உங்கள் கண்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கும். 
  3. கணினித் திரைக்கும் உங்களுக்கும் தோராயமாக 33 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்களை கைகளை நீட்டினால் கணினித் திரையை உங்கள் விரல் நுனி தொடும் தூரத்தில் கணினித் திரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். 

வருமுன் காப்போம்: 

கணினியில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும்பொழுது, கண்டிப்பாக கண்களுக்கு ஓய்வளிப்பது முக்கியம். அதாவது இருபதுக்கு இருபது பார்முலாவை பயன்படுத்த வேண்டும்.
அதென்ன இருபதுக்கு இருபது பார்முலா என்கிறீர்களா?

இருபதுக்கு இருபது: 20-20-20

கணினித் திரையையே தொடர்ந்து உற்றுப்பார்த்து வேலை செய்யாமல் இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வை வேறுபக்கம் திருப்பி, இருபது அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை அல்லது பொருள்களை தொடர்ச்சியாக இருபது நொடிகள் பார்ப்பதைத்தான் இருபதுக்கு இருபது பார்முலா என்பார்கள்.
கணினித் திரையிலேயே பார்வையை தொடர்ந்து மணிக்கணக்கில் பதிக்காமல், அதிலேயே தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் இருக்காமல் பார்வையை வேறு திசையில் திருப்பி குறிப்பிட்ட தூரத்தில் உள்ள பொருள்களை, குறிப்பிட்ட நொடிகள் பார்க்க வேண்டும்.

இருபதுக்கு இருபது பார்முலாவை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்: 

பார்வை கணினித் திரையைவிட்டு வேறு திசையில் செலுத்தும்பொழுது கண்ணில் உளை தசைகள் இயக்கப்பட்டு, விழித்திரை லென்சின் குவிய தூரம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் மாறுபட்ட கண்ணிற்கு இயக்கம் கிடைக்கிறது. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதால் கண்கள் இயல்புநிலை, இயல்பான இயக்க நிலையைப் பெறுகிறது.
வருடத்திற்கு ஒருமுறையாவது கண்களில் உள்ள பிரச்னைகளை, தகுதியான கண் மருத்துவரை அணுகி கண்சோதனை செய்துகொண்டு, ஆலோசனைப் பெறுவது உங்கள் கண்களைப் பாதுக்காக்க ஒரு அற்புதமான முன்னேற்பாடான பாதுகாப்பு வழிமுறையை ஏற்படுத்திக்கொடுக்கும்.

QR Code என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்துவது?


QR Code என்றால் என்ன? 


QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலக நாட்டினர் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாகும்.

Bard code & QR code


Bar Code பற்றிய நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருப்போம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியே QR Code ஆகும்.


QR Code-ம் பயனும்: 


  1. QR Code Image ஆக மாற்றுவதன் மூலம் உங்களுடைய தகவல்கள் அல்லது இணைப்புகள் உங்களுடைய தகவல்கள் QR Code ஆக என்கோட் (Encode) செய்யப்பட்டு ஒரு  படமாக கிடைக்கும். 
  2. அப்படத்தை உங்களுக்கு வேண்டிய இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். 
  3. நண்பர்களுக்கு அனுப்பியும் அவற்றை Decode செய்து பயன்படுத்த முடியும். 
  4. அதாவது ஒரு தகவலை QR Code ஆக என்கோட் செய்யப்பட்டு கிடைக்கும் படத்தை மீண்டும் ஸ்கேன் செய்து (டீகோட் Decode)செய்து , அதில் மறைந்துள்ள தகவல்களைப் பெற முடியும்.
  5. உங்களுடைய தகவல்கள் தமிழ்மொழி உட்பட எம்மொழியில் இருந்தாலும், இந்த முறையில் தகவல்களை QR Code ஆக மாற்றி, மீண்டும் தேவையானபோது Decode  செய்து பெற முடியும்.


QR Code Image - ல் என்னென்ன தகவல்களைப் பயன்படுத்த முடியும்.?


QR Code -ல் இணையதளச்சுட்டிகளை (Websites links) வைக்கலாம். குறுஞ்செய்திகளை QR Code ஆக மாற்றலாம். மின்னஞ்சல் முகவரிகள், வலைத்தள முகவரிகள், SMS என்பன போன்ற ஐந்து வரிக்கு மிகாமல் இருக்கும் Data க்களை QR Code படமாக மாற்ற முடியும்.

QR Code Image - ஐ உருவாக்குவது எப்படி? 


QR Code Image -ஐ உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய இணையதளங்கள் (Online QR Code Websites) உள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு தளத்திற்கு சென்று நீங்கள் உருவாக்க விருக்கும் இணைப்பு அல்லது தகவல்களை அதில் உள்ளிட்டு, QR Code Image - இமேஜைப் பெற முடியும். இது முற்றிலும் இலவசமே..

QR Code Image உருவாக்க இலவச மென்பொருள்களும் உள்ளன. அம்மென்பொருளைப் பயன்படுத்தியும் QR Code Image ஐ உருவாக்கம், QR Code Image -ல் உள்ளதை Decode செய்து படிக்கவும் முடியும்.

QR Code உருவாக்கப் பயன்படும் மென்பொருள்: 


1. Download QR Code Generator Software
2. Download QR Code Generator Software
3. Download QR Code Generator Software

உடனடியாக Online-ல் QR Code உருவாக்கப் பயன்படும் இணையதளங்கள்:

1. http://createqrcode.appspot.com/
2. http://keremerkan.net/qr-code-and-2d-code-generator/
இதுபோன்று நிறைய இணையத்தளங்கள் உள்ளன.

உருவாக்கப்பட்ட QR Code - ஐ Decode  செய்து தகவலைப் படிப்பது எப்படி? 


இதற்கு QR Code Reader என்ற மென்பொருள் பயன்படுகிறது. இணையத்தில் QR Code Reader வலைத்தளங்களும் உள்ளன.

இந்த தளத்திற்குச் சென்று http://www.onbarcode.com/scanner/qrcode.html உங்களுடைய QR Code Image - உள்ளிட்டு, அதில் உள்ள தகவல்களைப் பெற முடியும்.

QR Code Reader மென்பொருள் (Software) மூலமும் QR Code Image உள்ளவற்றை படித்து அவற்றைப் பயன்படுத்த முடியும்.

இம்மென்பொருளைப் பயன்படுத்தி QR Code உருவாக்க முடியும். உருவாக்கிய QR Code Image - படிக்கவும் முடியும்.

விண்டோஸ் கணினிக்கான மென்பொருள் இது. மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய.. இங்கு செல்லவும்.


qr code generating software

Microprocessor-கணினியின் மூளை (சிறப்பு கட்டுரை)

 

சாதாரணமாகவே நாம் கணினியை மனிதனின் மூளைக்கு ஒப்பிட்டுச் சொல்வோம்.


AMD Microprocessor
 
மனிதனின் மூளைக்கு சரிசமமாக இல்லாவிடினும், மனிதனை விட அதிக கணக்குகள் மற்றும் மனிதனுக்கு தேவையானவைகளை , குறைந்த நேரத்தில் விரைவாக வேலைகளை செய்து தரும் ஒரு சாதனம்தான் கணினி.

கணினிக்கும் மூளை உண்டு. இதை  மைக்ரோ பிராசசர் (Microprocessor) என்கிறோம்.  தமிழில் சொல்வதெனில் நுண்செயலி.


நுண் செயலி என்றால் என்ன? இதன் பணி என்ன?
(What is a micro processor? What is the task?)

நுண் செயலி என்பது ஒரு கட்டுப்பாட்டு இயக்கு மையம் ஆகும். ஆங்கிலத்தில் CPU என்பார்கள். இது சில்லுக்குள் அடங்கியிருக்கும்.

இது கணினியில் உள்ள ஒவ்வொரு வன்பொருளும் (Hardware)கட்டளை சைகைகளை ஏற்படுத்தி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

கணினியில் கொடுக்கும் செயல்கள் பல்வேறு நுண்செயல்களாக மாற்றப்பட்டு இயக்கும் பணியை இது செய்வதாலேயே இதை நுண்செயலி என்கிறோம்.

நுண்செயலியைக் கண்டுபிடித்தவர் யார்? 
(Who is the inventor of microprocessor?)

கணினியை இயங்குவதற்கு மூலாதாரமான நுண்செயலியைக் கண்டுபிடித்தவர்  மெர்சியன் டெட் ஹாப் (1969). இவர் கால்குலேட்டருக்குத் தேவையுள்ள பல சர்க்யூட்களை ஒரே சில்லுக்குள் வடிவமைத்ததே உலகின் முதல் நுண்செயலியாகும்.

இந்த நுண்செயலியை busicom என்ற ஜாப்பன் நிறுவனம் Calculaterக்குத் தேவையான சர்க்யூட் உருவாக்கித் தர இன்டென் நிறுவனத்தை நாடும்பொழுது, அதற்கான முயற்சியில் இன்டெல் நிறுவனம் இறங்கியது.
அந்நிறுவனத்தில் அப்பொழுது பணிபுரிந்த Mercian E Ted haff அவற்றிற்கான முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். அதுவே முதல் நுண்செயலி ஆயிற்று.

தற்காலத்தில் பல்வேறு வகையான நுண்செயலிகள் வந்துவிட்டன.

நுண்செயலிகளின் வகைகள்: 

1. RISC வகை நுண்செயலிகள்
2. x86 வகையான நுண்செயலிகள்
3. 64 பிட் வகையான நுண்செயலிகள்

இத்தகைய பயனுள்ள நுண்செயலிகள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன தெரியுமா?

கடந்த நூற்றாண்டின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் Miro Prossorம் ஒன்று. இதனால்  கணினி உலகத்தில் மாபெரும் புரட்சியே ஏற்பட்டுவிட்டது.

மின்னணு உலகத்தில் இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.

இம்மின்னணு நுண்செயலியை(Microprocessor) உருவாக்க க்வார்ட்ஸ்(Kvarts) என்னும் கண்ணாடி ஸ்படிகம் பயன்படுகிறது.

இக்கண்ணாடி ஸ்படிகத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு அது க்வார்ட்ஸ் சிலிக்கானாக (Kvarts sio2) மாற்றப்படுகிறது.

க்வார்ட்ஸ் சிலிக்கானாக மாற்றப்பட்ட தகட்டில் இணைப்புகள் வரையப்படுகிறது.

முதன்முறையாக வடிவமைக்கப்பட்ட (Microprocessor)நுண்செயலி 4004ல் 2300 டிரான்சிஸ்டர்கள் வரைக்கும் வரைந்தனர். தற்போது Pentium 4 போன்ற பிராச்சர்களில் கோடிக்கணக்கான டிரான்சிஸ்டர்கள் வரைந்துள்ளனர். இத்தனை டிரான்சிஸ்டர்கள் (Transistors) அடங்கியுள்ள நுண்செயலின் அகலம் எவ்வளவு தெரியுமா?

வெறும் கால் அங்குல சதுரப் பரப்பளவுதான்.

சிலிக்கனின் மேல் போட்டோ resist மூலம் மின்கடத்தும் பொருள், மின் கடத்தாப் பொருள் மற்றும் குறை கடத்தி ஆகியவற்றையும் சேர்த்தே இதில் வடிவமைக்கின்றனர். இது அவ்வளவு சுலபமானது அல்ல.

இந்த மொத்த அமைப்பும் ஒரு டிரான்சிஸ்டர் போல் வேலை செய்வதாலேயே இவற்றை டிரான்சிஸ்டர் என்றழைக்கிறோம்.

இவ்வாறான சிக்கலான இணைப்புகளை வரையும் முறைக்கு போட்டோ லித்தோகிராபி என்று பெயர்.

இவ்வாறு வரையப்பட்ட இணைப்புகளில் உள்ள மெல்லிய கண்ணுக்குத் தெரியாத கோடுகளின் அகலம் மைக்ரான் என்னும் அலகால் அளவிடப்படுகிறது.

இவற்றை வெறும் கண்களால் அளவிட முடியாது. ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பாகம். குறிப்பாக நாம் உணர்ந்துகொள்ளும்படி சொல்ல வேண்டுமானால் நம் தலைமுடி இருக்கிறதல்லவா? அதில் ஒரு முடியை எழுபதாக பிரித்தால் என்ன அளவு வருமோ.. அந்தளவுதான் மைக்ரான்...

இந்த மைக்ரான் அளவை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது.
 

உலகையே அதிர வைக்கும் புதிய NFC தொழில்நுட்பம்!

முதலில் இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்...! 


http://www.youtube.com/watch?v=_64mAcOn444


என்ன நடக்கிறது? ஏதாவது புரிகிறதா? தொடர்ந்து இடுகையை வாசியுங்கள்..!!! முழுவதுமாக வாசியுங்கள்...!!! 

பிறகு மீண்டும் இந்த வீடியோவைப் பாருங்கள்...!! 

உங்கள் மனதில் என்ன எண்ணம் தோன்றுகிறது?

எண்ணங்களை எழுதுங்கள் கருத்துரையில்..! காத்திருக்கிறேன்.

சாதாரண பஸ்கண்டக்டர் முதல்... அணுவிஞ்ஞானி, ராக்கெட் விடும் வானவியல் அறிஞர்கள் வரை அனைவருக்கும் பயன்படுவது, பயன்படுத்தப்படுவது புதிய தொழில்நுட்பமும், தொழில்நுட்பக் கருவிகளுமே..!
இந்த தொழில்நுட்பங்கள் சும்மா இருக்கிறதா? எய்ட்ஸ் கிருமியைபைப் போல பல்கி பெருகி வளர்ந்துகொண்டே  இருக்கிறது. Technology-ன் பல்படியாக்கல் வளர்ச்சியாக தற்போது வெளிவந்த NFC தொழில்நுட்பத்தை சொல்லலாம். NFC தொழில்நுட்பமா? அது என்ன செய்யும்? எப்படி பயன்படுகிறது? எதிர்காலத்தில் NFC Technology -ன் நிலை என்ன? என்ற கேள்விகள் உங்களுக்கு எழும். தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே NFC தொழில்நுட்பத்தைப் பற்றி எளிதாக புரியும். 
uses of New NFC Technology

NFC என்றால் என்ன? 
NFC என்பது Near Field Communication என்பதின் விரிவு. 
NFC Technology எதற்கு பயன்படுகிறது? எதில் பயன்படுத்தப்படுகிறது? 
இது தகவல்களைப் பரிமாறக்கொள்ள பயன்படுகிறது. உங்களுடைய Smart Phone -ல் புதிய புகுத்தப்பட்டிருக்கிற தொழில்நுட்பம்.
NFC தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது? 
NFC தொழில்நுட்பம் செல்பேசியில் இருக்கிற Bluetooth முறையைப் போன்றது. NFC தொழில்நுட்பத்திற்கும், Blue tooth முறைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. Blue tooth தொழில்நுட்பத்தை செயற்படுத்த இரண்டு செல்பேசிகளிலும் அவற்றை இயக்க வேண்டும். பிறகுதான் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு Data-க்களை பறிமாறிக்கொள்ள முடியும். 
ஆனால் NFC Technology அப்படியல்ல.. தொட்டாலே போதும் ஒட்டிக்கொள்ளும்.

உங்கள் Smart Phoneகளை ஒன்றுடன் ஒன்று உரசும்படி அருகருகே கொண்டு சென்றாலே தகவல்கள் பரிமாறப்படும். 
Wi-Fi தொழில்நுட்பம்
Wi-Fi தொழில்நுட்பத்தின் வழித்தோன்றலே இந்த NFC தொழில்நுட்பமாகும். கம்பி இல்லா இணையத்தொடர்பை சாத்தியமாக்கிய Wi-fi தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்ததே இந்த தொழில்நுட்பமும். தற்போது நீங்கள் கணினி, Laptop, Tablet PC, Mobile, Reader போன்றவைகளில் கம்பி இல்லா இணையத்தைப் பயன்படுத்துகிறீர்கள் அல்லவா? இந்த இணைப்பிற்கு பயன்படும் தொழில்நுட்பமே இந்த Wi-Fi தொழில்நுட்பந்தான். 
இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான் நீங்கள் பயன்படுத்தும் செல்பேசி நெட்வொர்க் நிறுவனங்கள், Aircel, Airtel, Relience, tata tocoma, போன்ற நிறுவனங்கள் உங்கள் செல்பேசி இணைப்போடு, இணையத்தைப் பயன்படுத்தும் வசதியையும் கொடுக்கிறது. 
Wi-Fi Technology வழிவந்த தொழில்நுட்பம் NFC.  NFC தொழில்நுட்பம் செயல்பட காரணம் உங்கள் Smart Phone-ல்  இருக்கும் முக்கிய Transistor கள்தான். அவற்றில் முக்கியமானவையாக , Felica, ISO/IEC போன்ற டிரான்சிஸ்டர்களைச் சொல்லலாம். 
NFC TEchnology -யின் முக்கிய பயன்கள் என்ன? 
இவற்றின் பயன் ஒரு Smart Phone லிருந்து மற்ற Smart Phone -க்கு தகவல்களை பறிமாறிக்கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை.. கூடுதலாக நிறைய பயன்களும் இருக்கிறது. 
Credit கார்ட்டாக பயன்படுத்தலாம்
நீங்கள் ஒரு கடையில் shopping செய்கிறீர்கள்.. வழக்கமாக பணமாகவோ அல்லது கிரடிட் கார்ட் கொடுத்தோ பணத்தை செலுத்துவீர்கள் அல்லவா?  கிரடிட் கார்ட்டை  கொடுக்கும்போ கடைக்கார்ர் என்ன செய்வார். அதை வாங்கி அதற்குரிய இயந்திரத்தில் ஒரு முறை உரசி எடுத்தால் போதும். நீங்கள் பெற்றுக்கொண்ட பொருளுக்குரிய தொகையை உங்கள் கிரடிட் கார்டிலிருந்து எடுத்துக்கொள்ளும். 
NFC Technology
NFC Technology
அதுபோலவேதான் அதாவது உங்கள் செல்பேசியை கிரடிட் கார்ட்டுக்குப் பதில் அருகில் கொண்டு சென்றாலே போதும்.. உங்கள் கணக்கில் உள்ள பணம், நீங்கள் செலுத்தவேண்டியவருக்கு மாறிவிடும். இதற்கு நீங்கள் password அமைத்துக்கொள்வதால் பலமடங்கு உங்கள் பணத்திற்கு பாதுகாப்பு. கிரடிட் கார்ட்டை இந்த முறையும் உங்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும். 

கிரடிட் கார்ட் மட்டுமல்ல, Electronic Checque, Mobile Banking 
ஆம் நண்பர்களே கிரடிட் கார்டாக மட்டுமல்ல... எலக்ட்ரானிக் செக், மொபைல் பேங்கிங் போன்ற பயன்மிக்க செயல்பாடுகளையும் இதன் மூலம் செய்துகொள்ள முடியும். 
பிரபல google wallet -ம் இந்த NFC தொழில்நுட்ப அடிப்படையிலேயே இயங்குகிறது. 
ஒரு விசித்திரம்: 
விளம்பரங்களை சுவரொட்டியில் பார்க்கும்போதே  விளம்பரத்துக்குரிய பொருளை நீங்கள் அங்கிருந்தே வாங்க முடியும். எப்படி?
நாம் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளை வாங்கும்போது அதில் Barcode இருக்கும் இல்லையா? பொருட்களின் விலை மற்றும் சில தகவல்கள் அந்த பார்கோடில் இருக்கும். Barcode Scanner பயன்படுத்தி அவற்றின் மீது ஒரு முறை ஒளியை செலுத்தினால் அப்பொருளுக்குரிய விலையானது விலைப்பட்டியில் வந்துவிடும் அல்லவா? 
படத்தைப் பாருங்கள்... சுவரில் இருக்கும் விளம்பரத்தின் அருகே செல்போனை கொண்டு சென்றதும் நடக்கும் மாயாஜாலத்தை...!
NFC TECHNOLOGY
NFC Technology
அதுபோன்றதொரு தொழில்நுட்பம்தான் NFC யிலும் இருக்கிறது. அதற்கு NFC Tag என்று பெயர்.. விளம்பரத்தில் NFC Tag அச்சிட்டிருப்பார்கள்.. நீங்கள் உங்கள் Smart Phone கொண்டு அதன் மீது இலேசாக தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் வைத்தெடுத்தாலே போதும். அந்த விளம்பரத்துக்குரிய அனைத்து விபரங்களும் உங்கள் Smart Phone-க்கு வந்துவிடும். பிறகு உங்கள் போனிலிருந்து அப்பொருளை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்
பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் இவ்வாறான வியாபார நடைமுறை சாத்தியப்பட்டிருக்கிறது. ஜப்பானில் இவ்வாறு NFC தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தியே செயல்படும் கடைகளும் இருக்கிறது. அந்த கடைகளில் பொருளுக்குரிய NFC TAG அச்சிடப்பட்ட விளம்பரங்களை மட்டுமே சுற்றிலும் ஒட்டி வைத்திருப்பார்கள். அங்கு சென்று வேண்டிய பொருளின் NFC Tag மீது உங்கள் Smart Phone-வை வைத்தெடுத்தாலே போதும். 
அதிலிருந்து தகவல்கள் அனைத்திலும் உங்கள் ஸ்மார்ட்போனில் ஏறிவிடும். பிறகு உங்களுக்குத் தேவையானவற்றிற்கு அங்கேயே உங்கள் போன் மூலம் பண மாற்றம் செய்துவிட்டு, உங்கள் வீட்டு முகவரியைக் கொடுத்தால் போதும்.. உங்கள் வீடு தேடி பொருட்கள் வந்துவிடும். 
பிரான்ஸ் நாட்டின் விமானநிலையத்தில் இத்தொழில்நுட்பத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள். உங்களிடம் Smart Phone மட்டும் இருந்தாலே போதும். அதில் NFC தொழில்நுட்பத்தின் மூலம் Check-in செய்யலாம். அதிலேயே உங்கள் Boarding Pass எல்லாம் இருக்கும். உலக அரங்கில் முதன் முதலாக இந்த தொழில்நுட்பத்தை இந்த விமானநிலையத்தில் அரங்கேற்றியிருக்கிறார்கள்.
ஒரே ஒரு SmartPhone  போதும். அது உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடும். 
ஒவ்வொரு தொழில்நுட்ப முறைக்கும் ஒரு விதிமுறை, வரையறைகள் இருக்கும். அப்போதுதான் அது சரிவர கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும். NFC Technology விதிமுறையை வகுத்து வெளியிட்டவர்கள் தொழில்நுட்ப வர்த்தகத்தில் முன்னணி வகிக்கும் SONY, PHILPS, NOKIA நிறுவனங்களே..!
NFC Technology -ன் அடிப்படை விதி: 
எலக்ட்ரான்கள்  ஒரு ஊடகம் வழியாக பாயும்போது ஒரு மின்காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும்போது Electoronகள் அதன் வழியாக பயணிக்கும். இந்த இரட்டை இயக்கத்தை Inductive Coupling என்று சொல்வார்கள். இதன் அடிப்படையில் அமைந்தது தான் NFC தொழில்நுட்பம். 
இத்தொழில்நுட்பத்தின் ரகசியம் என்று சொன்னால் ரேடியோ அலைவரிசைதான். Radio Frequency Identification என்ற நுட்பம்தான் இத்தகவல் பரிமாற்றத்தின் பரம ரகசியம். இதில் இரண்டு வகைகள் இருக்கிறது. 1. Basic RFID, 2. Active RFID  இந்த இரண்டிற்குமுள்ள வித்தியாசம் Active RFID   என்பது பேட்டரியால் charge செய்யப்பட்டு இயங்கும். 
இந்த NFC தொழில்நுட்பம் 13.6 MHz அலைவரிசையில் இயங்கக்கூடியது. ஒரு வினாடிக்கு 106லிருந்து 424 Kilo bite அளவிலான தகவல்களை பரிமாற்றும் தன்மை கொண்டது. இத்தொழில்நுட்பத்தில் மூன்று வகை உள்ளது. 
1. Read and write. 
அதாவது விளம்பரங்களில் உள்ள இணைப்பை வாசிக்க இம்முறை பயன்படும். 
2. Peer to Peer .  
 அதாவது இரண்டு செல்போன்களுக்கு (Smart Phone) இடையே தகவல் பரிமாற்றம் செய்யப்படும் நுட்பம். சாதாரணமாக நாம் போன்களில் Photos, Visiting card, songs, videos ஆகியவைகளைப் பயன்படுத்துவதைப் போன்றது.
3. Card Emulation Mode. 
 இந்த நுட்ப முறையானது Credit Card பயன்பாடு, டிக்கெட்கள் வாங்குவது, மற்ற பொருட்கள் வாங்குவது போன்ற அதிமுக்கிய விஷயங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. 
நாளடைவில் இந்த NFC தொழில்நுட்பமானது உலகெங்கும் பரவி வியாபிக்கும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் தமது ஆச்சர்யம் தரக்கூடிய முடிவுகளை வெளியிட்டுள்ளனர். 
விரைவிலேயே நம் நாட்டிலும் இந்த NFC தொழில்நுட்பம் பரவிவிடும். நாம் எங்கு சென்றாலும் நம்முடைய Smart போன் ஒன்றை எடுத்துச் சென்றாலே போதுமானது. சென்ற இடத்தில் நமக்கு என்னத் தேவை அவற்றை இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெற முடியும். அதாவது கையிலே காசு வாயிலே தோசை என்று சொல்கிறோமே.. அதுபோல கையிலே செல்போன் பையிலே பொருட்கள் என மாற்றிச்சொல்லும் அளவுக்கு இத்தொழில்நுட்பம் பரவும் என்பதில் சந்தேகமில்லை..
மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.  உங்களிடம் ஒரே ஒரு SmartPhone  இருந்தால் போதும். அது உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடும். இந்த வீடியோவைப் பாருங்கள். பதிவின் சாராம்சம் முழுவதையும் ஆங்கிலத்தில் விளக்கியிருக்கிறார்கள். NFC Technology-யைப் பற்றியும் செயல்படும் விதத்தையும் இதில் காணமுடியும்.

கணினி சார்ந்த பொது அறிவுத் தகவல்கள் - Computer related GK!

  1. (CD) குறுந்தகடை கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ரஸ்ஸல்.
  2. (WWW) World Wide Web – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ.
  3. “Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்ந்ததாகும்.
  4. “புராஜெக்ட் சிகாகோ” என்பது விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும்கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க ஹாக் ஐ (Hawk Eye) என்ற பிரபல ஐ டி தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.
  5. C++ எனும் கணினி மொழியை வடிவைமத்தவர் - பியான் ஸ்ட்ரூ ஸ்டெரெப்.
  6. Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது ஐ.பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
  7. Power by Intellect Driven by Values - என்ற முத்திரை வாக்கியம் பிரபல இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாக்கியம்.
  8. Uniform Resource Location என்பதன் சுருக்கம்தான் URL முகவரியாகும்மைக்ரோபுராசஸர் என்பதுதான் கணியின் மூளை என்றழைக்கப்படுகிறது.
  9. Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம்தான் VIRUS என்ற பிரபல வார்த்தையாகும் .
  10. World wide Web எனபதன் துவக்க கால பெயர் -  என்க்வயர்.
  11. ஆப்பிள் கணினியைத் துவக்கியவர் - ஸ்டீவ் வோஸ்னியாக்.
  12. இந்தியாவில் ஐ.டி சட்டம் நிலுவையில் வந்த வருடம் - 2000 ஆம் ஆண்டு.
  13. இந்தியாவில் மிக அதிகம் மென்பொருள் ஏற்றுமதி  செய்யும் நிறுவனம் -  டி.சி.எஸ்.
  14. இரண்டு முறை நோபல் பரிசு (Nobel Price) பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்.
  15. இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்
  16. இன்டல் கம்பெனி நிறுவனர்கள் – கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ்கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் – ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்.
  17. உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
  18. Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்.
  19. உலகின் முதல் கணினி விளையாட்டு Space War என்ற விளையாட்டாகும்.
  20. விலை குறைந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் நொவாட்டியம் என்ற நிறுவனமாகும்.
  21. உலகின் முதல் மடிக்கணினி (First Laptop in the world) - டைனாபுக் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
  22. உலகின் முதல் மைக்ரோபுராசஸர் இன்டெல் (World First Micro Processor) என்பதாகும்.
  23. கணினி அறிவியலின் தந்தையார் - ஆலன் டூரிங்.
  24. கணினி மவுஸை (Computer Mouse)கண்டுபிடித்தவர் – மக்ளஸ் எங்கன்பர்ட்.
  25. கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் – ஜாக் கில்பி.
  26. கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் “புன்னகை தவழும் முகம்” எனபதைக் குறிக்க    எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர். 
  27. கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் – அலன் ஷூகர்ட்.
  28. கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி – மதர் போர்ட்
  29. கணினியின் ஈதர் நெட்டை (Ether NET) கண்டுபிடித்தவர் – ராபர்ட் மெட்காஃப்.
  30. கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்ர்ஜி ஃப்ரின்.
  31. கேமரா மொபைல் ஃபோனை (Camera mobile phone) கண்டுபிடித்தவர் – ஃபிலிப் கான்.
  32. தனது 20 ஆம் வயதிலேயே லினக்ஸ் உருவாக்கிய விஞ்ஞானி - லினஸ் தோர்வாட்ஸ்.
  33. பால் பிரெயினார்ட் என்பவை இந்தியாவின் சூப்பர் கம்யூட்டர் (Super Commuter) என அழைக்கப்படுகின்றன.
  34. பிரபல விக்கிபீடியா வெப்சைட்டை உருவாக்கியவர் - ஜிம்மி வேல்ஸ்.
  35. பிரபலமான (Dos) எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் - டிம் பாட்டர்ஸன்.
  36. பிரபலமான பேஜ் மேக்கர் எனும் பப்ளிஷிங் சாஃப்ட்வேரை  (Publishing Software) உருவாக்கியவர் - ஃபால் பிரெயினார்ட்.
  37. பெண்டியம் புராசஸர்களின் தந்தை (The father of the Pentium processors) எனப்படும் இந்திய விஞ்ஞானி - வினோத் தாம்.
  38. மிக வேகமான சூப்பர் கணினிகள் “ப்ளூ ஜூன்” என்றழைக்கபடுகின்றன.
  39. முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் – டெட் ஹோப்.
  40. மைக்ரோபுராசஸரை நினைவகத்தோடு (Memory) இணைக்கும் ஒயர்கள் Bar என்ற பெயரில் அழைக்கபடுகின்றன.
  41. லோட்டஸ் 1-2-3 எனும் மொழியை கண்டுபிடித்தவர் - மிச் கபோர்.
  42. ஹாட் மெயிலை (Hot Mail) உருவாக்கிய இந்திய ஐ.டி விஞ்ஞானி - ஸபீர் பாட்டியா.
  43. ஹெர்பர்ட் சைமன் துவங்கிய கணினி அறிவியல் பிரிவின் கிளைதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (artificial intelligence) என்பதாகும்.

பாஸ்வேர்டு பரிசோதனை இணையதளம்!


இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான். பாதுகாப்பான பாஸ்வேர்டின் அவசியம், எவராலும் உடைக்க முடியாத வலுவான பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த வரிசையில் முதல் பதிவான
பாஸ்வேர்டு குணாதிசயங்களில்பாஸ்வேர்டுக்கான இலக்கன குறிப்புகளை காணலாம்.மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் பாஸ்வேர்டு தொடர்பான பயனுள்ள தளங்களின் வரிசையில் முதல் தளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

பாஸ்வேர்டு பரிசோதனை.

பாஸ்வேர்டு பற்றி தெரிந்து கொண்டாயிற்று!. அடுத்து உங்கள் பாஸ்வேர்டு எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது என தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்த கேள்விக்கு பதில் தருகிறது, இதே கேள்வியை பெயராக கொண்ட இணையதளம்: ஹவ் செக்யூர் ஈஸ் மை பாஸ்வேர்ட்?
இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உங்கள் பாஸ்வேர்டை சமர்பித்தால், அதன் பல்வேறு அம்சங்களை அலசி பார்த்து அந்த பாஸ்வேர்டு எந்த அளவுக்கு பாதுகாப்பாடது என இந்த தளம் அறிக்கை தருகிற‌து.

நேர்மையான தளம்.

மிகவும் எளிமையான தளம். உங்களை பாஸ்வேர்டின் தன்மையை பரிசோதித்து சொல்லும் இந்த தளம் கொஞ்சம் நேர்மையானதும் கூட! பாஸ்வேர்டை சமர்பிக்கும் முன் கொஞ்சம் யோசிக்க சொல்கிறது இந்த தளம். ‘இந்த தளம் உங்கள் பாஸ்வேர்டை திருடிக்கொள்ளலாம்’ என்னும் எச்சரிக்கை வாசகம் முகப்பு பக்கத்திலேயே இடம் பெறுகிறது.இப்படி அதிர்ச்சி அளித்தாலும், இல்லை ,நாங்கள் அதை செய்யப்போவதில்லை,ஆனால் உங்கள் பாஸ்வேர்டை எங்கே எல்லாம் டைப் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள் என்று அறிவுறுத்துகிற‌து.

பாஸ்வேர்டு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனும் இந்த குறிப்பை படித்த பிறகு இதில் பாதுகாப்பு சோதனைகாக பாஸ்வேர்டை சமர்பித்து பார்க்கலாம்.அல்லது, உண்மை தான் ,எதற்கு ரிஸ்க் என்று பாஸ்வேர்டை சமர்பிக்காம‌லும் இருக்கலாம்.

எப்படி பார்த்தாலும்,பாஸ்வேர்டு எளிதில் கள‌வாடப்படலாம் என அறிந்திருப்பதே முக்கியம்.
———-
https://howsecureismypassword.net/

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன!


புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.காரணங்கள்:மிகக் குறைந்த Hard Disk Spaceநிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.Data Corruptionஅதிக சூடாகுதல் Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.Hardware Problems Driver பிரச்சினைஇந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.Reboot :உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.
 
 
Hard Disk Space இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.Hard drive corrupted or fragmentedஇந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும்.Run ScanDisk – இது Hard Disk – இல் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.இதை செய்ய – My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Checkஇதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.Run Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.தேவை இன்றி இயங்கும் Programsசில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும்.கணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும், இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.Virus பிரச்சினைகள்இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.Device பிரச்சினைகள்உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் கணினியை மெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல்மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.RAM Memory Increase செய்தல்உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.Registry Cleaner பயன்படுத்துதல்பெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.குப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி? என்ற பதிவில் CCleaner என்ற Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.Operation System இன்ஸ்டால் செய்தல்மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.Hardware பிரச்சினைகள்மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.பழைய கணினிஉங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம். சற்றே பெரிய பதிவாகினும் உங்களுக்கு கட்டாயம் பயன்படும் என்று நினைக்கிறேன்

கணினியில் ஒரே சாப்ட்வேரில் அனைத்து வகை (70+ formats) பைல்களையும் எளிதாக ஓபன் செய்ய !



 
 
நம்முடைய கணினியில் ஒரு சில பைல்களை ஓபன் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட பைல்களை மட்டுமே ஓபன் செய்ய முடியும். சில பார்மட் பைல்களை ஓபன் செய்ய வேண்டுமானால் அதற்க்கான மென்பொருள் கட்டாயம் நம் கணினியில் இருந்தால் மட்டுமே நாம் அதை திறக்க முடியும். இதற்காக நாம் ஒவ்வொரு பைல்களை ஓபன் செய்வதற்கும் அந்தந்த மென்பொருள் இணைப்பது தேவையில்லாத வேலை இதனை போக்கவே ஒரு ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது
.
மென்பொருளின் பயன்கள்:
  • இந்த மென்பொருள் மூலம் 70+ வகை பைல்களை சுலபமாக ஓபன் செய்து கொள்ளலாம்.
  • .vcf , .srt, .sql போன்ற அறிய வகை பைல்களையும் இதில் ஓபன் செய்து கொள்ளலாம்.
  • டோரென்ட் பைல்களையும் இதன் மூல ஓபன் செய்ய முடியும்.
  • இதன் மூலம் பிடிஎப் பைல்களை பிரிண்ட் எடுக்கவும் முடியும்.
  • .zip, .rar வகை பைல்களை Extract செய்யும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.
  • மைக்ரோசாப்டின் வேர்ட் பைல்களையும் பவர் பாய்ன்ட் பைல்களையும் கூட இந்த மென்பொருள் மூல ஓபன் செய்து கொள்ளலாம்.
  • இந்த மென்பொருள் மூலம் இந்த வகை பைல்களை ஓபன் செய்து பார்க்க மட்டும் தான் முடியும் இதில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது.
  • இணைய புத்தகங்கள் வகையான .epuf திறக்க முடியாதது கொஞ்சம் ஏமாற்றமே.
  •  

ஓபன் செய்யப்படும் பைல்களின் வகைகள் 
  • Code Files (.c, .cs, .java, .js, .php, .sql, .vb) 
  • Web Pages (.htm, .html) 
  • Photoshop Documents (.psd) 
  • Images (.bmp, .gif, .jpg, .jpeg, .tiff) 
  • XML Files (.resx, .xml) 
  • PowerPoint® Presentations (.ppt, .pptx) 
  • Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv) 
  • Microsoft® Word Documents (.doc, .docx) 
  • 7z Archives (.7z) 
  • SRT Subtitles (.srt) 
  • RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f) 
  • Icons (.ico) 
  • Open XML Paper (.xps) 
  • Torrent (.torrent) 
  • Flash Animation (.swf) 
  • Archives (.jar, .zip) 
  • Rich Text Format (.rtf) 
  • Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt) 
  • Apple Pages (.pages) 
  • Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx) 
  • Comma-Delimited (.csv) 
  • Outlook Messages (.msg) 
  • PDF Documents (.pdf) 
  • vCard Files (.vcf) 
Download - Free Opener
 
 

உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்


 
 
 
 
வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின்  மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.

இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.



 
இந்த இணைய Newspaper Map பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம். 

இந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.
 
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top