டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் பரிசுத்தொகையாக தலா ரூ. 7 கோடியே 75 லட்சம் வழங்கப்படுகிறது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு
பிரிட்டனைச் சேர்ந்த பீ ட்டர் ஹிக்ஸ் (84 வயது), பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிராங்கா எங்க்லர்ட் (80 வயது) ஆகியோர் இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரபஞ்சம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத 16 துகள்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் 17-ஆவதாக மேலும் ஒரு துகள் இருந்தாக வேண்டும் என்று 1964-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும்...
Showing posts with label நோபல் பரிசு!. Show all posts
Showing posts with label நோபல் பரிசு!. Show all posts
Saturday, 26 October 2013
Monday, 14 October 2013
பொருளாதாரத்துக்கான நோபல்பரிசு : 3 பேர் அறிவிப்பு!
2013-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் கூட்டாக பெறுகின்றனர். யூஜின் பாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சென், மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற மூன்று பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். சொத்துமதிப்பை நிர்ணயிக்கும் கொள்கையை கண்டுபிடித்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நோபல் பரிசு ஸ்விடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இருந்து அறிவிக்கப்பட்டத...
Friday, 11 October 2013
அமைதிக்கான நோபல் பரிசு!
2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்தது. O.P.C.W அமைப்பு என்பது ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசானது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.7.70 கோடி ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டதாகும்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகளைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான...
பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!
கனடா நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் முன்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், ரசாயனம், பொருளாதாரம், அமைதிக்கான சமூக சேவை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மருத்துவம், இயற்பியல், ரசாயனத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடா நாட்டை சேர்ந்த அலைஸ் முன்ரோவுக்கு(வயது 82) அறிவிக்கப்பட்டது.
சிறுகதை எழுத்தாளரான முன்ரோ சிறு நகரங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் ஏழைகளின் துயரங்களை மையமாக வைத்து ஏராளமான கதைகளை எழுதியுள்ளார்.
இவரது படைப்புகளுக்கு ஏற்கனவே புக்கர் விருது,...
Thursday, 10 October 2013
ஆலிக் மென்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!
2013ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆலிக் மென்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்வீடனில் ஸ்டாக் ஹோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆலிக் மென்ரோ தேர்வு செய்யப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை மாலை தேர்வுக் குழு அறிவித்தது.
...
Wednesday, 9 October 2013
வேதியியல் துறையில் 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!
வேதியியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் மார்டின் கார்பிளஸ், மைக்கேல் லெவிட், ஏரி வால்ஷெல் ஆவார்கள். ரூ.7.75 கோடி ரொக்கப்பரிசை 3 பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.மூலக்கூறு வடிவமைப்பு மாதிரி ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நோபல் பரிசு வழங்குகிற ராயல் சுவிடிஸ் அறிவியல் அகாடமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘மார்டின் கார்பிளஸ், மைக்கேல் லெவிட், ஏரி வால்ஷெல் ஆகிய 3 விஞ்ஞானிகளும் ரசாயன செயல்பாடுகளை புரிந்து கொள்ளவும், யூகிக்கவும் பயன்படுகிற விதத்தில் கணினிகளை மேம்படுத்த அஸ்திவாரம் போட்டுள்ளனர்; நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கிற...
நோபல் நாயகர்கள்: அவிழ்ந்தது மூலக்கூறுகளின் மர்மம்!
ராண்டி டபிள்யு. ஷெக்மேன்
தாமஸ் சி. சுதோப்
ஜேம்ஸ் இ. ராத்மேன்
உடலில் உள்ள செல்கள் எப்படி மூலக்கூறுகளை உரிய இடங்களுக்கு, உரிய நேரத்துக்கு அனுப்பிவைக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக மூன்று அமெரிக்கர்களுக்கு உடல்இயக்கவியல் மருத்துவத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் இ. ராத்மேன் (62), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராண்டி டபிள்யு. ஷெக்மேன் (64), ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் சி. சுதோப் (57) ஆகியோர் விருது பெறுகின்றனர்.
ஒரு செல்லில் அதன் மூலக்கூறு கள் சிறு பொதிகளாகச் சுற்றிக்கொண்டே யிருக்கின்றன. அதை வெசிகிள்கள் என்று அழைப்பர்....
Tuesday, 8 October 2013
இயற்பியலுக்கான நோபல் பரிசு!
'கடவுளின் அணுத்துகள்' ஆய்வுக்காக பீட்டர் ஹிக்ஸ், பிரான்காய்ஸ்
எங்லர்ட்டுக்கு இயற்பியலுக்கான நோபல்
ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் ஹிக்ஸ் போசான் கொள்கை
ஆராய்ச்சிக்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் மற்றும்
பெல்ஜியத்தின் பிரான்காய்ஸ் எங்லர்ட் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று முதல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு
வருகிறது. நேற்று மருத்துவத்திற்கான பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ்
ரோத்மேன், ரான்டி ஸ்கேமேன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் சுதோஃப்
ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்த
பரிசை ஹிக்ஸ்...
Monday, 7 October 2013
2013-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு!
2013-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசை 3 பேர் பெறுகின்றனர்.
ஜேம்ஸ் இ ராத்மேன், ராண்டி டபள்யூ ஸ்கேமேன், தாமஸ் சி சுடஃப் பெறுகின்றனர்.
மனித உடலிலுள்ள செல்களில் இருந்து திரவம் அனுப்பும் முறையை கண்டுபிடித்ததற்கான நோபல் பரிசை பெறுகின்றனர்.
குறிப்பிட்ட செல்கள் உடலுக்கு தேவையான குறிப்பிட்ட திரவங்களை உற்பத்தி செய்கின்றன.
உற்பத்தி செய்யப்படும் திரவம் உடலில் எங்கு தேவை என்ற தகவல் செல்களுக்கு கிடைக்கும்.
தகவல் கிடைத்ததும் தேவையான பகுதிக்கு செல்லில் இருந்து திரவம் அனுப்பப்படுகின்றது. ...