
எனக்கும் மரணத்தைப் பற்றிப் படிப்பது என்றால் அலாதிப் பிரியம். பிறப்பு இயற்கை என்பது போல இறப்பும் இயற்கையே. என்னைப் பொறுத்தவரையில், மரணம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமே. மரணம் என்பது நாம் பிரபஞ்சத்தின் ஒரு நிலையை விடுத்து அடுத்த நிலைக்குச் செல்வதாகும். எமது வாழ்வின் விளைவாகவே எமது மரணமும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை. எமது வாழ்வில் நாம் செய்யும் நன்மை, தீமைகளிலேயே அது தங்கியிருக்கும்.
எமது வாழ்வு எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறதோ அதேபோல் மரணத்தின்போதான மரணத்தின் பின்னான அனுபவமும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதைக் கட்டுரைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எமது வாழ்வில் நாம்...