.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Saturday, 18 January 2014

உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர்...!

உலகில் நிறைய பேர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன், தொப்பை. இத்தகைய தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க பலர் பலவற்றை முயற்சித்திருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்ததாக இருக்காது. ஆனால் தினமும் தேன் மற்றும் பட்டை நீரை குடித்து வந்தால், நிச்சயம் தொப்பை மற்றும் உடல் பருமனானது குறைந்துவிடும் அதிலும் இதனை இரவு மற்றும் காலையில் குடித்து வர வேண்டும். இப்போது அந்த தேன் மற்றும் பட்டை நீரை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.  உடல் எடையை குறைக்கும் தேன் மற்றும் பட்டை நீர் . தேவையான பொருட்கள்: தேன் - 2 டீஸ்பூன்  பட்டை - 1 டீஸ்பூன்  தண்ணீர் - 1 கப் செய்முறை:  * முதலில் ஒரு பாத்திரத்தில்..........  தொடர்ந்து...

Thursday, 16 January 2014

உடல் எடையை குறைக்கும் பாதாம் சூப்....!

பாதாமைக் கொண்டு சூப் செய்து சாப்பிட்டால், அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவும். அதுமட்டுமின்றி இந்த சூப் வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். இப்போது அந்த பாதாம் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்... தேவையான பொருட்கள்: பாதாம் - 1/4 கப்  வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்  தண்ணீர் - 4 ...........     தொடர்ந்து இங்கே படிக்கலாம்.... உடல் எடையை குறைக்கும் பாதாம் சூப்.......

எச்சரிக்கை.!!!! நான்ஸ்டிக் குக்வேர் பயன்படுத்துபவர்களே..!

இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஃதுஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும்.....     தொடர்ந்து இங்கே படிக்கலாம்.... எச்சரிக்கை.!!!! நான்ஸ்டிக் குக்வேர் பயன்படுத்துபவர்களே..! ...

Thursday, 9 January 2014

காளிபிளவர் மொச்சை மசாலா...

காளிபிளவரை பகோடா செய்திருப்போம், உருளைக் கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்வோம். அதேப்போல, மொச்சைக் கொட்டையுடன் சேர்த்து பொறியல் செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.   செய்யத் தேவையானவை காளிபிளவர் - ஒரு பூ மொச்சைக் கொட்டை - 100 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் தேங்காய் துருவல் - அரை கப் செய்யும் முறை மொச்சைக் கொட்டையை குக்கரில் 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். காளிபிளவரை ஒவ்வொரு கிளையாக நறுக்கி  ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து...

Monday, 6 January 2014

ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன்,...

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!!!

நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம்....

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..! தேவையான பொருள்கள்:பாஸ்மதி அரிசி - 1 கிலோமட்டன் - 1/2 கிலோநெய் 250 கிராம்தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)பூண்டு - 100 கிராம்இஞ்சி - 75 கிராம்பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்பெரிய வெங்காயம் - 1/2 கிலோதக்காளி - 1/4 கிலோபச்சை மிளகாய் - 50 கிராம்எலுமிச்சை - 1பொதினா, கொத்தமல்லிதழை - கையளவுகேசரிப்பவுடர் - சிறிதளவுமுந்திரிப்பருப்பு - 50 கிராம்உப்பு - தேவையான அளவு   சமையல் குறிப்பு விபரம்:செய்வது: எளிது நபர்கள்: 4 கலோரி அளவு: NA தயாராகும் நேரம்: 15 (நிமிடம்)சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்) முன்னேற்பாடுகள்:1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்3. பாஸ்மதி அரிசியைக் கழுவி...

Sunday, 5 January 2014

சாப்பிடுவது எப்படி?

சாப்பிடுவது எப்படி? ஓட்டல்களில் அதுவும் பெரிய ஓட்டல்களில் சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அவை: < கத்தி, முள் கரண்டிகளுடன் சாப்பிடும்போது கத்தியை வலது கையிலும், முள் கரண்டியை இடது கையிலும் பிடித்துக் கொள்ள வேண்டும். < ஐஸ்கிரீமை கரண்டியால் எடுக்கும்போது உங்கள் பக்கமாக வெட்ட வேண்டும். சூப்பாக இருந்தால் எடுக்கும்போது கை உங்கள் புறத்திலிருந்து எதிர்ப்புறமாகப் போக வேண்டும். < சூடான பொருளை வாயால் ஊதிச் சாப்பிடக் கூடாது. < கப்பில் காபி சாப்பிடும்போது அதன் காதைக் கட்டை விரலாலும் மற்ற விரல்களாலும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆள்காட்டி விரலை அதன் காதில் நுழைத்துக் கொள்வது...

ஓட்ஸ் - பருப்பு - கஞ்சி

என்னென்ன தேவை? பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 1, கொத்தமல்லி மற்றும் புதினா - தலா 1 கைப்பிடி, இஞ்சி- பூண்டு விழுது - அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது? பயத்தம் பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அதில் தண்ணீர் விட்டு, ஓட்ஸை போட்டுக் காய்ச்சவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சின்ன  வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்,  தக்காளி, உப்பு போட்டு நன்கு  வதக்கவும். புதினா, கொத்தமல்லி...

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!! ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும்...

Saturday, 4 January 2014

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…

சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக்...

Wednesday, 1 January 2014

இல்லத் தரசிகளுக்கு....

இல்லத் தரசிகளுக்கு....பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும். * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப்...

கசப்பு அமுதம் பாகற்காய்...!!

 பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறாக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும். இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன்...

Tuesday, 31 December 2013

தயிரின் அற்புதங்கள் !!!!

தயிரின் அற்புதங்கள்''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே.நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற...

Monday, 30 December 2013

மீன் பிரியாணி - ரெடி!!!

மீன் பிரியாணி தேவையான பொருட்கள்: மீன் - 1/4 கிலோ அரிசி - 2 ஆழாக்கு வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன் புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன் தயிர் - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/2 குழிக் கரண்டி செய்முறை: * மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.* வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின்...

Sunday, 29 December 2013

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும். மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்....

Sunday Special - உருண்டை குழம்பு....

Sunday Special - உருண்டை குழம்பு.... தேவையான பொருட்கள் :கடலைபருப்பு - 1/2 கப்துவரம்பருப்பு - 1/2 கப்சோம்பு - 1/2 டீஸ்பூன்சின்னவெங்காயம் - 7(அ) பெரியவெங்காயம் - 1பட்டைமிளகாய் - 4மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்குழம்புக்கு தேவையானவை : புளி - எலுமிச்சையளவுமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்மல்லித்தூள் - 2 டீஸ்பூன்மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்தக்காளி - 1சின்னவெங்காயம் - 8உப்பு தேவையான அளவுசோம்பு தூள் - 1 டீஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்எண்ணெய் - 1 மேசைகரண்டிகொத்தமல்லி - சிறிதளவு செய்முறை :கடலை பருப்பு, துவரம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி உப்பு, பட்டை மிளகாய், சோம்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.வெங்காயத்தை பொடி பொடியாக...

Saturday, 28 December 2013

சமையலில் செய்யக்கூடாதவை… செய்ய வேண்டியவை….

சமையலில் செய்யக்கூடாதவை…* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. செய்ய வேண்டியவை….*...

Wednesday, 25 December 2013

விருந்து வித் வி.ஐ.பி!

ஆளுமைத் திறன் என்றதும் தகவல் தொடர்புத் திறன், உடல் மொழி, ஆடை நாகரிகம், தனி மனிதப் பண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர் உணவு அருந்தும் ‘டேபிள் மேனரிஸம்’ என்பதில் அக்கறை காட்டுகிறோம்? தினமும் மூன்று வேளை உணவருந்தும் பழக்கம்கொண்டவர்கள் நாம். அந்தச் சமயங்களிலும் ஸ்கோர் செய்ய டிப்ஸ் தருகிறார் கோவை காருண்யா பல்கலைக்கழக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் ஆன்ட்ரூ ஃபிராங்க்ளின் பிரின்ஸ்.உணவு மேஜை மீது தட்டு, கரண்டி போன்றவற்றால் ஒலி எழுப்பாதீர்கள். அது அநாகரிகமான பழக்கம்.வாய் நிறையச் சாப்பாட்டுடன் பேசாதீர்கள். ஒன்று, பேசிவிட்டுச் சாப்பிடுங்கள். அல்லது, சாப்பிட்டவுடன் பேசுங்கள்.உங்கள் உதடுகளை மூடிக்கொண்டு உணவை மெல்லுங்கள்.சாப்பாட்டை...

பழக்க வழக்கங்கள்...!

தலைவாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன? சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும். வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன? இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள் படையெடுக்கா வண்ணம் தடுக்க. முதலில் காகத்தைக் காகா என அழைத்து சாப்பாடு வைத்துப் பின்னர் நாம் சாப்பிடுவது ஏன்? உணவில் நஞ்சு கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறி...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top