.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 8 September 2013

மருத்துவ டிப்ஸ்! - குழந்தைகளுக்கு வாந்தி நிற்க...

* வேப்பம் பூ ரசம் அருந்தினால், வயிற்றில் உள்ள உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகள் நீங்கி விடும்.  * தினமும், அருகம் புல் சாறு குடித்து வந்தால், மலச்சிக்கல் இருக்காது.  * வசம்பை சுட்டு சாம்பலாக்கி, பொடி செய்து, தேனுடன் கலந்து குழந்தைகள் நாக்கில் தடவினால், வாந்தி நிற்கும். ...

"கரு கரு' கூந்தலுக்கு, காய் கறி வைத்தியம்!

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் உண்டா... கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர, தவம் கிடக்கும் பெண்களுக்காகவே இந்த கட்டுரை: * வைட்டமின், 'பி' குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும். * நெல்லிக்காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, ஊற வைத்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலையும் போக்கும்.  * அழுகின தேங்காயை தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, 'மசாஜ்' செய்தால், மயிர்க்கால்கள் வலுப்பெறும்.  * இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைக்கவும். இதை, மயிர் கால்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசினால், பொடுகு...

ஏற்றுமதி கொள்கையில் ரயில்வே முறைகேடு; புதிய ஊழல் ; ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு!

நாளுக்கொரு ஊழல் வெளி வருவதில் தற்போது ரயில்வேயில் ஏற்றுமதிக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகளை நடத்தி மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய தணிக்கை துறை கணக்காயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசை எதிர்க்க இதுவும் ஒரு ஊழலாக கிடைத்துள்ளது. சமீப காலமாக ஸ்பெக்ட்ரம், நிலக்கரி முதல் ஆணுறை விநியோகம் வரை மத்திய அரசு பல்வேறு ஊழல் முறைகேட்டில் சிக்கி பெரும் தலைக்குனிவை சந்தித்து வந்துள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் ஒரு புதிய ஊழல் பூதம் கிளம்பியிருக்கிறது. ரயில்வேயில் ஏற்கனவே பணியாளர் தேர்வு மையத்தில் நடந்த ஊழல் காரணமாக இந்த தேர்வு முழு அளவில் ரத்து செய்யப்பட்‌‌டது. இந்நிலையில் ரயில்வே ஏற்றுமதி சரக்கு கட்டணத்தில் குறைத்து வசூலித்து மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டு பயனீட்டுக்கு போக ஏற்றுமதியை ஊக்குவிக்கும்...

சிரியா மீது மூன்று நாட்களுக்கு தீவிர தாக்குதல் நடத்த "பென்டகன்' திட்டம்!

சிரியா நாட்டின் மீது, மூன்று நாட்கள், தீவிர தாக்குதலை நடத்த, அமெரிக்க ராணுவ தலைமையகமான, "பென்டகன்' திட்டமிட்டுள்ளது. சிரியா நாட்டில், அதிபர் பஷர் -அல்- ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்து விட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன.இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த சண்டையில், 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து உள்ளனர்; 7 லட்சம் பேர், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். ரசாயன ஆயுதம்:சிரியா நாட்டுக்கு...

ஈறுகளில் ரத்தக் கசிவா? உங்களுக்கான வீட்டு வைத்தியங்கள்!

  ஈறுகளில் வீங்கச் செய்து பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான் இரத்தக்கசிவு நோய். இது பெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதனாலேயே வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் உடல் ஆரோக்கியத்தை குன்றச் செய்யும் இதர நிலைகளான கர்ப்ப காலம், வைட்டமின் பற்றாக்குறை, ஸ்கர்வி என்றழைக்கப்படும் பல் வீக்க நோய், லுக்கேமியா என்றழைக்கப்படும் வெள்ளையணு புற்றுநோய், அல்லது இதர நோய்த்தொற்றின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். இது பெரும்பாலும் கொடிய நோய்களான இரத்தத்தட்டு நோய் அல்லது லுக்கேமியா போன்றவற்றின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதனை ஒழுங்கான முறையில்...

அன்ரோயிட் கைப்பேசிகளில் அழகான ஹோம் ஸ்கிரீனை உருவாக்க உதவும் அப்பிளிக்கேஷன்!

  தற்போது காணப்படும் கைப்பேசி இயங்குதளங்களில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ் இயங்குதளத்தில் அதனை வடிவமைத்தவர்களாலும், பயனர்களாலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதே இதற்கு காரணமாகும். இது தவிர பல புதிய அம்சங்களையும் இந்த இயங்குதளம் கொண்டுள்ளமையையும் குறிப்பிடலாம். தற்போது அன்ரோயிட் இயங்குதளத்தினை மேலும் பயனர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் விதமாக MyColourScreen எனும் தீம் (Theme) அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்பிளிக்கேஷன் கைப்பேசியின் ஹோம் ஸ்கிரீனை அழகுபடுத்துவதற்கும், விட்ஜெட்களை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி கையாள்வதற்கும் உதவுகின்றது. தரவிறக்கச்...

மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற இணையதளங்கள்!

கடவுளுக்கு அடுத்து இரண்டாவது மிக்பெரிய சேவை செய்துவரும் நல்ல எண்ணம் உள்ள  மருத்துவர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல காத்திருக்கிறார்கள். நம் நண்பர் இமெயில் மூலம் கேட்டிருந்தார் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு சொல்ல  ஏதாவது இணையதளம் இலவசமாக உள்ளதா என்று அதற்கான சிறப்பு பதிவு தான் இது.மருத்துவத்தை வைத்து காசு பார்க்க அலையும் கூட்டம் மத்தியில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம் என்று வந்துள்ளது இந்த  இணையதளங்களும். முதல் இணையதள முகவரி :  http://askmedicaldoctor.com ஆஸ்க் மெடிக்கல்  டாக்டர் இந்த இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு ஏற்படும் சிறு தலைவலியிலிருந்து காய்ச்சல்,இரத்த அழுத்தம், போன்ற அத்தனை பிரச்சினைகளையும் நீங்கள் கேள்வியாக கேட்கலாம் உடனடியாக அந்தந்தத் துறையில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் நமக்கு பதில் அளிக்கின்றனர்.  ...

செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் ஆய்வு விண்கலம்: இஸ்ரோ முடிவு!

  செவ்வாய் கிரகத்துக்கு வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆய்வு விண்கலம் அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் இந்தத் திட்டத்தை இஸ்ரோ வருகிற 11-ஆம் தேதி அறிவிக்க உள்ளது. பி.எஸ்.எல்.வி.- சி25 ராக்கெட்டின் உதவியுடன் நிகழாண்டு அக்டோபர் 21 முதல் நவம்பர் 19-ஆம் தேதிக்குள் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளி போன்ற சூழலில் விண்கலம் சோதிக்கப்பட்டுள்ளது. வெப்ப, வெற்றிடச் சோதனைகளையும் விண்கலம் கடந்துள்ளது. அதேபோல, பி.எஸ்.எல்.வி.- சி25 ராக்கெட்டை பொருத்தும் பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியுள்ளன. பி.எஸ்.எல்.வி.-சி25...

சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம் நாசா அனுப்பியது!

  சந்திரனின் வான்வெளி குறித்தும், அதை சுற்றிலும் தூசுகள் மிதப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அதற்காக ‘லாட்’ என்ற ஆளில்லா விண்கலம் தயாரிக்கப்பட்டது. அது நேற்று விர்ஜீனியா விண்வெளி தளத்தில் இருந்து மின்போவர் வி.ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் ‘ரோபோ’ மூலம் இயங்கும் சிறிய கார் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கலிபோர்னியாவில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ் பீட்டர் வோர்டன் உருவாக்கியுள்ளார். இது வருகிற அக்டோபர் மாதம் 6–ந்தேதி அதாவது இன்னும் 2 மாதத்தில் சந்திரனை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு தரை இறங்கும் ‘லாடீ’...

ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவரான இந்திய பெண்மணி!

அதிக தேர்தல் நிதி திரட்டி கொடுத்த இந்திய பெண்ணுக்கு உயர் பதவி அளித்து கொள்ரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவுக்கு ரூ.20 கோடி தேர்தல் நிதி திரட்டியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜிதா ராஜி.நிதி ஆலோசகரான இவர் பெர்னார்டு கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பும், கொலம்பியா வர்த்தக பள்ளியில் எம்.பி.ஏ. பட்டப் படிப்பும் படித்துள்ளார்.2012 ஆம் ஆண்டு இவர் ஒபாமாவுக்கான தேசிய நிதி துணைத் தலைவராக பதவி வகித்தார். கொலம்பியா வர்த்தக பள்ளியில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.   இந்நிலையில் அஜிதா ராஜிவை ஒபாமா, அமெரிக்கா அதிபரின் ஆணைய உறுப்பினராக நியமித்துள்ளார். இவரைப்...

2020ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் நடத்தும் வாய்ப்பை தட்டியது ஜப்பான்!

வரும்  ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ளது. 2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த டோக்கியோ, இஸ்தான்புல் மற்றும் மாட்ரிட் ஆகிய நகரங்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பானின் டோக்கியோ நகரம் தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த 1964ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.   ஸ்விட்சர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆண்டு செயல்குழுக் கூட்டம் கடந்த வெள்ளியன்று துவங்கியது. அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்சில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.  இதில் வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்...

சீமான்–கயல்விழி திருமணம் சென்னையில் இன்று நடந்தது! மினி ஆல்பம்!!

நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று காலையில் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.  சீமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து இருந்தார்.மணப்பெண் கயல்விழி தங்கநிற பட்டு சேலை அணிந்து இருந்தார்.தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து கொடுக்க அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணி வித்தார்.பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.   சீமான் தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top