1. உடல் சக்தி பெற
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
2. முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
3. முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
4. வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
5. இரத்த சோகையை போக்க
பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்.
6. பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
7. சேற்றுபுண் குணமாக
காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.
8. வெட்டுக்காயம் குணமாக
நாயுருவி இலையுடன் மஞ்சள்...
Friday, 23 August 2013
""சிந்தனை விருந்து"
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்.
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!
மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது. ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது!
முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி மௌனமாக இருப்பதுதான்!
அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன!
நன்றாகப் பேசுவது நல்லதுதான். ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு ...
இந்திய அரசியலமைப்பு - தகவல்கள்
இந்திய அரசியலமைப்பு - தகவல்கள்
இந்திய அரசியலமைப்பு
* இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது. * தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார். * டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். * இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. * இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.* இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும். * பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசிய லமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன. * இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த...
சிறப்பான சிந்தனைகள் பத்து!
சிறப்பான சிந்தனைகள் பத்து!
படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
...
பழமொழிகள் சில...
பழமொழிகள் சில...
அகல உழுகிறதை விட ஆழ உழு.
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
போதுமென்ற மனமே பொன் செய் மருந்து.
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பசியுள்ளவன் ருசி அறியான்.
மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது.
பதறாத காரியம் சிதறாது.
எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம். நிழலின் அருமை வெயிலில் தெரியும். ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
வாய் சர்க்கரை கை...
ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு
பூக்கள்.அரளிச் செடியிலும்.இருண்ட பௌர்ணமி.அட...சந்திர கிரகணம்.வறுத்த மீன்.மடித்த காகிதத்தில்"உயிர்களைக் கொல்லாதீர்" வாசகம்.சுமக்க விரும்பியதென்னவோபுத்தகப் பையை.தீப்பெட்டிச் சிறுமி.ரேசன் கடையில்அரிசி கிடைத்தது.எறும்புகளுக்கு மட்டும்.உலகெங்கும்ஒரே மொழியில் பேசும்மழை.பால் குடித்த பிள்ளையாரைஏக்கமாய் பார்க்கும்பசித்த சிறுமி.சாத்தான் வேதம் ஓதியது.சிகரெட் பெட்டியில்எச்சரிக்கை.கொட்டும் மழை.எரியும் மனதுவிற்றுவிட்ட நிலம்.வானத்துக்குள் பிரவேசித்த இன்ப வெள்ளத்தில்...ஊஞ்சல் சிறுமி
பூங்காவில் ஒரு நேர்காணல்...மலர்களோடு!
தரையைத் தொடும்வரை ஊஞ்சலாக்கி மகிழ்விக்கிறதே ஆலம் விழுதுகள்!...
மூன்று என்ற சொல்லினிலே...
மூன்று என்ற சொல்லினிலே...
மிகக் கடினமானவை மூன்றுண்டு:1. இரகசியத்தை காப்பது.2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:1. இதயத்தால் உணர்தல்.2. சொற்களால் தெரிவித்தல்.3. பதிலுக்கு உதவி செய்தல். மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:1. சென்றதை மறப்பது.2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது. இழப்பு மூன்று வகையிலுண்டு:1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு. உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.
...
பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு!
பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு
தொகுப்பு -I
1.பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக ஆன ஆண்டு?
2.கொடிகாத்த குமரன் தடியடிபட்டு மரணமடைந்த ஆண்டு?
3.தமிழ்நாட்டில் காவேரி ஆறு ஏற்படுத்தும் நதித் தீவு?
4.தக்கோலம் போர் நடந்த ஆண்டு?
5.டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
6.புள்ளலூர் போர் நடந்த ஆண்டு?
7.சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட
ஆண்டு?
8.தமிழில் வெளியான முதல் வார இதழ்?
9.தந்தை பெரியார் மறைந்த ஆண்டு?
10.தமிழ்நாட்டில் நான்காவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு?
பதில்கள்:
1.1938, 2.1932, 3.ஸ்ரீரங்கம், 4.கி.பி.949, 5. 1987,
6.கி.பி.620, 7.1975, 8.தினவர்த்தமானி, 9.1973, 10.1901.
தொகுப்பு -II
1.கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலையை வடிவமைத்தவர் யார்?
2.தமிழ் இலக்கியங்கள் அயல்நாடு வணிகரைக் குறிப்பிடும்
பெயர் என்ன?
3.முதலாம் மகேந்திரவர்மனின் மகன் யார்?
4.தமிழ்நாட்டின்...