.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 4 October 2013

Finger Print தொழில்நுட்பத்துடன் வருகிறது iPad 5!

 மொபைல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone 5S, iPhone 5C எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பிங்கர் பிரிண்ட் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள iPad 5 இனை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதில் அப்பிளின் புதிய 64-bit Apple A7 Processor மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது....

செவ்வாய்க் கிரகத்தில் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!

செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை குடியேற்றும் முகமாக நீர் இருப்பதையும், ஏனைய வளங்களையும் கண்டறியும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது Supervolcanoes எனப்படும் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரப் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.  மேலும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு செவ்வாயில் இடம்பெற்றிருக்கலாம் என நம்புவதாக Michalski எனும் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.           ...

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.!....... விமர்சனம்

தமிழ் சினிமாவில் இது விஜயசேதுபதி நேரம் போல… சமீபத்திய அவர் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை பிடித்துக் கொள்கிறது. படத்தில் கதையிருக்கிறதா… லாஜிக் இருக்கிறதா… நடிப்பு இருக்கிறதா… அது இருக்கிறதா… இது இருக்கிறதா… என்றெல்லாம் கேட்காமல் காசு கொடுத்து பார்க்கிறவன் ரசித்து விட்டு போகிறானா… பணம் போட்டு படம் எடுத்தவன் வசூலை வாரிக் கொள்கிறானா என்று மட்டும் பார்த்தால் இப்போதைய தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த ஓட்டும் விஜயசேதுபதிக்குத்தான் விழும்போல… ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ படத்தின் பெயர் என்னவோ தூய தமிழில் இருந்தாலும் படம் முழுக்க வசனங்கள் மெட்ராஸ் மொழி பேசுகிறது. காலையில் தொடங்கி ராத்திரி வரைக்கும் குடித்து விட்டு சும்மா ஊதாரியாக...

ஆஹா!! ஜாலி!!!

'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்றவற்றிற்கு, குறைந்த வட்டியில் கடன்;- நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், உற்பத்தி பொருட்களின் தேக்கத்தை போக்கவும், 'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்றவற்றிற்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குமாறு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ஆயுத பூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடத் தயாராகும் மக்கள், புதிய பொருட்களை வாங்க, இதன் மூலம் வழி ஏற்பட்டு உள்ளது. நுகர்வோர் சாதனங்களுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, குறிப்பிட்ட தொகையை பங்கு மூலதனமாக வழங்கும்.கூடுதல் மூலதனம்:  வங்கிகளுக்கு நடப்பு நிதியாண்டில், பங்கு மூலதனமாக, 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் தெரிவித்தது. இதற்கும் மேலாக, தற்போதைய அறிவிப்பின்படி, பொதுத் துறை வங்கிகளுக்கு,...

உப்புமூட்டை வியாபாரியும்... இறைவனும்.(நீதிக்கதை)

ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவன் இருந்தான்...அவனுக்கு முன்னைப்போல வியாபாரம் ஆகாததால் வறுமையில் வாடினான். அவன் இறைவனை நோக்கி "ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்தை குடுக்கிற" என்று கேட்டுவிட்டு தன் கழுதையின்மேல் உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊர் சந்தைக்கு சென்றான்.ஆனால் வழியில் பெரிய மழை பெய்து உப்பு முழுவதும் கரைந்து போனது..." உன்னை அவ்வளவு வேண்டியும்,,ஏழையான என் வயிற்றில் இப்படி அடித்துவிட்டாயே' என இறைவனைத் திட்டினான். பின் மழை சற்றே நிற்க ஊர் திரும்பினான்.வழியில் சில திருடர்கள் ..வியாபாரிகள் தன் பொருளை சந்தையில் விற்றுவிட்டு பணத்துடன் வருவார்கள் என எண்ணி வெடி மருந்து கொண்டு வெடிக்கும் துப்பாக்கியுடன் நின்றார்கள். வியாபாரி...

கார்ட்டூன் நண்பர்களே! கார்ட்டூன்!

  கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்!...

துவைக்கவே வேண்டாம் தானாகவே துவைத்துக் கொள்ளும் துணி வந்தாச்சு!!

எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. துவைக்கவே வேண்டாம். தானாகவே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது. குடும்பஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் துணி துவைப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலைகளில் ஒன்றாக உள்ளது. கிராமங்களில் பரவாயில்லை. ஆறு, குளத்தில் துவைத்து விடுவார்கள். நகரத்திலோ வாஷிங் மெஷினே கதி. இது போன்ற புலம்பல் ஆசாமிகளுக்காக தன்னாலேயே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது. ரொம்பவும் சந்தோஷப்படாதீங்க... இந்த துணி வந்துள்ளது இங்கல்ல... அமெரிக்காவில்... அமெரிக்க ராணுவத்தில்  ‘‘ யு.எஸ். சோல்ஜர் ரிசர்ச் டெலவப்மெண்ட், இன்ஜினியரிங் சென்டர்’’ என்ற ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானி தாவுரங் என்பவர்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top