இனி இலவசமாக பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!! ஏர்டெல்லின் அசத்தலான ஆஃபர்...
சமூக வலை தளமான பேஸ்புக் பயன்பாட்டை ஒன்பது மொழிகளில் நாடு முழுதும் உள்ள தன் ப்ரி-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக வழங்க உள்ளதாக பார்தி ஏர்டெல்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இது பேஸ்புக் தளத்தை நாடு முழுதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஒன்பது மொழிகளில் இலவசமாக பயன்படுத்த வழங்கும்" என அந்நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய மொழிகள்
மொபைல் போன்களில் பேஸ்புக் உபயோகிப்போர் (ப்ரௌசர் அல்லது நேரடி அப்ளிகேஷன்) இனி ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இலவசமாக பயன்படுத்தலாம் என வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட கால சலுகை
"ஒரு குறிப்பிட்ட கால சலுகையாக வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 30 எம்பி வரையிலான இந்த இலவச பயன்பாட்டை பெற்று மகிழ ஏர்டெல் அனுமதிக்கும்" என அந்நிறுவன அறிவிப்பு தெரிவிக்கிறது.
மென்பொருள்
இந்த புதிய சேவை ஜாவா, ஆண்ட்ராயிடு, ஐபோன் மற்றும் விண்டோஸ் முதலியவற்றில் இயங்கும் சாதனங்களுக்குப் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொபைல் இண்டர்நெட் சேவை
ஏர்டெல் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் சேவையின் முலம் அதிகப்படியான லாபத்தை அடைகிறது. டிராய் எஸ்எம்எஸ் கட்டுப்பாடு விதிகளை விதித்தப் பிறகு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தது. இதனால் மொபைல் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்தது. அதன் மூலம் ஏர்டெல் 6 மடங்கு அதிக லாபத்தை அடைந்தது.
0 comments: