உன் சகோதரனின் கண்களில் இருக்கும் தூசியை பெரிது படுத்தும் நீ, உன் கண்களில் இருக்கும் பெரிய மரக்கட்டையை கவனிக்க ஏன் தவறுகிறாய்? என்று நம்மை பார்த்து ஏசு கிறிஸ்து கேட்கிறார்.
பிறரை மதிப்பிடு செய்யும் போது மற்றவரை நேசிப்பதற்கும் அவர்களால் நேசிக்கபடுவதர்க்குமான தகுதியை நாம் இழக்கிறோம் என்கிறார் அன்னை திரேசா.
பிறரை மதிப்பிடு செய்து குறை கண்டு கொண்டே இருக்கும் குணத்தால் நாம் இழப்பது, அரிதான மனிதா நேயத்தையும் அழகான உறவுகளையும் தான்.
குறை காண்பதால் நம்மை அறியாமலேயே நாம் சுய பச்சாதாபத்தின் பிடியில் அகப்பட்டு விடுகின்றோம்.
ஐயோ எனக்குதான் எவ்வளவு கஸ்ரம்! எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை!`, எல்லோரும் எவ்வளவு சுகமாக இருக்கிறார்கள்.நான் மட்டும் ஏன் இப்படி துன்பப்டுகிறேன் என்றெல்லாம் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து நம்மை பற்றி நாமே பெரிதாக குறை பட்டு கொள்வதே இதன் அடையாளம்.
இளைஞர்களே! தட்டில் இருக்கும் உணவு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று குறை படாதீர்கள்`உணவே இல்லாதவர்கள் உலகில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் .
கலையில் இருந்து மாலை வரை இடுப்பொடிய இவ்வளவு வேலையா என்று குறை படாதீர்கள் ,தினக்கூலி வேலையாவது கிடைக்காதா என்று ஏங்குபவர்கள் இங்கு கணக்கில் அடங்கதவர்கள் என்பதை உணருங்கள்.
விடுமுறை நாளில் கூட ஓய்வெடுக்க முடியவில்லையே என்ற குறைபாடு உங்களுக்கு.தினசரி நாளுக்கு 16 மணி நேரத்துக்கும் அதிகமா உழைத்து தங்கள் குழந்தைகளை காப்பாற்றும் தாய்மார்களை நினைத்து பாருங்கள்.
எனவே மற்றவருடன் நம்மை ஒப்பிட்டு பார்த்து இயற்கையாலோ இறைவனாலோ நீங்கள் வஞ்சிக்க பட்டதாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்
நீங்கள் ஒவ்வருவரும் தனித்திறமை வாய்ந்தவர்கள்.எவருடனும் ஒப்பிட தகாதவர்கள்.
மதிப்பீடுகளையும் ஒப்பிடுதலையும் குறை காண்பதையும் நிறுத்துங்கள்.
அப்போது எங்கும் எதிலும் நன்மை காண்பீர்கள் அதனால் உங்கள் வாழ்வு மலரும் தோழமை பெருகும் வாழ்க்கை இனிக்கும்...
0 comments: