பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இளம் தலைமுறையிடம் பிரபலமாக இருப்பதோடு சமூக ஊடகங்களாக உருவெடுத்துள்ளன. பேஸ்புக் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலரும் இந்த சேவைக்கு அடிமையாகி இருக்கின்றனர். பேஸ்புக் பதிவுகள் இன்று ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை கூட நிரனயிக்கின்றன. செய்தி சார்ந்த விவாதத்தை உருவாக்குகின்றன. பேஸ்புக்கிற்கு நிகராக கூகுலின் ஜிபிளஸ் சேவையும் பிரபலமாகி இருக்கிறது. சமீபத்தில் ஜிபிளஸ் தினசரி நூறு கோடி லாக் இன் எனும் மைல் கல்லை தொட்டிருக்கிறது.
இந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதும் நடந்து வந்தாலும் இவை தகவல் பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. சாமான்யர்களின் கைகளில் ஊடகத்தை இந்த வலைப்பின்னல் தளங்கள் கொண்டு வந்திருக்கின்றன. இவை எதிர்காலத்தில் எந்த வகையான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்று வியப்புடனும் கவலையுடனும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பேஸ்புக் போன்ற தளங்கள் நவீன வாழ்க்கையில் செலுத்தும் ஆதிக்கம் ஒரு புறம் இருக்கட்டும், இந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் எப்படி உருவாயின என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
இணையத்தை தொடர்ந்து பின்பற்றி வருபவர்களுக்கு கூட இந்த தளங்கள் திடிரென எங்கிருந்து முளைத்தன என்பது போல நினைக்கத்தோன்றலாம். ஆனால் சமூக வலைப்பின்னல் தளங்கள் திடிரென தோன்றிவிடவில்லை. அவற்றுகென ஒரு வரலாறு இருக்கிறது.
ஆறுகோணங்களில் ஆரம்பம்.
ஆறுமுகம் தெரியும்.ஆறு கோணங்கள் தெரியுமா? இந்த ஆறு கோணங்களில் (SixDegrees.com ) இருந்து தான் வலைப்பின்னல் யுகம் ஆரம்பமாகிறது . 1997ல் இந்த தளம் அமைகப்பட்டது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த தளம் மூடப்பட்டுவிட்டது என்றாலும் இது துவக்கி வைத்த சமூக வலைப்பின்னல் யுகத்திற்கான அடித்தளமாக இது அமைந்திருக்கிறது.
ஆறு கோண வேறுபாடு என்று மிகவும் பிரபலமான சமூக கோட்பாடு ஒன்று உண்டு. உலகில் உள்ள எவருமே இன்னொருவரிடம் இருந்து ஆறு மட்டங்களில் தான் வேறுபட்டவர் என்னும் கருத்து தான் இதன் அடிப்படை. அதாவது உலகில் உள்ள எந்த மனிதரும் வேறு எந்த மனிதருடனும் ஆறு அடிகளில் தொடர்பு கொண்டு விடலாம். எங்கோ அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள அறிமுகம் இல்லாவதர் கூட உங்களுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவருக்கும் உங்களுக்குமான ஆறு தொடர்புகளை கண்டுபிடிப்பது தான் என்று இந்த கோட்பாடு சொல்கிறது.
இந்த கருத்து முதலில் குழப்பத்தை தரலாம். ஆனால் இதன் பின்னே இருக்கும் உறவு சங்கிலி தொடர்பு முறையை தெரிந்து கொண்டால் எளிதாக புரிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஒருவரை தெரிந்திருக்கலாம். அவருக்கு தெரிந்திருக்கும் ஒருவர் உங்களுக்கும் தெரிந்தவர் தானே. அவருக்கு தெரிந்த இன்னொருவரையும் அவர் மூலமாக நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம் தானே. இப்படி ஒவ்வொரு தொடர்பாக கண்டுபடித்தால் ஆறே அடியில் யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு விடலாம்.
இந்த கோட்பாட்டை வைத்து பலவிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நாடகம் திரைப்படம் போன்றவையும் எடுக்கப்பட்டன.
இணைய யுகத்தில் இந்த கோட்பாட்டிற்கு உயிர் கொடுப்பதற்காக 1997ல் சிக்ஸ் டிகிரிஸ் .காம் இணையதளம் அமைக்கப்பட்டது. இந்த தளம் உறுப்பினர்கள் தங்கள் உறவிவர்கள் ,நண்பர்களை எல்லாம் பட்டியலிட வைத்து ஒவ்வொருவரும் ஒருவரிடம் இருந்த எத்தனை கட்டங்களில் வேறுப்பட்டிருக்கின்றனர் என்று பார்க்க வைத்தது.
பிறந்தது பிரண்ட்ஸ்டர்.
சிக்ஸ்டிகிரிஸ் தளம் 2001ல் மூடப்பட்டு விட ,2002 ல் இதே கருத்தாக்கத்தின் அடிப்படையில் பிர்ண்ட்ஸ்டர் தளம் உருவாக்கப்பட்டது. கண்டா நாட்டை சேர்ந்த ஜோனாதன் ஆபிரகாம் எனும் வாலிபர் இந்த தளத்தை அமைத்தார். ஆறு கோணங்கள் கோட்பாட்டை நட்பின் அடிப்படையில் இந்த தளம் முன் வைத்தது. அதாவது உங்கள் நண்பரின் நண்பர் உங்களுக்கும் நண்பர் தானே. இப்படி நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று நட்பு வட்டத்தை விரிவாக்கி கொள்ள இந்த சேவை வழி செய்தது.
நண்பர்கள் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொள்ள வழி செய்யும் இந்த கருத்தாக்கம் புதுமையாக இருந்ததால் இணையவாசிகளை கவர்ந்து மிகவும் பிரபலமானது. அப்போதே பத்து லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் ஈர்த்து பரபர்ப்ப ஏற்படுத்தியது.
வந்தது பேஸ்புக்.
பிரண்ட்ஸ்டர் கருத்தாக்கம் சுவாரஸ்யமானதாக இருந்ததே தவிர அதனால் என்ன பயன் என்று தெரியாமல் இருந்தது. நண்பரகள் மூலம் மேலு புதிய நண்பர்களை பெற்று நட்பு வலையை பெரிதாக்கி கொண்டே செல்வதால் என்ன பயன் என்னும் கேள்விக்கு இந்த தளத்தில் பதில் இல்லை.
இந்த பதிலோடு வந்து சேர்ந்த தளம் தான் பேஸ்புக். முதலில் அமெரிக்க கல்லூரி மாணவர்களுக்கான சேவையாக அறிமுகமான பேஸ்புக், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் மூலமாக ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தி கொண்டு சகல விதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என வழிகாட்டி வலைப்பின்னல் யுகத்திற்கு வித்திட்டது. 2004 ம் ஆண்டு அமெரிக்காவின் ஹாவர்டு பலகலை மாணவர்களுக்காக என்று உருவாக்கப்பட்ட இந்த சேவையை மார்க் ஜக்கர்பர்க் உருவாக்கினார். பின்னர் மற்ற கல்லூரிகளுக்கும் விரிவாகி அமெரிக்காவுக்கு வெளியேவும் அறிமுகமாயிற்று.
இன்று ஸ்டேடஸ் அப்டேட் மூலம் நண்பர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்வதும், அவர்கள் மூலமாகவே புதியவர்களின் அறிமுகத்தை பெறுவதும் சர்வ சக்ஜமாக இருக்கிறது. நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் அல்லாமல் ,திரைப்பட விமர்சனம், சமூக கண்ணோட்டம் , செய்திகள் விளையாட்டு தகவல்கள் பரிந்துரைகள் என் எல்லா வகையான தகவல்களுக் பேஸ்புக் மூலம் சாத்தியமாகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாமல் திரைபப்ட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் ,எழுத்தாளர்கள் என பலரும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.
மைஸ்பேஸ் முதலில்.
பேஸ்புக்கிற்கு பிறகு மேலும் பல சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமாகி உள்ளன. கூகுல் ஜிபிளஸ் சேவையை அறிமுகம் செய்தூள்ளது. ஆனால் பேஸ்புக்கிற்கு முன்னரே மைஸ்பேஸ் வலைப்பின்னல் சேவையாக அறிமுகமாகி பிரபலமானது பலருக்கு தெரியாது. 2003 ம் ஆண்டு துவக்கப்பட்ட மைஸ்பேஸ் அமெரிக்கர்கள் மட்தியில் பிரபலமாக இருந்தது. பிரதானமாக இசை சார்த பகிர்வுக்கு பயன்பட்ட இந்த சேவை இசை கலைஞர்கள் ரசிகர்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும் வழி செயதது. ஆனால் பேஸ்புக் அலையில் மைஸ்பேஸ் பிந்தங்கிவிட்டது. ஏறக்குறைய இதே காலத்தில் கூகுலின் ஆர்குட் வலைப்பின்னல் சேவையும் பிரபலமாக இருந்தது.
மைஸ்பேசுக்கு முன்பாகவே லின்க்ட் இன் வலைப்பின்னல் சேவை அறிமுகமானது. 2001 ல் அறிமுகமான இந்த சேவை முற்றிலும் தொழில் முறையிலானது. வேலையில் இருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் தங்கள் துறையில் உள்ளவர்களோடு தொழில் முறையில் தொடர்பு கொள்ள இந்த தளம் கைகொடுத்தது. இன்றளவும் தொழில் முறையிலான உறவை வளர்த்து கொள்ள லின்க்ட் இன் சேவையே பிரபலமாக இருக்கிறது.
என்றாலும் இவை எல்லாவற்றின் அடிப்படை ஆறு கோணங்கள் கோபாடு தான். இந்த கோட்பாட்டில் இருந்து உருவான நண்பர்களின் நண்பர்கள் கருத்தாக்கமே இன்றைய சமூக வலைப்பின்னல் யுகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது.

2 comments:
அறியாத தகவல்கள். புதுத்தகவல்கள் அறிந்த கண்ட மகிழ்ச்சி பிறக்கிறது தங்களால். பகிர்வுக்கு நன்றி..
நன்றி..