குஜராத்தில் கடந்த 2002–ம் ஆண்டு கலவரம் நடந்தது. அதில் ஏராளமானவர்கள் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் – மந்திரியாக நரேந்திரமோடி பதவி வகித்தார்.
இதையடுத்து மத சுதந்திரத்தின் விதிமுறையை மீறியதாக கூறி இவருக்கு ‘விசா’ வழங்க அமெரிக்கா மறுத்தது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் வர்த்தக மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேரில் பங்கேற்காமல் வீடியோ, கான்பரன்சிங் (வாணொலி காட்சி) மூலம் அவர் பேசி வந்தார்.
இந்த நிலையில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து எதிர்காலத்தில் அவர் பிரதமராகும் பட்சத்தில் அவருடன் அமெரிக்கா சுமூக உறவு மேற்கொள்ளும் என அமெரிக்கா அறிவித்தது.
எனவே, தடைகள் நீக்கப்பட்டு நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு ‘விசா’ மறுப்பு நீடிக்கப்படுகிறது.அதற்கான தீர்மானம் அமெரிக்கா பாராளு மன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மைனாரிட்டிகளின் உரிமைகள் மற்றும் மத சுதந்திரங்களை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தை ஆளும் குடியரசு கட்சியின் கெய்த் எல்லிசன், எதிர் கட்சியின் குடியரசு கட்சியின் ஜோபிட்ஸ் மற்றும் 25–க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர்.
0 comments: