சகுனி, அலெக்ஸ்பாண்டியன் படங்களின் தொடர் தோல்விகளுக்கு பிறகு கார்த்தி ரொம்ப நிதானமாகவும், படத்தின் கதையை நன்றாக கேட்டும் அடுத்த படத்தை ஹிட் படமாக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் தற்போது வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’ படத்திலும், ராஜேஷின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு அடுத்தபடியாக ஒரு படத்தில் கார்த்தி நடிக்கிறார். ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித் தான் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குகிறார். வழக்கம் போல் கார்த்தி, சூர்யாவின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனமான ஞானவேல் ராஜா தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் ஹீரோயினாக மும்பையை சேர்ந்த மாடல் ஒருவர் அறிமுகமாகிறார். ரஜினி நடித்த படங்களின் தலைப்பு ஒன்று தான் இப்படத்தின் தலைப்பாக இருக்கிறது. ஆனால் அது என்ன தலைப்பு என்பதை வெளியிடவில்லை.
இதுகுறித்து படத்தின் டைரக்டர் ரஞ்சித் கூறுகையில், படத்திற்கு ரஜினி பட பெயரைத் தான் தேர்வு செய்துள்ளோம். ஆனால் அது என்னவென்று இப்போது கூற முடியாது. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பையும், படத்தின் தலைப்பையும் அறிவிக்கிறோம் என்று கூறினார்.
ஏற்கனவே மூன்று முகம் படத்தில், ரஜினி கேரக்டரின் ஒரு பெயரான அலெக்ஸ் பாண்டியன் என்ற பெயரில் தான் கார்த்தி நடித்த கடைசி படமான அலெக்ஸ் பாண்டியன் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: