.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 23 November 2013

ஆண்கள் மறைக்க விரும்பும் ரகசியங்கள்!

 * ஆண்கள் தங்கள் சம்பளம் எவ்வளவு என்பதை மற்றவர்களிடம் மறைக்க விரும்புகிறார்கள். அதுபோல் தங்கள் செலவையும் ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய வரவு – செலவுகளை மற்றவர்கள் கணக்கிடுவதை விரும்பமாட்டார்கள். வருமானம் என்பது அவர்களுடைய பலம். செலவு என்பது பலவீனம். இரண்டுமே மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆண்கள் எது எதற்கு செலவிடுகிறார்கள் என்பதை அறிந்தாலே, அவர்களுடைய பலவீனம் வெளிப்பட்டுவிடும். அதனால் செலவை மிகமிக ரகசியமாக பாதுகாக்கிறார்கள்.

 * ஆண்கள் தங்கள் வாகனம் ஓட்டும் திறமையை மற்றவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை வெறுக்கிறார்கள். ஆண் தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்று கூறும்போது, அவரோடு நெருக்கமாக பழகும் பெண், ‘உங்களை நம்பி நான் காரில் ஏறலாமா?’ என்று கேட்டு விடக்கூடாது. தன்னிடம் அந்தப் பெண் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு ஆணுக்கு ஏற்பட்டு, தனது ஆண்மைக்கே அது ஒரு சவால் என்று நினைத்துவிடுகிறார்கள். அதனால் பெண்கள், தங்களுக்கு பிடித்தமான ஆண் கார் ஓட்டுவதில் சந்தேகம் இருந்தால் அதை அவரிடம் நேரடியாக தெரிவிக்காமல், ‘நாம் வாடகைக்காரில் சென்றால் அதிக மகிழ்ச்சியாக இருக்கும்’ என்று கூறலாம். வேறு டிரைவரை நியமிப்பது தங்களது மகிழ்ச்சியை அதிகரிக்கும் செயல் என்றும் கூறலாம்.

 * எப்போதும் தங்கள் தாய்மீது அதிக பற்று வைத்திருப்பார்கள். அந்த பற்று திருமணத்திற்கு பின்பும் தொடரும். இதை தடுக்க நினைத்தால் குடும்பத்தில் பிரச்சினைகளே மிஞ்சும். அவர்கள் தங்கள் தாய்மீது வைத்திருக்கும் அன்பால் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் விளையாது என்பதை மனதில் கொண்டு, அவரை போட்டியாளராக நினைக்காமல் வாழ்வதே அமைதிக்கு வழி. அது மட்டுமல்ல ஆண்களை எளிதில் வசப்படுத்த, அவர்களுடைய தாய்மீது அன்பு செலுத்துவதே குறுக்கு வழி. தங்களுடைய தாயை மற்றவர் மிகுந்த மரியாதையோடு நடத்த வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பார்கள். மாறாக தாயின் குறைகளை மற்றவர்களிடம் கூறுவதையோ, மற்றவர்கள் முன்னிலையில் தாயை மோசமாகநடத்துவதையோ அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

 * நட்புக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அதனால் தங்கள் நண்பர்களைப் பற்றிய ரகசியங்களை காப்பார்கள். திருமணமான பின்பு, தனது மனைவியும் மற்றவர்களும் தங்கள் நண்பர்களை தன்னைப்போல் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தன் நண்பன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், அவனுக்கு நல்லவன் என்ற மேல்பூச்சு பூசுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் நட்பு விஷயத்தில் யாரும் தலையிட்டால்அவர்களுக்குபிடிக்காது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top