.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 5 January 2014

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!



காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!

 இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க காபியும் உதவியாக உள்ளது. என்ன ஆச்சரியமாக உள்ளதா?

ஆம், குடிக்கும் காபியைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். இப்போது அந்த காபியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

 * குளிக்கும் அறையில் துர்நாற்றம் வருகிறதா? அப்படியெனில், காபி பொடியை ஒரு துணியில் போட்டு கட்டி, குளியலறையில் தொங்கவிட்டால், குளியலறையில் வரும் துர்நாற்றமானது நீங்கிவிடும்.

* வீட்டில் எறும்புகள் இருந்தால், அதனை போக்குவதற்கு எறும்புள்ள இடத்தில் காபி பொடியை தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

* பாத்திரங்களில் இருந்து வரும் முட்டை நாற்றத்தை போக்குவதற்கு, காபி பொடியை பயன்படுத்தி கழுவினால், பாத்திரத்தில் இருந்து வரும் நாற்றத்தை போக்கலாம்.

* செல்லப் பிராணிகளின் சிறுநீரால் வரும் கெட்ட நாற்றத்தைப் போக்குவதற்கு, வாணலியில் காபி பொடியை போட்டு, 2-3 நிமிடம் வறுத்து, நாற்றம் வரும் அறைக்கு எடுத்துச் சென்று வைத்தால், காபி தூளின் நறுமணத்தில், துர்நாற்றம் நீங்கிவிடும்.

* தோட்டத்தில் நல்ல வளமான மண்ணைப் பெறுவதற்கு, தோட்டத்தில் சிறிது காபி பொடியைத் தூவினால், மண் சத்து நிறைந்தாக இருக்கும். ஏனெனில் காபி தூளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

* நல்ல நறுமணமிக்க காபியை காலையில் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வினைப் போக்கலாம். எப்படியெனில், காபியின் நறுமணத்திற்கு, மனதை புத்துணர்ச்சி அடைய வைக்கும் சக்தி உள்ளது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top