.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 5 January 2014

உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்..!

உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்..!


இன்றைய கால கட்டத்தில் உடல் எடையை குறைக்க மக்கள் பணத்தையும் தூக்கத்தையும் வெகுவாக செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். சமநிலையோடு விளங்கும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பதே உடல் எடை பராமரிப்பின் முக்கிய அம்சமாகும். ஒல்லியாக இருந்தால் ஆரோக்கியமாக இருப்பது என்று பல பேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான உணவை சரியான அளவில் உண்ணுவதே ஆரோக்கியம். உடல் எடை குறைவாக இருப்பவர்கள், அப்படி இருக்க சொந்த விருப்பம், வாழ்வுமுறை போன்ற பல காரணங்கள் உள்ளது. இருக்க வேண்டிய எடைக்கு கீழே இருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் இடர்பாடுகள் அதிகம். உடல் எடை அதிகம் இருப்பவர்களை விட இஅவ்ர்கலுக்கு தான் பிரச்சனைகள் அதிகம்.

உடல் எடையை இயற்கையான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் வேகமாக அதிகரிக்க பல வழிகள் உள்ளது. உடல் எடையை அதிகரிக்க ஆரோக்கியமற்ற முறைகளை தேர்ந்தெடுத்தால் உங்கள் எடை, அளவுக்கு அதிகமாக உயர்ந்து நீண்ட கால உடல்நல கோளாறுகள் பலவற்றை சந்திக்க நேரிடும். எண்ணெய் பலகாரங்கள், வெண்ணெய் கலந்துள்ள உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். ஆனால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து உங்கள் இதயத்தை பலவீனப்படுத்தி விடும்.

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் வேகமாக உயர்த்திட முட்டை, பால், வெண்ணெய் பழம், உருளைக்கிழங்கு, கிட்னி பீன்ஸ், இளைத்த சிகப்பிறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற உணவுகளை உண்ணலாம். ஆரோக்கியம் நிறைந்த உணவுகளாக மட்டுமல்லாமல் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் மூலமாக இல்லாமல் புரதச் சத்து மூலமாக உடல் எடையையும் இவைகள் அதிகரிக்கச் செய்யும். புரதச் சத்து மூலமாக உங்கள் தசைகளின் திணிவு அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் திடமாக மாறி உடல் எடையும் போதுமான அளவில் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை முறை மற்றும் தினசரி உணவுகளை திட்டமிடுங்கள். தினமும் குறைந்த அளவில் 5-6 முறை வரை உண்ணுங்கள். அல்லது தினசரி நீங்கள் உண்ணும் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top