.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 13 December 2013

அட அப்பாவி முதலமைச்சரே...!!




எங்களுக்காக எங்கும் கல்விக்
 கூடங்கள் திறந்தாய்...

சீருடைத் திட்டத்தினால்
பள்ளிகளில் ஏழை, பணக்காரன்
 பிள்ளைகள் என்கிற
 பாகுபாடுகள் நீக்கினாய்...

இலவச மதிய உணவுத் தந்தாய்...

அரசு செலவிலேயே ஆசிரியர்
 பயிற்சிகள் அளித்தாய்...

எல்லாக் கிராமங்களிலும் இரவுப்
 பாடசாலைகள் திறந்தாய்...

இன்னும்
 சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் அதில்
 எதிலாவது உனக்கான
 முத்திரையோ,
அடையாளமோ உண்டோ...?

எல்லாக் கல்விகூடங்களிலும் உன்
 படமாவது உண்டா...?

உன்னால் படித்த எங்களை தவிர
 உனக்கு வேறு அடையாளம்
 உண்டா...?

எம் "பச்சை தமிழரே"
பார்த்தீரா இன்றைய
 தலைவர்களை,




இவர்கள் அறிமுகம் படுத்தும்
 ஒவ்வொன்றிலும்
 இவர்களது அடையாளங்களை...

3 comments:

vijayan said...

விளம்பரத்தினாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்திரம் ஆகாது.

Unknown said...

வெறும் வாய்சொல்லில் வீரர்கள் தான் நம் இன்றைய அரசியல்வாதிகள் ,,,,,,,,இது மக்களுக்கு இப்போதுதானே புரிந்திருக்கிறது ,,,இன்னொரு காமராசர் வருவாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் .....

M.Mani said...

பல ஆண்டுகளாக என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. காமராஜர் எப்போதும் என்னுடைய அரசு என்று சொல்லிக்கொண்டதில்லை. தான் தேர்தலில் தோற்றபோதும் கூட இருந்தவர்கள் உங்களையே தோற்கடித்துவிட்டார்களே என்று கூறிய போது அதுதாண்டா ஜனநாயகம் என்று சிரித்துக்கொண்டே கூறியவர்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top