“திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை.அதே சமயம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல.”என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது.இது தொடர்பாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன.
இந்த உறவில், ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால், பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். அல்லது, சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். திருமண உறவை அங்கீகரித்தது போல இந்த உறவையும் அங்கீகரிக்க வேண்டும்.
அதே சமயத்தில், திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவை பாராளுமன்றம் ஊக்குவிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் இதற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து தெரிவிக்கலாம்.கள்ளத் தொடர்பு, பலதார மணம் ஆகியவற்றை ‘திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்’ உறவில் சேர்க்க முடியாது.” என்று,நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
4 comments:
இந்த de facto relationship முறையில் ரெண்டு வருசகாலம் சேர்ந்து இருந்தால், திருமணமான தம்பதிகளுக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் கிடைச்சுரும் இங்கே எங்கள் நாட்டில்.
விட்டுட்டுப்போகணுமுன்னா எல்லாத்தையும் சரிபாதியா பிரிச்சுக்கணும். குழந்தைகள் எவ்ளோ நாள் தாயுடன், எவ்ளோ நாள் தந்தையுடன் என்று ஃஃபேமிலி கோர்ட் முடிவு செய்யும்.
பெரிய சண்டை வருவது வீட்டிலுள்ள வளர்ப்பு மிருகம் யாருக்கு என்பதில்தான்!
நன்றி!
Tamilmanam +1
Thank you நம்பள்கி!