.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 29 November 2013

உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கான சில சிறப்பான வழிகள்!!!


உற்சாகமில்லாதது போல உணர்கிறீர்களா? வழக்கமான பாதையிலிருந்து விலகியது போல உணர்கிறீர்களா? சருமப் பிரச்சனைகள், தலைவலி, உடல் வலிகள் அல்லது செரிமானக் கோளாறு போன்றவற்றால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா? அப்படியெனில் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது என்று பொருள். மேலும் இது உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்க வேண்டிய நேரம்.

இதற்கு ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் சீன மருத்துவ முறை உள்பட உலகமெங்கும் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நச்சு நீக்கும் முறைகள் உள்ளன. உடலிலுள்ள நச்சுக்களை நீக்குவது என்பது, ஓய்வெடுத்தல், சுத்தப்படுத்துதல் மற்றும் புத்துணர்வூட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். உடலிலிருந்து நச்சுப்பொருளாகிய டாக்ஸின்களை நீக்கி அறவே இல்லாதொழித்தலாகும். அதன் பின் ஆரோக்கியமான சத்துப்பொருட்களை உடலுக்குள் செலுத்த வேண்டும். இப்படி உடலிலுள்ள நச்சினை நீக்குவதன் மூலம், நமது உடலினை வேறு நோய்கள் தாக்காவண்ணம் பாதுகாக்கலாம். இதனால் அது உடலை அதிகப்படியான ஆரோக்கியத்துடன் திகழ உதவுகிறது.

நச்சு நீக்கும் முறை என்பது எப்படி செயல்படுகிறது?

நச்சு நீக்குதல் என்பது அடிப்படையில் இரத்தத்தினை சுத்தப்படுத்துதல் ஆகும். டாக்ஸின்கள் உற்பத்தி செய்யப்பட்டு செயல்படத் தொடங்கும் இடமான கல்லீரலில், இரத்தத்திலிருந்து அசுத்தங்களை நீக்குவதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது. நமது உடலே, சிறுநீரகங்கள், குடல்கள், நுரையீரல்கள், நிணநீர்க் குழாய்கள் மற்றும் சருமம் வழியாக டாக்ஸின்களை வெளியேற்றிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அசுத்தங்கள் முழுமையாக நீக்கப்படுவதில்லை. இதன் மூலம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன.

ஆகவே நமது உடலிலுள்ள நச்சுக்களை நீக்கிய பிறகு பின்வரும் உணவுகள், உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி, உடலினை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

 இரசாயன உரமிடப்படாமல் உற்பத்தி செய்யப்பட்ட பசுமையான காய்கறிகளையும் பழங்களையும் உண்ண வேண்டும். மேலும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். கைக்குத்தல் அரிசி எடுத்துக் கொள்வது சிறந்தது. பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, ஸ்பைருலினா, குளோரெல்லா போன்றவை அற்புதமான நச்சு நீக்கும் உணவுகளாகும்.

க்ரீன் டீ

 தினமும் ஒரு கப் க்ரீன் டீ பருகி வந்தால், கல்லீரலை நன்றாகப் பாதுகாத்து சுத்தம் செய்யலாம்.

வைட்டமின் சி உணவுகள்

 நமது உடலிலிருந்து டாக்ஸின்களை விரட்டியடிக்க உதவும் கல்லீரலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருளான குளுடாத்தியோன் (glutathione) எனப்படும் வேதிப்பொருளை உற்பத்தி செய்வதற்கு உதவுகின்ற வைட்டமின் சி உள்ள உணவை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளூங்கள்.

தண்ணீர் பருகவும்

 ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்துங்கள்.

நன்கு சுவாசிக்கவும்

 சுவாசிக்கும் பொழுது ஆக்ஸிஜன் நன்றாக உட்கிரகிக்கப்படும் வண்ணம் மூச்சினை நன்றாக ஆழமாக உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.

நேர்மறை எண்ணங்களை வளர்க்கவும்


 மன அழுத்தத்தினை நேர்மறையான எண்ணங்கள் மூலம் மாற்றியமையுங்கள்.

சுடுநீர் குளியல்


 நல்ல சூடான வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் குளிப்பதன் மூலம் வெந்நீர் குளியல் எனப்படும் ஹைட்ரோதெரபியை (hydrotherapy) செய்து வாருங்கள். மேலும் வெந்நீரானது முதுகில் நன்கு படவேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரானது 30 வினாடிகள் முதுகில் ஓட வேண்டும். இது போல மூன்று முறை மாற்றி மாற்றி செய்யுங்கள். அதன் பின் 30 நிமிடங்கள் படுக்கையில் படுத்திருங்கள்.

நீராவி பிடிக்கவும்

 சானா நீராவிக் குளியலை மேற்கொள்ளுங்கள். இதனால் வியர்வை வழியாக நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும்.

பாதங்களை பராமரிக்கவும்


 சருமத்தினை ட்ரை பிரஷ் (Dry-brush) செய்யுங்கள் அல்லது டிடாக்ஸ் ஃபுட் ஸ்பா (detox foot spas) பயன்படுத்துங்கள். பாதக் குளியல் செய்யுங்கள். இதன் மூலம் சருமத்துவாரங்கள் வழியாக நச்சுக்கள் வெளியேறிவிடும். இதற்கான சிறப்புப் பிரஷ்கள் இயற்கைப்பொருள் விற்பனைக் கடையில் கிடைக்கும்.

உடற்பயிற்சி


 நச்சுக்களை நீக்கும் முறையில் மிகவும் முக்கியமானது என்னவென்று தெரியுமா? "உடற்பயிற்சி" யோகாசனம் அல்லது ஸ்கிப்பிங்க் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் செய்ய வேண்டும். கிகாங்க் (Qigong) எனப்படும் வீரக்கலைப் பயிற்சியையும் செய்து பார்க்கலாம். இதில் நமது உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளுடன், நச்சு நீக்குதலுக்கான சிறப்பான பயிற்சிகளும் உள்ளன.
 

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top