வெற்றி பெற வேண்டும் என்று விரும்பாதவர்களே
கிடையாது. நம் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்துக் கொண்டால் வாழ்க்கை
என்பது இனிமையாகும். ஆனால் சிலர் மட்டுமே இந்தத் தெளிவை அடைவதினால் அந்த
சிலருக்கு மட்டுமே வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது. இதற்குக் காரணம் மனம்.
தாழ்வு மனப்பான்மை என்பது முழுக்க முழுக்க மனம் சம்பந்தபட்ட விஷயம். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களின் வாழ்க்கையில் செல்வம் இருக்கலாம்; கல்வி இருக்கலாம்; உடல் வலிமை கூட இருக்கலாம்: ஆனால் நிம்மதி இருக்காது.
தாழ்வு மனப்பான்மை பொதுவாக இளம் வயதிலேயே உருவாகிறது. புறக்கணிக்கப்பட்டவர்கள்,பல முறை தோல்வி கண்டவர்கள், பிறருடன் பழக வாய்ப்பில்லாதவர்கள் இவர்களுக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பு இருக்கிறது. தாழ்வு மனப்பான்மையினால் இவர்களது மனம் அடிக்கடி தங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? உடனிருக்கும் நண்பரோ.உறவினரோ இவர்களது தயக்கத்தைத் தக்க நேரத்தில் கண்டுப்பிடித்தல் அதன் பிறகு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை வாழ்வின் நிம்மதியை கெடுக்கும். இந்த தாழ்வு மனப்பான்மை ஒழிக்க என்ன செய்யலாம்? அதை தவிர்க்க பல முயற்சிகள் எடுக்கலாம்.பிறகு,பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்ப்பதுதான். தற்ப்போது இல்லாத விஷயங்களுக்கு வருத்தபடுவதில் தவறு இல்லை. அந்த வருத்தமே வாழ்க்கை முறையாக மாறுவது தான் தவறு. அதன் தொடர்ச்சியாக என்னால் முடியாது என்று சோர்ந்து போவது தவறு. இந்த தவறுகளே வெற்றிக்கு தடைக்கற்கள்.
இது மாற,வெற்றி நம் வசமாக நாம் எடுக்க வேண்டிய முதல் பயிற்சி தாழ்வு மனப்பான்மையை உருவாக்காமல் பார்த்துக் கொள்வது தான்.
"விழுவது அழுவதற்கு அல்ல: மீண்டும் எழுந்து நடப்பதற்கே".

0 comments: