டீச் எயிட்ஸ்’ அமைப்பின் சார்பில் எச்ஐவி தொற்று விழிப்புணர்வு குறித்த அனிமேஷன் படம் திரையிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. தமிழில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அனிமேஷன் படத்தில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.டிசம்பர் 1 ம் தேதி உலக எயிட்ஸ் தினமாக அனுசரிப்பதை முன்னிட்டு இந்த அனிமேஷன் படக்காட்சியை, ‘டீச் எயிட்ஸ்’ அமைப்பு தமிழ்நாடு முழுக்க கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் திரையிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளது.
இது குறித்த நிருபர் சந்திப்பில் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் இணை இயக்குநர் லீலாகிருஷ்ணன் பேசும்போது ‘‘தமிழ்நாட்டில் வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் எயிட்ஸ் நோயே இல்லாமல் ஜீரோ சதவீதமாகக் கொண்டு வர வேண்டும் என்று எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் புறந்தள்ளுதல், ஒதுக்குதல், புதிதாக தொற்றுதல், இறப்பு இப்படி எதுவுமே இருக்கக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறோம். தற்போது தமிழ்நாடு முழுக்க 10,006 கல்லூரிகளில் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். வரும் மார்ச் மாதத்திற்குள் புதிதாக, 700 கல்லூரிகளிலும், பல பள்ளிகளிலும் நடத்த இருக்கிறோம். எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் தோறும் சிறப்பாக நடத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரியான மாநிலமாக இருக்கிறது.’’ என்றார்.
அதில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா பின்னர் நிருபர்களிடம் பேசும் போது,”‘‘நான் பெங்களூரில் படிக்கும்போதே அந்த கல்லூரியில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடக்கும். அதை நான் கண்டுகொள்வதில்லை. எய்ட்ஸ் நோயாளிகளை தொட்டாலோ, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாலோ, அந்த நோய் வந்துவிடும் என்று பயந்தேன்.டாக்டர் பியா சர்க்காரின் அறிமுகம் கிடைத்த பிறகு, எய்ட்ஸ் நோய் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டேன். அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்கிறேன். சினிமாவில் நடித்துக்கொண்டே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்குகிறேன்.
இதற்கிடையில் பள்ளி பருவத்தில் இருந்தே பாலியல் கல்வியை மாணவர்களுக்கு சொல்லித்தரவேண்டும். பெற்றோர்களும் இதுபற்றி குழந்தைகளிடம் போதிக்கவேண்டும்.அதே சமயம் திருமணத்துக்கு முன்பு ரத்த பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக எழுந்துள்ளது. அந்தளவுக்கு நம் நாட்டில் நிலைமை மோசமாகவில்லை. அந்த சூழ்நிலை வருவதற்கு முன்பு எய்ட்ஸ் நோயை ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

0 comments: