இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட வசதிகளைக் கொண்டும் தனிப்பட்ட இயங்குதளத்திலும் (Operating System) வெளிவருகின்றன.
தற்போது Android, Apple iOS, Windows Phone 8, Blackberry போன்ற இயங்குதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. மேலும் அதிகமான செயல்திறன் கொண்ட Processor, Camera, Network போன்ற பல வகையான சிறப்பம்சங்கள் கொண்ட கருவிகளில் சிறப்பான ஒன்றை வாங்குவது என்பது புதியவர்களுக்கு சிரமமான காரியமே. இதற்காக நமக்கு உதவும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.
1.GeekaPhone.com
எளிமையான தோற்றத்தை உடைய இத்தளத்தில் காட்டபடும் போன்களை தேர்வு செய்து ஒப்பிடலாம். இதில் மொபைல்களின் அனைத்து விவரங்களான display, processor, camera, video, battery, music போன்றவற்றை ஒரே பக்கத்தில் ஒப்பிடலாம். ஒரே நேரத்தில் 5 மொபைல்களை ஒப்பீடு செய்ய முடியும். மேலும் Popular Comparison களும் இருக்கின்றன.
2.PhoneRocket.com
இத்தளம் தான் எனக்கு சிறப்பாகத் தோன்றுகிறது. மேலும் அடுத்து வரும் தளங்கள் அனைத்தும் இவர்களின் நெட்வொர்க் தான். கண்டிப்பாக ஒரு முறை பார்த்து விடுங்கள்.
3. TabletRocket.com
இந்த தளத்தில் அனைத்து வகையான டேப்ளட்களை ஒப்பீட முடியும். மேற்கண்ட மொபைல் ஒப்பிடும் தளம் போல இடைமுகம், வசதிகள் தான் இதிலும். ஆனால் இதில் இயங்குதளங்கள் வாயிலாகவும் குறிப்பிட்ட விலைக்குள் இருக்கும் டேப்ளட்களை Sort செய்து பார்க்கவும் முடியும். ஒவ்வொரு வசதியிலும் Best Tablet களும் பட்டியலிடப்பட்டுள்ளன. நேரடியாக அமேசானில் வாங்கவும் இணைப்பு உள்ளது.
4. CameraRocket.com
5.ReaderRocket.com
புத்தகங்கள் படிக்க, ஆன்லைன் வசதிக்கு உதவும் Amazon Kindle போன்ற பலவகையான Reader Device களை ஒப்பிட இத்தளம் உதவுகின்றது. மேலும் இதில் The best E-Ink readers,Fastest web browser,The best 5" e-readers, The best 6" e-readers போன்ற சிறந்த ரீடர்களை தெரிந்து கொள்ள முடியும்.
0 comments: