.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 4 November 2013

விஸ்வரூபம்-2 வாய்ப்பு வந்தது எப்படி? இசை அமைப்பாளர் ஜிப்ரான் விளக்கம்!

கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வரூபம்-2 இதற்கு பின்னணி இசை அமைத்து வருகிறவர் ஜிப்ரான்.

வாகை சூடவா குட்டிப்புலி படங்களுக்கு இசை அமைத்தவர் அடுத்து ஒரே ஜம்ப்பில் கமல் படத்துக்கு வந்துவிட்டார். இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி ஜிப்ரான் கூறியிருப்பதாவது:


 "பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே இசை ஆர்வம். பத்தாவதோடு படிப்பை -முடிச்சிட்டு கீ போர்டில் 8வது ஸ்டேஜ் வரைக்கும் படிச்சேன். விளம்பர படங்கள்ல ஒர்க் பண்ணிட்டிருந்தப்போ சற்குணம் நட்பு கிடைச்சுது.

அதன் மூலமா வாகைசூடவா கிடைச்சுது. சற்குணம் சிபாரிசுல குட்டிப்புலி கிடைச்சுது. என்னோட வாகைசூடவா பேக்ரவுண்ட் மியூசிக் கமல்சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்ததாம். வைரமுத்து சார்கிட்ட சொல்லியிருக்காரு. திடீர்னு ஒரு நாள் கமல்சார் ஆபீசிலிருந்து போன் பண்ணி, சார் உங்களை மும்பை வரச்சொன்னாருன்னு சொன்னாங்க. என்னால அந்த இன்ப அதிர்சியை தாங்க முடியல.

அடிச்சுபிடிச்சு மும்பைக்கு போனா கமல்சார் ரொம்ப கூலா "வாங்க ஜிப்ரான் ஒர்க்க சார்ட் பண்ணிடலாமா?"ன்னு கேட்டார். அவரோடு உட்கார்ந்து வேலைய ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல அவரோட ஒர்க் பண்றது கஷ்டமா இருந்திச்சு. இசையோட அத்தனை ஏரியாவையும் தெரிஞ்சு வச்சிருக்காரு. அவரே மியூசிக் பண்ணிடலாம்.


நேரம் இல்லாமத்தான் என்கிட்ட கொடுத்திருக்கார்னு நினைச்சுக்கிட்டேன். இப்போ 75 சதவிகித வேலையை முடிச்சிட்டேன். விஸ்வரூபம்-2 என்னை எங்கே கொண்டு போய் நிறுத்தப்போவுதுன்னு எனக்கே தெரியல" என்கிறார் ஜிப்ரான்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top