
ஹைதராபாத்தில் 'ஜில்லா' காட்சிகள் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது. விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், மஹத், சம்பத் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் 'ஜில்லா' படத்தினை நேசன் இயக்கி வருகிறார். இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்து, விநியோக உரிமை முடித்து திரையரங்கு ஒப்பந்தங்களும் தொடங்கிவிட்டன. இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படுவேகமாக நடைபெற்று வந்தது. இன்றோடு படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் முடிவடைகிறது. இன்னும் 2 பாடல்கள் மட்டுமே காட்சிப்படுத்த இருக்கிறது. படத்தின் வில்லன்களோடு ஸ்கேர்லட் வில்சன் ஆடும் பாட்டிற்கு ராஜு சுந்தரம் நடனம் வடிவமைக்கிறார். படத்தின் முக்கிய நடிகர்கள்...