.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 4 December 2013

வாங்க திட்டமிடலாம்,அழைக்கும் இணையதளம்.!



திட்டமிட்டு செயல்பட உதவும் இணையதளம் இதைவிட எளிமையாக இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது டெய்லிடுடூ.காம்.

அழகான வெள்ளைக்காகிதம் போன்ற முகப்பு பக்கம்,அதன் நடுவே உங்களுக்கான குறிப்பேடு.இவ்வள்வு தான் இந்த தளம். இந்த குறிப்பேட்டில் தான் இன்று செய்ய வேண்டும் என நினைக்கும் பணிகளை எல்லாம் நீங்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மற்றபடி உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ள தனியே கணக்கு துவங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆக பாஸ்வேர்டை நினைவில் கொள்ள வேண்டி தொல்லையும் இல்லை.

திட்டமிட்டு செயல்படுவது என தீர்மானித்தவுடன்,இந்த தளத்தில் உங்களுக்கான குறிப்பேட்டில் ஒவ்வொரு தினத்திற்கான பணிகளை குறித்து வைக்ககத்துவங்கி விடலாம்.செய்ய நினைப்பதை டைப் செய்து சேமிக்க என கிளிக் செய்தால் போதும், அந்த கட்டளை நம் நினைவூட்டலுக்காக காத்திருக்கும்.இப்படி ஒவ்வொரு செய‌லையும் சேமித்துக்கொள்ளலாம்.

டைப் செய்யத்துவங்கியதுமே நமக்கான தனி இணைய முகவரி உருவாக்கப்பட்டு விடுகிறது.அடுத்த முறையில் இருந்து அந்த பிரத்யேக ,முகவரியில் உள்ள குறிப்பேட்டை பயன்படுத்தலாம். தின‌மும் செய்ய விரும்புவதை இப்படி டைப் செய்து குறித்து கொள்ளலாம். அதன் பிறகு இந்த குறிப்பேட்டை பார்த்து என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளலாம். செய்து முடித்தால் அதையும் குறித்து கொள்ளலாம்.

புதிய பணிகளை குறித்து வைக்க,திருத்த என்னும் இடத்தில் கிளிக் செய்தால் பழைய குறிப்பேடு வந்து நிற்கிறது.அதில் நாட்காட்டி போல வரிசையாக தேதி அடிப்படையில் குறித்து வைத்த பணிகளை காணலாம்.

திட்டமிடலை எப்படி நிறைவேற்றியிருக்கிறோம் என பத்து நாள் கழித்தோ ,மாத கடைசியிலோ சரி பார்த்துக்கொள்ளலாம்.

எளிமையான தளம் என்றாலும் நேர்த்தியானது. ஆங்கிலத்தில் தான் டைப் செய்ய வேண்டும். ஆனால் தமிழில் பயன்படுத்த விரும்பினால் வேறு ஒரு செயலியில் டைப் செய்து இங்கே பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

பயன்படுத்தி பாருங்கள். திட்டமிடல் உங்களுக்கு வெற்றி தரட்டும்.

திட்டமிட… http://www.dailytodo.org/

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top