.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 4 December 2013

இமெயில் தாமதமாவ‌து ஏன்? ஒரு விளக்கம்.



இந்த இமெயில் குழப்பத்தை நீங்களும் அனுபவித்திருக்கலாம். நண்பரிடம் இருந்தோ,அலுவலக அதிகாரியிடம் இருந்தோ முக்கியம் மெயிலை எதிர்பார்த்திருப்பீர்கள்.அதை அனுப்பியவரும்,போனில் தகவல் சொல்லிவிட்டு மெயில் வந்திருக்கிறதா? பார்த்து சொல்லுங்கள் என கேட்டிருப்பார். நீங்களும் இன்பாக்சில் கிளிக் செய்து கொண்டே இருப்பீர்கள் ஆனால் அந்த மெயில் மட்டும் எட்டிப்பார்க்காது.

பொதுவாக,இமெயில்கள் அனுப்பிய சில நொடிகளில் எல்லாம் வந்து சேர்ந்து விடும் போது சில மெயில்கள் மட்டும் தாமதமாவது ஏன்?என்ற கேள்வி குழம்ப வைக்கும்.

அனுப்பிய‌ இமெயில் முகவரி சரி தானா என்று பார்ப்பீர்கள். இன்டெர்நெட் இணைப்பு ஒழுங்காக இருக்கிறதா என சோதிப்பீர்கள். சர்வர கோளாறா,இல்லை இணைத்து அனுப்பட்ட கோட்டுகளால் சிக்கலா என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கும். அப்படியும் மெயில் வந்திருக்காது.பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அந்த மெயில் வந்து நிற்கும். அதற்குள் கிளிக் செய்து செய்து வெறுத்து போயிருப்பீர்கள்.

ஏன் இந்த தாமதம்?

இந்த கேள்விக்கு விடை அறிய விரும்பினால் அதற்கான வழி இருக்கிறது. அதாவது குறிப்பிட்ட இமெயில் ஏன் தாமதமாக வந்த்து என தெரிந்து கொள்ளலாம்.இந்த பதில் உங்களுக்கு வந்த மெயில்லேயே இருக்கிறது.




ஜிமெயிலில் அந்த மெயிலை ஓபன் செய்து அதில் மூலத்தை பார்ப்பதற்கான ஷோ ஒரீஜினல் என்னும் கட்டளையை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு அந்த மெயில் பயணம் செய்த இணைய பாதையும் அதில் சந்தித்த சர்வர்களும் வந்து நிற்கும்.அந்த மெயில் எந்த ஐ.பி முகவரிகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறது என இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்

 இப்படி இணையத்தில் எங்கெங்கோ சுற்றி மூச்சிறைக்க வந்ததால் தான் இன்பாக்சிற்கு தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.

இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். இமெயில் பயணித்து வரும் முறை பற்றிய அறிதல் இருந்தால் அடுத்த முறை ஏதேனும் மெயில் உடனடியாக வந்து சேராவிட்டால் டென்ஷ்னாகமல் இணைய எதார்தத்தை புரிந்து கொண்டு கூலாக இருக்கலாம் அல்லவா?

அதோடு நீங்கள் ஒரு மெயில் அனுப்பி அது இன்னும் வரவில்லையே என யாரேனும் உங்களை தொல்லை செய்தால் இந்த விளக்கத்தை சொல்லி பார்க்கலாம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top