.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 3 December 2013

பரங்கிக்காய் அடை - சமையல்!

 

 தேவையானவை:

புழுங்கலரிசி - 1 கப்,

உளுத்தம்பருப்பு - அரை கப்,

துவரம்பருப்பு - முக்கால் கப்,

பாசிப்பருப்பு - கால் கப்,

காய்ந்த மிளகாய் - 10,

 சோம்பு - அரை டீஸ்பூன்,

பெருங்காயம் - 1 சிட்டிகை,

சின்ன வெங்காயம் - 6,

உப்பு - தேவைக்கேற்ப,

மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு,

பிஞ்சு பரங்கிக்காய் - 1 துண்டு,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பரங்கிக்காயை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். அரிசியைத் தனியாகவும், பருப்புகளைத் தனித்தனியாகவும் ஊற வைக்கவும்.

மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து சோம்பு, மிளகாய், உப்பு, வெங்காயம் மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்தெடுக்கவும்.

மிக்ஸியில் முதலில் உளுத்தம்பருப்பை போட்டு, சற்று பெருபெருவெனவும், பின்னர் அரிசியையும் அதே மாதிரி அரைத்தெடுக்கவும்.

பாசிப்பருப்பை ஒரு சில விநாடிகள் மட்டும் அரைக்கவும்.

துவரம்பருப்பையும் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்து, அனைத்தையும் அரைத்த மிளகாய் விழுதுடன் ஒன்றாக கலந்து அதில் மல்லித்தழையைக் கலக்கவும்.

பின்னர் தோசைக்கல்லை சூடு செய்து, இந்த மாவை மெல்லிய அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு, அடையின் மேல் துருவிய பரங்கிக்காயைத் தூவி கரண்டியால் அழுத்திவிட்டு, பின் அடையை திருப்பிவிட்டு எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும்.

 (ஈரப்பதம் இருக்கும்போதே பரங்கிக்காய் துருவலைத் தூவ வேண்டும்).

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top