என்னென்ன தேவை?
பாசிப் பருப்பு - 1 கிலோ,
தேங்காய் - 2 (துருவியது),
எள் - சிறிது,
பச்சரிசி - 1/2 கிலோ,
ஏலக்காய் தூள் - சிறிது,
கருப்பட்டி அல்லது வெல்லம் - 1/2 கிலோ,
மஞ்சள் தூள் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
பாசிப் பருப்பு, எள், தேங்காய் துருவல் மூன்றையும் தனித் தனியாக நிறம் மாறும் பதத்துக்கு வறுத்துக் கொள்ள வேண்டும். கருப்பட்டி அல்லது வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, கையில் ஒட்டும் பதத்துக்கு கெட்டியாகப் பாகு காய்ச்ச வேண்டும். வறுத்த பாசிப் பருப்பை மிதமாக அரைத்து, அதில் ஏலக்காய் தூள், எள், தேங்காய் துருவலைக் கொட்டி, பாகை ஊற்றிக் கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து, லேசாக மஞ்சள் தூள் கலந்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை இந்த மாவில் நனைத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
0 comments: