.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 21 September 2013

செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்!




மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் ‘உயிர் வாழும்’ காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது. 



இது தொடர்பாக ஆன்ட்ரூ ரஷ்பி கூறியதாவது:  பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்கள் பல வகையில் ஆராய்ச்சி செய்து வருகிறோம். எங்கள் ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. காரணம், பூமி பற்றிய ஆய்வுகள் முடிவில்லாதவை. ஆனால், எங்கள் கண்டுபிடிப்புகள் பல கட்டங்களில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன. 




எங்கள் முந்தைய கணிப்பு படி, பூமி இன்னும் 325 கோடி ஆண்டுகள் வரை ‘உயிர் வாழும்’ தகுதி படைத்ததாக இருக்கும் என்று தான் மதிப்பிட்டிருந்தோம். ஆனால், வானிலை மாற்றங்கள் கடுமையாக மாறி வருகின்றன; கடல் மட்டம் மாறி வருகிறது; கடல் நீர் அதிவேகமாக நீராவி ஆகி வருகிறது. இப்படி பல வகையான வானிலையில் மிக மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், பூமி ‘உயிர் வாழும்’ காலம் வெகுவேகமாக குறைந்து வருகிறது. அதாவது, எங்கள் இப்போதைய கணிப்பு 175 கோடி ஆண்டுகள் வரை பூமி ‘உயிர் வாழும்’ என்பது தான். 



ஆம், அதுவரை பூமியில், தண்ணீர் இருக்கும்; வெப்பம், மனிதர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும். அதன் பின், வெப்பம் மிகவும் கொடூரமாக இருக்கும்; மனிதர்கள் பொசுங்கி போவர்; ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் அதிர்ச்சி தரும் வகையில் கோடிக்கணக்கில் மடிந்தும் மறைந்தும் விடும்.  அதனால் மாற்று இடம் தேடி தான் மக்கள் போக வேண்டியிருக்கும். சூரிய மண்டலத்துக்கு வெளியே கிட்டத்தட்ட ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனிதர்கள் உட்பட உயிரினங்கள் உயிர் வாழ தகுதி இருக்கிறதா என்று ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. 



 செவ்வாய் உட்பட எட்டு கிரகங்கள் தான் உயிரினங்கள் உயிர் வாழ, வானிலை உட்பட  எல்லா வகையிலும் அருமையாக இருக்கும். அதில் மனிதர்கள் குடியேறலாம். மனிதர்களுக்கு ஏற்ற வகையில் செவ்வாய் உட்பட இந்த கிரகங்களில் இயற்கை வளங்கள், வசதிகள் இருக்கும். இவ்வாறு ஆன்ட்ரூ ரஷ்பி கூறினார். 



எந்த கிரகம் வசதியானது?

* சூரியனின் காலம் இன்னும் 600 கோடி ஆண்டுகள்.
* சூரியனை வைத்து தான் மற்ற கிரகங்கள் உயிர் வாழுகின்றன. அதாவது, பல வகையிலும் உயிர் வாழும் தகுதிகளை படைத்துள்ளன.
* அப்படி பார்த்தால் செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்.
* மேலும், பூமிக்கு வெகு அருகாமையில் உள்ளதும் செவ்வாய் தான்.
* பூமி போலவே, வானிலை அருமையாக இருக்கும்; தண்ணீர் போன்ற வசதிகள் இருக்குமாம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top