.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 2 September 2013

ஆண்களே இது உங்களுக்காக….


 
man-sleeping 

இளைஞர் ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் அளவு குறைந்துவிடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதுவும் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்போது, ஒரு வார காலத்திற்குள்ளாகவே இந்த பாதிப்பை உணரலாம் என்கிறது அந்த ஆய்வு.

ஆண்களின் பாலியல் உணர்வுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது ஹார்மோன்கள்தான். இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு இருந்தால்தான் பாலியல் உணர்வு தூண்டப்படும். அவ்வாறு பாலியல் உணர்வை தூண்டுவதற்கு ஆதாரமாக விளங்கும் ஹார்மோன் அளவை ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ என்று அழைக்கிறார்கள். இந்த டெஸ்டோஸ்டெரோன் அளவுக்கும்,சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த ‘டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ முக்கிய பங்காற்றுவதாக இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார். ஈவ் வான் உள்ளிட்ட சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த விவரம் தெரியவந்துள்ளது. 


அந்த பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சராசரியாக 24 வயது கொண்ட இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோதனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப்பட்டனர். 


ஆய்வின் ஒவ்வொரு நாளின்போதும்,24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்களது ரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தபட்டது. இதில் குறைவாக தூங்கியதற்கு பிற்கு இவர்களது’டெஸ்ட்டாஸ்ட்டுரோன்’ அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்ததாக சொல்லும் ஈவா வான், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு இருப்பதால்,தூக்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கும் என்று அடித்துக் கூறுகிறார்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top