லண்டன்:
அதிக ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறையக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிக ஆண் குழந்தைகளை பெறுவதால் தாய்மார்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் அதிக ஆண் குழந்தைகள் பெறுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தாய்மார்கள் விரைவில் வயதானவர்கள் ஆகின்றனராம். ஆண் குழந்தைகள் பெறுவதால் தாய்மார்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டீரான் அளவை அதிகரிக்கிறதாம். அதனால் தாய்மார்களின் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களின் உடல் வீக்காகிவிடுகிறதாம்.
இதனால் அதிக ஆண் குழந்தைகளை பெறும் தாய்மார்களின் ஆயுள் குறையக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் அதிக பெண் குழந்தைகள் பெறுவதால் தாய்மார்களின் ஆயுள் குறைவதில்லையாம். பின்லாந்தைச் சேர்ந்த தாய்மார்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: