.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 31 August 2013

இரத்தத்தை உறையவைக்கும் மருந்து தயார்!


விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் மரணத்துக்கு அதிக ரத்த போக்கே முக்கிய காரணமாக இருக்கிறது. ரத்தபோக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்த்து விடலாம். இதற்காக புதிய மருந்து ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.


31 - blood_cells

 


ஜப்பானில் உள்ள தேசிய ராணுவ மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டுபிடித்தனர். அந்த மருந்தில் கண்ணுக்கு தெரியாத நுட்பமான பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை உடலில் செலுத்தியதும் ரத்தநாளத்தில் சேதமடைந்த பகுதிகளை அடைத்துக் கொள்ளும். இதன் மூலம் ரத்த கசிவு உடனடியாக தடுக்கப்படும்.
தற்போது விலங்குகளுக்கு இதை கொடுத்து பரிசோதித்து உள்ளனர். அதில் மருந்து வெற்றிகரமாக வேலை செய்தது. இந்த புதிய மருந்து மூலம் உலகில் பெரிய அளவில் விபத்து மரணங்களை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் ஆபரேசன் செய்யும் போதும் இந்த மருந்தை பயன்படுத்தினால் அதிக ரத்தபோக்கை தடுக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top