முதல்ல நெடு நாளைக்கு பிறகு மனது மிகவும் கனத்துடன் இந்த விமர்சனத்தை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன். என் இனத்தை பெருமைபடுத்தும் படமா அல்லது இந்தியர்களை சிறுமைபடுத்தும் படமா என்று எனக்கே தெரியாத ஒரு கேள்வி என்னுள் இந்த படத்தை பார்த்ததிலிருந்து எழுந்தது.
இத்தனைக்கும் இந்த படத்தை பற்றி ஒரு மாதம் முன்பே கூறியிருந்தேன் இதை ஒரு தமிழ் படமாய் அல்லது தமிழர் எடுத்திருந்தால் அவர் பாதி ஆயுள் சென்சார் / ரிவைஸிங் கமிட்டியில் முடிந்து போயிருக்கும் என்று ஏன் என்றால் இயக்குனர் செல்வமணி இதே கதை களத்தை வேறு விதமாக எடுத்து அவர் பட்ட பல ஆண்டு துயரம் சொல்லி மாளாது.படத்தின் முதன் முதலில் ஒரு ஸ்லைடு – அதில் 1980 முதல் இலங்கையின் இனக்கலவரத்தில் தமிழர்கள் கொல்லபடுகின்றனர் என்று.
ஜான் ஆபிரகம் – கற்றது தமிழ் ஹீரோ மாதிரி தாடி மீசையுடன் ஒரு அதிகாலை கெட்ட கனவில் கண் முன்னே கொத்து கொத்தாய் தமிழர்கள் சாவதை கண்டு அதிர்ந்து எழுகிறார். பின்பு நேரே ஒரு மதுக்கடையில் போய் ஒரு குவார்ட்டரை வாங்கி சிப்பிகொண்டே சர்ச்சுக்குள் நுழைந்து கண்கலங்கும் போது அந்த் சர்ர்சின் ஃபாதர் உங்களை இரண்டு மூன்று வருடங்களாய் பார்க்கிறேன் ஆனால் ஏன் இந்த கோலத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்க ஒரு சதியில் நானும் ஒரு அங்கத்தினர் ஆகி இன்னும் குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன் என்று கூறும்போது அப்படியே பச்சை பசேல் ஜாஃப்னா தமிழ் நகரம், ஒரு பேருந்தில் அனேக தமிழர்களுடன் பஸ் பயணிக்கிறது.
திடீரென்று இரண்டு வேன்களில் ஆயுதம் தாங்கியவர்கள் இறங்கி தமிழர்களை சுட்டு கொல்கின்றனர். சிங்களம் ராணுவம் தான் இதை செய்தது என நீங்களும் நானும் என்னும் போது இது பதவி சுகத்துக்காக இன்னொரு தமிழ் கூட்ட தலைவர் செய்வதாய் படம் காட்ட உடனே இந்தியா இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என எண்ணி இந்திய பிரதமர் அமைதி படை என்று இந்திய படையை இலங்கையில் தமிழ் ஏரியாவுக்கு அனுப்புகின்றனர். அப்போது அவர்களுக்கும் எ. டி எஃப் என்னும் புலிகளின் படையோடு மோதல் வருகிறது.
இதில் இரு தரப்புக்கும் நிறைய இழப்பு வர இந்தியாவின் பிரதமரின் தவறான அணுகுமுறை தான் காரணம் என்று இந்தியாவின் எதிர்கட்சிகள் கூற அந்த புலிகளின் படையின் பலத்தை லன்டனில் இருந்து பத்திரிக்கையாளராய் வந்த பெண் முதல், ரா என்னும் இந்திய உளவு அமைப்பு வரை சொல்லி மிரட்ட, புலிகளை நேர் கொண்டு வெல்ல இந்திய படை கூட முடியாது அதனால் இதை ஒரு அன்டர் கவர் ஆப்பரேஷன் செய்து புலிகளையும் புலிகளின் தலைவன் அன்னா பிரபாகரனையும் மடக்க எண்ணி ஜான் ஆப்ரகாம் ஜாஃப்னாவுக்கு ஒரு பத்திரிக்கையாளரால வர, இந்திய உளவுப்படை கே பாலகிருஷ்னனை சென்னையில் இருந்து ஜாஃப்னாவுக்கு கமான்டர் இன் சீஃபாக இந்த ஆப்பரேஷன் நடக்கிறது.
ஜான் ஆப்ரகாம் முதல் காட்சியில் தமிழர்களை கொன்ற இன்னொரு தமிழ்ப்படையான அந்த தலைவனிடம் எப்படியாவது புலிகளை அழிக்க நீங்கள் தான் உதவ வேன்டும் என கேட்க அவரும் வரும் தேர்தலில் ஜாஃப்னாவில் தான் ஒரு பெரிய தலைவராய் ஆக வேண்டும் என எண்ணி எனக்கு இந்தியா ஆயுத உதவி தந்தால் புலிகளையும் புலிகளின் தலைவனையும் அழிக்க உதவுகிறேன் என் கூற அதற்க்கு ஜான் ஆப்ரகாம் இந்தியாவின் உதவியோடு வெளி நாட்டில் இருந்து ஆயுதங்கள் வர, ஆனால் அந்த ஆயுதங்கள் நேரே புலிகளுக்கு கிடைக்குமாறு டபுள் கிராஸ் செய்து இந்திய ராணுவம் / இந்திய உளவுப்படையின் ஒவ்வொரு திட்டத்தையும் முடக்கும் புலிகளின் சாமர்த்தியம் என காட்ட, ஜான் ஆப்ரகாமுக்கு தன் கூடவே இருந்து புலிகளுக்கு தகவல் தருவது பாலகிருஷனன் தான் என கன்டறிய அதற்க்குள் பாலகிருஷ்ன்னன் ஜான் ஆப்ரகாமாய் கடத்தி ஒரு இடத்தில் வைக்க, ஜான் ஆப்ரகாமின் அன்டர் கவர் எக்ஸ்போஸ் ஆகிறது.
இந்த சதியை உணராத இந்திய உளவுப்படை அதே பாலகிருஷனனுக்கு எப்படியாவது ஜான் ஆப்ரகாமை விடுவிக்க வேண்டும் என கேட்க அவரை விடுவித்து கொலம்போவின் சேஃப் ஹவுஸில் வைக்கின்றனர். இதன் நடுவே புலிகளை ஒழிக்க முடியாமல் / இந்தியாவின் அமைதி படை இலங்கையை விட்டு வெளியேறுகிறது கூடவே இந்திய பிரதமரும் பதவி விலகுகிறார்.
புலிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் வெளி நாட்டினர் பதிலுக்கு தக்க சமயத்தில் நீங்களும் எங்களுக்கு உதவ வேண்டும் என முன்பே கேட்டு வைக்க அதற்க்கு புலிகள் சம்மதித்து பதவியை துறந்த பிரதமர் திரும்பவும் ஆட்சியில் உட்கார போவதாய் சர்வே தெரிவிக்க எங்கே இந்தியா முன்னேறிவிடுமோ என்று வெளி நாட்டு இந்திய எதிர்ப்பாளர்கள் ஆயுதம் சப்ளை செய்தவர்கள் லண்டனில் உள்ள மதராஸ் கஃபேயில் கூடி இந்தியாவின் முன்னாள் பிரதமரை எப்படி புலிகளின் மூலம் ஸ்ரீ பெரும்பதூரில் குண்டு வைத்து கொல்கின்ற்ன்ர் என்பது தான் பிற்பாதி கதை.
படம் இரு இனத்தின் போராட்டத்தை கூடவே கொஞ்சம் மசாலா தடவி இலங்கை தாய்லாந்து சிங்கப்பூர் என ஒரு சுற்று சினிமாத்தாக சுற்றீ கடைசியில் உளவுப்படைக்கும் இந்தியாவின் அத்தனை ஏஜன்ஸிக்கும் இன்று இரவு பத்து மணிக்கு முன்னாள் பிரதமரை குண்டு வைத்து தகர்க்க போகும் தற்கொலைப்படை யார் என்று தெரிந்திருந்து அதை தடுக்க முடியாமல் போன மாதிரி காட்டியிருப்பது நிறைய சினிமாத்தனம்.
தமிழன் ஒரு ஆள்காட்டி பரம்பரை / இந்தியா இதில் பலிகடா என்பது போல் காட்டி புலிகளின் தலைவன் மற்றும் புலிகளின் வீரத்தை சூப்பராய் சித்த்ரித்திருந்தாலும் கடைசியில் சொன்ன விதம் ஒரு இனத்தை கேவலமாய் காட்டியிருப்பது போல் உள்ளது. ஒன்று உண்மைச்சம்பவம் என கூறியிருக்கலாம் அல்லது இது கற்பனை கதை யாரையும் குறிப்பிடும் விதத்தில் இல்லை என கூறியிருக்கலாம் இப்படி இரண்டும் இல்லாமல் கொஞ்சம் கதைக்கரு கொஞ்சம் மசாலா கொஞ்சம் சொந்த திரைக்கதை என படம் பப்படமாய் நொறுங்கியது ஆச்சர்யபடுத்தவில்லை.
ஏற்கனவே கூறியிருந்தேன் இந்த படம் வெளியானால் பலரின் துரோகங்களை உரித்து காட்டும் என அது தமிழர்களின் உணர்ச்சியை கொச்சைபடுத்தும் இந்த படத்தை எடுத்த ஒரிஜினல் தயாரிப்பாளர்கள் (ரைஸிங் சன் பிக்ச்சர்ஸ் – Rising Sun Pictures) யார் எனக்கேட்க வேண்டாம் உங்களின் அனுமாத்திற்க்கே விட்டு விடுகிறேன். படத்தை பார்த்தால் மனது வலிக்கிறது ஆனால் யாருக்காக என்பதில் உண்மையை கூற மனம் மறுக்கிறது என்ற உண்மையோடு…..
ஒரு வரி விமர்சனம் – மதராஸ் கஃபே – சேக்ஷ்பியர் எழுதிய திருக்குறள்.
0 comments: