.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 31 August 2013

தலைவாவை முறியடித்த அஜித்தின் ஆரம்பம்!

தலைவா, சிங்கம்-2 வை முறியடித்து அதிக விலைக்கு அள்ளப்பட்டுள்ளது அஜித்தின் ஆரம்பம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர்.  யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை சூர்யா மூவிஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட முடிவு செய்தனர். ஆனால் தற்போது அந்த முடிவை ஒத்திவைத்துள்ளனராம்.  இந்நிலையில் கோவை திருப்பூர், ஊட்டி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் படத்தின் விநியோக உரிமையை காஸ்மோ பிக்சர்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம். தலைவா, சிங்கம்-2...

கறிவேப்பிலை மகிமைகள்!

சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலந்தொட்டே நம் நாட்டில் உள்ளது. தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான கறி, இரசம் போன்றவற்றிலும், வடை, முறுக்கு போன்ற திண்பண்டங்களிலும் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. “கறி” எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.”கறிவேப்பிலை” எனும் சொல் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என பலவேறு...

இரத்தத்தை உறையவைக்கும் மருந்து தயார்!

விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் மரணத்துக்கு அதிக ரத்த போக்கே முக்கிய காரணமாக இருக்கிறது. ரத்தபோக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்த்து விடலாம். இதற்காக புதிய மருந்து ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.   ஜப்பானில் உள்ள தேசிய ராணுவ மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டுபிடித்தனர். அந்த மருந்தில் கண்ணுக்கு தெரியாத நுட்பமான பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை உடலில் செலுத்தியதும் ரத்தநாளத்தில் சேதமடைந்த பகுதிகளை அடைத்துக் கொள்ளும். இதன் மூலம் ரத்த கசிவு உடனடியாக தடுக்கப்படும். தற்போது விலங்குகளுக்கு...

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி வாய்ப்பு!

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் பார்க் (பி.ஏ.ஆர்.சி.,) என்ற பெயரால் நம்மால் அதிகமாக அறியப்படுகிறது. பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர் சர்வ தேச அளவில் நியூக்ளியர் ரிசர்ச் துறையில் அறியப்படுகிறது. இந்த மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகளும் காலி இடங்களும்: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 69ம், லேபரட்டரி பிரிவில் 41ம், லைப்ரரி சயின்ஸ் பிரிவில் 4ம், கெமிக்கல் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 7ம், பிட்டர் பிரிவில் 17ம், மில் ரைட் பிரிவில் 3ம், மெஷினிஸ்ட் பிரிவில் 13ம், வெல்டரில் 9ம், டர்னரில் 4ம், ஏ.சி., மெக்கானிக்கில் 24ம், இன்ஸ்ட்ரூமென்டேஷனில்...

டீசல்,மண்ணெண்னை விலை உயரப்போகிறது!

டீசல்,மண்ணெண்னை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயரப்போகிறது.ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.இதனால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பெட்ரோலிய துறை அமைச்சர் இது தொடர்பாக நிதி அமைச்சர் பி.சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார்..அந்த சந்திப்பின் போது பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் இந்த வருடம் மட்டும் 180000 கோடி இழப்பு ஏற்படும் அதை ஈடுகட்ட விலை உயர்வு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். விலையை உயர்த்த வேண்டும் என பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.டீசல் விலை ஐந்து ரூபாய்...

ஆப்பிள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய iWatch!

  ஆப்பிள் நிறுவனமானது புதிய iWatch உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுவருவது அறிந்த விடயமே. தற்போது குறித்த iWatch தொடர்பான வடிவமைப்பு தொடர்பான தகவல்களை அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2014ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இச்சாதனம் அப்பிளின் முன்னைய ஸ்மார்ட் கைக்கடிகாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. மேலும் இதனை செல்பேசிக்கு இணையாக பயன்படுத்தக்கூடியவாறு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே அப்பிளுக்கு போட்டியாக விளங்கும் சம்சுங் நிறுவனம் இவ்வருட இறுதியில் தனது ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ...

பேஸ்புக் பயனர்களுக்காக Canon வடிவமைத்துள்ள அதிநவீன கமெரா

  முதற்தர கமெராக்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான Canon ஆனது தற்போது பேஸ்புக் பயனர்களுக்காக அதிநவீன கமெரா ஒன்றினை வடிவமைத்துள்ளது. PowerShot N Facebook Edition Compact Camera என அழைக்கப்படும் இக்கமெராவில் பேஸ்புக் பொத்தான் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை அழுத்துவதன் மூலம் புகைப்படத்தினை நேரடியாகவே பேஸ்புக் தளத்தில் தரவேற்றம் செய்துகொள்ள முடியும். இது தவிர 2.8 அங்குல LCD தி ரை, 12.1 மெகாபிக்சல்களை உடைய உயர் தரத்தினை உடைய CMOS சென்சார் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இதன் பெறுமதியானது 300 டொலர்களாகும். ...

ஸ்டெம் செல் மூலம் மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

  முதன் முறையாக ஸ்டெம் செல்களை பயன்படுத்தி மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர் கிருமிகளை வளர்க்க பெட்ரி தட்டுகள் பயன்படுத்தப்படுகிறது.இந்த தட்டுகளில் முதன் முறையாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி மனித மூளையின் ஒத்த பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.தற்போது அந்த பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்தது போன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது.இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும், மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை...

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8க்கான ஷார்ட் கட் கீகள்!

  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இன்றைக்கும் முதல் இடத்தில் அதிக வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஷார்ட் கட் கீ தொகுப்பும், ஒவ்வொரு தொகுப்புக்குமான செயல்பாடு கீழே தரப்பட்டுள்ளது. F1 – Display Internet Explorer Help. F11 – Turn Full Screen Mode on or off. TAB – Cycle through the Address Bar, Refresh button, Search Box, and items on a web page. ALT+LEFT ARROW or BACKSPACE – Go to the previous page. ALT+RIGHT ARROW – Go to the next page. ALT+HOME – Go to your Home page. UP ARROW – Scroll toward the beginning of a document. DOWN ARROW – Scroll toward the end of a document. PAGE...

குரோம் உலாவியில் அனைத்து டேப்களையும் ஒரே கிளிக்கில் மூடுவதற்கு

  தற்போது இணைய பாவனைக்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவரும் உலாவியாக கூகுளின் குரோம் உலாவி காணப்படுகின்றது.இதனால் பயனர்களை கவர்வதற்காகவும், செயற்பாடுகளை இலகுவாக்குவதற்காகவும் பல்வேறு நீட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் தற்போது குரோம் உலாவியில் திறந்து வைத்துள்ள ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஒரே கிளிக்கில் மூடுவதற்கான நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. PanicButton எனும் இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.  தரவிறக்க சுட்ட...

20 மெகாபிக்சல் கமெராவுடன் அறிமுகமாகவிருக்கும் Nokia Lumia 1520

  நொக்கியா நிறுவனமானது 20 மெகாபிக்சல்களை உடைய கமெராவினை உள்ளடக்கிய Nokia Lumia 1520 எனும் புத்தம் புதிய கைப்பேசியினை அறிமுகப்படுத்தவுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள நொக்கியாவின் நிகழ்வு ஒன்றில் இக்கைப்பேசி அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Windows 8 RT இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது Quad-Core Snapdragon 800 Processor மற்றும் PureView தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

சளித்தொல்லைக்கு கருந்துளசி!

        சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது.   நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி பல்கி, பெருகி வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி...

பூமியின் மையத்தில் வெப்பம் எவ்வளவு?

 நீங்களும் நானும் திறந்த வெளியில் ஏதோ ஓரிடத்தில் நிற்கிறோம்.அங்கிருந்து வடக்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் பனிக்கட்டியால் மூடப்பட்ட வட துருவத்துக்குப் போய்ச் சேருவோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டே இருந்தால் உறைந்த பனிக்கட்டிப் பிரதேசமான தென் துருவத்துக்குப் போய்ச் சேருவோம்.மாறாக நாம் நிற்கிற இடத்திலிருந்து பெருச்சாளி பள்ளம் தோண்டுவதைப் போல பள்ளம் தோண்டியபடி பூமியின் மையத்தை நோக்கி நேர் கீழாகப் போவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.   சில கிலோ மீட்டர் ஆழத்துக்கு சென்றாலே வெப்பம் தகிக்கும். அந்த வெப்பத்தில் நாம் வெந்து போய் விடுவோம்.  உலகில் மிக ஆழமான தங்கச் சுரங்கங்களில் பாறையை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாகி...

கடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்

சீனா அண்மையில் இந்துமாக் கடலின் ஒரு பகுதியில் கடலடித் தரையில் கிடக்கும் உலோக உருண்டைகளை எடுப்பதற்கு உரிமை பெற்றது. இந்தியா இதை இந்துமாக் கடலில் காலுன்ற சீனா மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியாகக் கருதுகிறது. சீனாவின் நோக்கம் குறித்து இந்தியா அவநம்பிக்கை கொண்டுள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.இவ்வித உலோக உருண்டைகள் சீனாவுக்குக் கிழக்கே உள்ள பசிபிக் கடலுக்கு அடியிலும் உள்ளன என்றாலும் சீனா மெனக்கெட்டு இந்துமாக் கடலைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்துமாக் கடலில் சீனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குக் கரையை ஒட்டி அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்துமாக் கடலில் உலோக உருண்டைகளை...

பூகம்பம் ஏன்? எரிமலை ஏன்? சுனாமி ஏன்?

  ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார். மேலும் மேலும் சாய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் எடையைத் தாங்க முடியாமல் மீசைக்காரர் உடலை உலுக்கியபடி விழித்துக் கொள்கிறார். வெள்ளைச் சட்டைக்காரகும் விழித்துக் கொண்டு சுதாரித்துக் கொள்கிறார்.பூகம்பம் கிட்டத்தட்ட இப்படித் தான் ஏற்படுகிறது. ஒரு சில்லு அடுத்த சில்லை மேலும் மேலும் நெருக்குகிறது. அடுத்த சில்லு ஒரு கட்டம் வரை இதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறது. நெருக்குதல் ஒரு கட்டத்தை எட்டும் போது சில்லுக்கு அடியில் உள்ள பாறைப் பாளம் பெரிய உலுக்கலுடன் நகருகிறது....

PDF கோப்புக்களை சிறந்த முறையில் கையாளுவதற்கு!

தகவல் பாதுகாப்பிற்கு சிறந்த கோப்பு வகையாகக் காணப்படும் PDF கோப்புக்களை பயன்படுத்துபவர்கள் அவற்றினை தமக்கு வேண்டிய முறையில் மாற்றியமைத்துக்கொள்ள விரும்புவார்கள்.இவ்வாறானவர்களுக்கு கைகொடுக்கும் முகமாக Debenu PDF Tools Pro எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மென்பொருளானது PDF கோப்புக்களை Convert செய்தல், Edit செய்தல், Merge செய்தல், Split செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளதுடன் பாதுகாப்பிற்கென PDF கோப்புக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை நீக்குவதற்கும் பயன்படுகின்றது. மேலும் விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளினை கணினியில் நிறுவிய பின்னர் குறித்த PDF கோப்பின் மீது Right...

உடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில வழிகள்

வாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து நன்றாக ஊறிய பின்னர் சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும்.குளியல் அறையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பின்னர் குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும். தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும். வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். கைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக்கடி நுகர்ந்து பாருங்கள். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்....

கருச்சிதைவை தடுக்க சில வழிகள்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; ...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top