.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 5 January 2014

கராத்தே கற்கிறார் நயன்...



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான விளங்கும் நயன்தாரா கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.

மலையாள நடிகையான நயன்தாரா தமிழில் சரத்குமார் நடித்த 'ஐயா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார், பின்னர் சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக சந்திரமுகியில் நடித்தார்.

தனது குடும்பப் பாங்கான நடிப்பில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நயன்தாரா, பின்னர் தனுஷின் 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தில் நடித்த அவருக்கு அது பெரிய வெற்றியை தந்தது.

அன்றிலிருந்து இன்றுவரை காதல் நாயகியாக நீண்டகாலம் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, தற்போது ஆக்சனுக்கு மாறியுள்ளார்.

அண்மையில் வெளியான, 'ராஜாராணி', 'ஆரம்பம்' திரைப்படங்களில், அசத்தலாக நடித்த அவர், தற்போது வித்யா பாலன் நடித்த, 'கஹானி' திரைப்படத்தின் ரீ-மேக்கான, 'அனாமிகா'வில் நடிக்கவிருக்கிறார்.

'அனாமிகா' முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம் என்பதால் முதன் முறையாக, ஆக்சன் நாயகியாக அவதரித்துள்ளார் நயன்தாரா. 'அனாமிகா'வை தொடர்ந்து, 'ஜெயம்' ரவியுடன் ஜோடி சேரவுள்ளார், அந்த திரைப்படத்திலும் ஆக்சன் ரோல் தானாம்.

அதாவது, கராத்தே மாஸ்டராக நடிக்கும் நயனுக்கு, ஹீரோவுக்கு இணையான வெயிட்டான வேடமாம். இதற்காக, சில மாதங்களாக கராத்தே பயிற்சியில் தீவிரமாக இருந்து வருகிறாராம் நயன்தாரா.

மேலும் வில்லன்களுடன் மோதி, துவம்சம் செய்யும் காட்சியிலும், ஆவேசமாக நடித்து, கைதட்டல் வாங்கியுள்ளாராம்.

ஜிஎஸ்எல்வி-டி 5 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது



 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் ஜிஎஸ்எல்வி - டி 5 ராக்கெட் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று மாலை 4.18 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.18க்கு துவங்கியது. மொத்தம் 1982 கிலோ எடை கொண்ட ஜிசாட்-14 என்ற தொலைத்தொடர்பு செயற்கைகோளை இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த உள்ளது. ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் மொத்தம் 17 நிமிடங்கள் பயணம் செய்து ஜிசாட் - 14 செயற்கைகோளை பூமியிலிருந்து அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோமீட்டர் தூரமும், குறைந்தபட்சம் 180 கி.மீட் டர் தூரமும் கொண்ட பாதையில் நிறுத்தும்.

இந்த 17 நிமிடங்களில், கிரையோஜெனிக் இன்ஜின் மட்டும் 12 நிமிடங்கள் இயக்கப்படும். தவிர எரிபொருள்களை எடுத்துச் செல்லும் 4 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல் தொடர்புகளை அளிக்கும் வகையில் 6 கே.யு. டிரான்ஸ்பாண்டர்கள், 6 இ.எக்ஸ்.டி, சி பாண்டு டிரான்ஸ்பாண்டர்கள், கே.ஏ. பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கோளின் ஆயுள் காலம் மொத்தம் 12 ஆண்டுகள் ஆகும். இன்சாட் - 3சி, இன்சாட் 4சிஆர், கல்பனா-1 ஆகிய செயற்கைகோளுக்கு அருகில் இது நிலைநிறுத்தப்படும்.

ஜிஎஸ்எல்வி-டி5 இந்தியாவின் 8வது ராக்கெட் ஆகும். இதில் 2வது முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் இந்த ராக்கேட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி-டி5 ராக்கெட் ஆகஸ்ட் 19ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்பட இருந்தது. கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2வது நிலை இன்ஜினில் இருந்து திரவ எரி பொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதால், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஜிஎஸ்எல்வி கடந்து வந்த பாதை

ஜிஎஸ்எல்வி -டி 1 கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதியும், ஜிஎஸ்எல்வி- டி 2 2003ம் ஆண்டு மே 8ம் தேதியும், ஜிஎஸ்எல்வி- எப்-01 2004 செப்டம்பர் 20ம் தேதியும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

2006ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி - எப்-02 தோல்வியில் முடிந்தது.

ஜிஎஸ்எல்வி - எப்- 4 2007ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஜிஎஸ்எல்வி- டி 3 2010 ஏப்ரல் 15ல் செலுத்தப்பட்டது தோல்வியடைந்தது. ஜிஎஸ்எல்வி எப்-06- 2010 டிசம்பர் 25ம் தேதி செலுத்தப்பட்டதும் தோல்வியடைந்தது. தற்போது ஜிஎஸ்எல்வி டி-5 இன்று மாலை 4.18க்கு விண்ணில் ஏவப்படுகிறது.

மாதுளம்பூவின் பயன்கள்



மாதுளம்பூவின் பயன்கள்:-

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

'அது' நல்லது... அந்த 'அது' எதுங்க...?



கொஞ்சம் இருப்பா.... நீங்க நினைத்து வந்த அந்த 'அது' இது இல்லீங்கோ.....அந்த 'அது' மருத்துவம் சம்பந்தப்பட்டது...!

மருத்துவக் குறிப்பு சம்பந்தமாக நாம் பார்க்க இருப்பது அந்த 4 நல்ல விசயங்களை பற்றி தான்.

1. இசை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தாலாட்டு பாடல்களாலும், இனிமையான இசையாலும் பலன் பெறுகின்றன என்கிறது 'பீடியாட்ரிக்ஸ்(pediatrics)' இதழ்.

அமெரிக்காவின் 11 மருத்துவமனைகளில் 272 குறைப்பிரசவ குழந்தைகளிடம் ஆராய்ச்சி நடந்தது. வழக்கமான சிகிச்சைகளோடு தாலாட்டு பாடல், பெற்றோரே பாடிய பாட்டு, இதயத்துடிப்பு போன்ற ஓசை அடங்கிய இசை என பலவற்றை மாற்றி மாற்றி குழந்தைகளைக் கேட்க வைத்தார்கள். இசை கேட்ட குழந்தையின் இதயத் துடிப்பு முதல் உடல் வளர்ச்சி வரை எல்லாவற்றிலும் முன்னேற்றம் இருந்ததாம்!

2. புதுசு நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


ரத்த வங்கிகள், தாங்கள் தானம் பெறும் ரத்தத்தை அதிகபட்சமாக 6 வாரங்கள் வைத்திருந்து பயன்படுத்துகின்றன. ஆனால், "இவ்வளவு காலம் வைத்திருப்பதே அதிகம். மூன்று வாரங்களுக்குள் அதை இன்னொருவர் உடலுக்குள் செலுத்திவிட வேண்டும்" என்கிறது 'அனெஸ்தீசியா அண்டு அனால்ஜெஸியா (anaesthesia and analgesia)' இதழ்.

மூன்று வாரங்களைத் தாண்டியதுமே ரத்த சிவப்பணுக்கள், மிகச்சிறிய ரத்த நாளங்களின் திசுக்களுக்குள் ஊடுருவி ஆக்சிஜனைக் கொடுக்கும் திறனை இழந்து விடுகின்றனவாம். இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

3. ஜூஸ் நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


'உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கலாம்' என்கிறது 'ஹைப்பர்டென்ஷன் (hypertension)' என்ற மருத்துவ இதழ். உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு 250 மி.லி பீட்ரூட் ஜூஸ் கொடுத்து பிரிட்டனில் ஆராய்ச்சி நடத்தினர். 24 மணி நேரத்தில் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்தது.

பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகமாக உள்ளது. வேர்கள் மூலம் மண்ணிலிருந்து இது நைட்ரேட்டைப் பெறுகிறது. இந்த நைட்ரேட் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இது ரத்தக்குழாய்களை விரியச் செய்து, ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. எனவே ரத்த அழுத்தம் குறைகிறது. கோஸ், பீன்ஸ், கீரைகள் போன்ற காய்கறிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகின்றன.

4. குடை நல்லது... எப்படின்னு கேட்கிறீங்க தானே?


மழையைப் போலவே வெயிலுக்கும் குடை பிடிப்பது நல்லதா? 'ஜாமா டெர்மடாலஜி (jama dermatology)' அமைப்பு, குடைகளை ஆராய்ச்சி செய்துவிட்டு "ஆமாம்" என்றிருக்கிறது.

சூரியன் வெளிப்படுத்தும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களை பெரும்பாலான குடைகள் வடிகட்டி, பாதுகாப்பு தருகின்றனவாம். டார்க் நிறத்தில் இருக்கும் குடைகளே இதை சிறப்பாகச் செய்கின்றன; குறிப்பாக கறுப்புக் குடை 90 சதவீத கதிர்வீச்சைத் தடுக்கிறது.

ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் பட தலைப்பில் விஷால்!




படத்தின் பப்ளிசிட்டிக்காக வெற்றி பெற்ற ரஜினி பட டைட்டில்களை வளர்ந்து வரும் ஹீரோக்கள் தங்கள் படத்திற்கு வைத்துக்கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. முன்பு தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் பின்பற்றினார். இப்போது கார்த்தி பின்பற்றி வருகிறார். இந்த பட்டியலில் தற்போது விஷாலும் சேர்ந்து கொண்டுள்ளார்.

பாண்டியநாடு படத்தையடுத்து தீராதவிளையாட்டு பிள்ளை, சமர் படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகியுள்ளது.இந்த படத்தையும் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலமே தயாரிக்கும் விஷால், இந்த படத்திற்கும் பாண்டியநாடு கதாநாயகி லட்சுமிமேனனையே ஜோடி சேர்த்திருக்கிறார்.

காரணம் பாண்டியநாடு படத்திற்கு லட்சுமிமேனன் காட்டிய ஈடுபாடு மட்டுமின்றி, விஷால்-லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிக உயிரோட்டமாக இருப்பதாக படம் பார்த்த விஷாலின் திரையுலக நண்பர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்களாம். அதனால், அடுத்த படத்தில் வேறு சில முன்னணி நடிகைகளின் பெயர்களை பரிசீலனையில் வைத்திருந்தவர்கள், இப்போது லட்சுமிமேனனையே கமிட் பண்ணி விட்டனர்.

மேலும், இந்த படத்தின் தலைப்பு பேசப்படுவதாக இருக்க வேண்டும் என்று டைரக்டர் திருவிடம் சொல்லியிருந்தாராம் விஷால். ஆனால் அதையடுத்து அவர் சில டைட்டில்களை சொன்னவர், பின்னர் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் தலைப்பு இந்த கதைக்கு மிகப்பொருத்தமாக இருக்கும் என்றாராம். அதைக்கேட்ட விஷால் குஷியாகி விட்டாராம்.

அதையடுத்து அப்படத்தை தயாரித்தவர்களிடம் முறைப்படி பேசி சிகப்பு மனிதனாகியிருக்கிறாராம் விஷால்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top