.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 29 December 2013

மணிகண்டனின் மகர ஜோதி தரிசனம்




எல்லாம் வல்ல சர்வேஸ்வரராக விளங்கும் சிவபிரானுக்கும் மோகினி வடிவம் எடுத்த திருமாலுக்கும் மகனாக அவதரித்தவர் மணிகண்டன்.

கழுத்தில் மணிமாலையுடன் காணப்பட்டதால் மணிகண்டன் என பெயர் பெற்றார். ஹரிக்கும் ஹரனுக்கும் புத்திரராக பிறந்ததால் ஹரிஹரபுத்திரர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் ஐயனுக்கும் அப்பனுக்கும் உதித்ததால் ஐயப்பன் ஆக பெயர் பெற்றார். சபரிமலையில் அமர்ந்து ஞான ஆட்சியுடன் அருளாட்சி புரிந்து மானிடர்களின் பிறவித்துன்பங்களைப் போக்கி அருள் பாலிக்கிறார். சபரிகீரிசன் சாஸ்தாவாக பதினெட்டு படிகளுடன் கூடிய சபரிமலை திருத்தலத்தில் வீற்றிருந்து வேண்டுவார்க்கு விரும்பிய வரம் அருளி எம்மைக் காத்து வருகிறார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தால் அது குழந்தை, வாரிசு, சந்ததி தழைக்க குடும்பம் உருவாக காரணமாகிறது. ஆனால் ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கிற குழந்தை இப்படி ஒரு தெய்வீகக் குழந்தை வடிவில் தேவர் குலத்தைக் காக்க என மணிகண்டனாக ஹரிஹரனாக அவதாரம் எடுத்தார். மும்மூர்த்திகளான சிவனும் பிரமனும் விஷ்ணுவும் கடும்தவம் இருந்து யார் வரத்தைக் கேட்டாலும் மனமிரங்கி அவர் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு திண்டாடுவது அவர்களின் வழக்கமான ஒன்று என்று புராணங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம்.

ஆக அன்னை ஆதி பராசக்தியால் கொடிய அரக்கன் மகிஷாசுரன் அழிக்கப்பட, அவனது தங்கை மகிஷி கடும் சினம் அடைந்தாள். தேவர்குலத்தை பூண்டோடு அழிக்கவும் பழிவாங்கும் எண்ணத்திலும் சிருஷ்டிக்கடவுளான பிரம்ம தேவரை நோக்கி அடர்ந்த காட்டில் கருங்கற்பாறையில் அமர்ந்து கடும் தவம் இயற்றினாள். பிரம்மதேவர் அவளை நோக்கி என்னவரம் வேண்டும் எனக்கேட்க மகிஷி கூறினாள், அரிக்கும் அரனுக்கும் மகனாக பிறந்து வேறு ஒருவரிடத்து வளர்ந்த ஒருவனை தவிர ஆயுதங்களாலும் சாதாரண மானிடர்களாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது. எனது உரோமங்களில் இருந்து என்னைப்போன்று ஆயிரக்கணக்காணோர் உற்பத்தியாகி எதிரிகளை அழிக்க வேண்டும். எனவும் வேண்டுகிறாள்.

பிரம்மரும் வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்து விட்டார். தேவர்களையும் ரிஷிகளையும் மானிடர்களையும் வருத்த தொடங்கி விட்டாள் அசுரகுலத்து மகிஷி. அவள் படுத்திய துன்பங்களை தாங்க முடியாத தேவர்கள் காத்தற்கடவுளாகிய ஹரியிடம் சென்று முறையிட்டனர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் பகை. அதோடு வரங்கள் பெறுவதும் அதனால் சாபங்கள் அடையப் பெற்று அல்லல் உறுவதும் இயல்பு. அப்படி முன்னொரு காலவேளையில் தேவர்கள் துர்வாச முனிவரின் சாபம் அடையப் பெற்று உடல் பலவீனம் அடைந்து தளர்ச்சி உற்று முதியவர் நிலையினை அடைய வேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது. இதை பயன் படுத்தி மகிஷி துன்புறுத்த தேவர்கள் விஷ்ணுவைச் சரண் அடைந்தனர்.

காத்தற்கடவுளாகிய விஷ்ணு பகவானும் தேவர்கள் மிகுந்த வலிமை பெற திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் உண்டால் சக்தி கிடைக்கும் எனவழியைக் காட்டினார். தேவரும் அசுரரும் திருப்பாற்கடலை கடைந்தனர். அமிர்தம் தோன்றியது. அசுரர்கள் தேவர்களுக்கு அவ்வமுதினை பகிர்ந்தளித்து உண்ண விரும்பாமல் தாமே உண்ண விரும்பி திருவமுதினை பறித்து எடுத்தனர்.

மகாவிஷ்ணு தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வேண்டி மோகினி வடிவம் தாங்கி அசுரர்களை தன்பால் மோகம் கொள்ள வைத்து அமுதினை பெற்று தேவர்களுக்கு அளிக்கிறார். தேவர்களும் அமிர்தத்தை உண்டு இழந்த சக்தியை மீண்டும் பெற்றனர். இதை அறிந்த ஈசன் மூவுலகமும் மையல் கொள்ளும் வதனத்தை அந்த மோகினி வடிவத்தை காண ஆவலுற்றார். மோகினி வதனத்தை கண்ணுற்ற ஈசன் அவ்வுருவில் மோகித்து மையல் கொண்டார்.

கன்னி உருக்கொண்ட திருமாலுக்கும் பரமசிவனுக்கும் உதித்த குழந்தையை பம்பா நதிக்கரையில் விட்டுசென்று விட பந்தள நாட்டு மகாராஜா எடுத்து அன்போடு வளர்க்கிறார். குழந்தை இல்லாகுறை போக்கிய அக்குழந்தையை மனிகண்டனாக எல்லாக் கலைகளையும் பயிற்றுவித்து வளர்க்கிறார். காலம் கணிந்து வர தேவேந்திரன் ஹரிகரன் காட்டுக்குள் வந்ததையும் அவர் பூர்வீகத்தையும் அறிந்து மகிஷி அரக்கியை அழித்துவிடுமாறு வேண்டிக் கொள்ள தேவர்கள் புடைசூழ அரக்கியை வதம் செய்து அனைவரையும் காக்கிறார்.

 இளம் பாலகனாக பனிரெண்டு வயதிலேயே அரக்கியை அழித்து தேவர்களை காத்த ஸ்ரீ சாஸ்தாவாகிய ஐயன் தன்னை வளர்த்து ஆளாக்கிய அன்னை தலைவலியை போக்க என்னசெய்வது எனஎண்ணம் கொண்டார். தேவர்களின் அரசன் தேவேந்திரனிடம் அன்னை தனது பிணி தீர்க்க புலிப்பால் கொண்டு வர என்னை காட்டுக்கு அனுப்பினார்கள். நான் என் செய்வேன் எனக்கேட்க தேவேந்திரனும் உடனே பெண் புலியாக உருமாறினார். அதன் மீது ஏறி அமர்ந்து மணிகண்டனும் ஏனைய தேவர்களும் புலிக்கூட்டமாக உருமாறி பந்தளநாடு நோக்கி சென்றனர். புலி மீது பாலகனான மணிகண்டனைப் பார்த்து அஞ்சினர்.

மன்னன் இராஐசேகரன் மகனின் துணிவைப் பாராட்டி ஆரத்தழுவினார். அமைச்சர் மனதில் தீய எண்ணங்களுடன் அரசிக்கு அவளின் இளைய மகனுக்கு மூடிசூட்ட ஆசையை வளர்த்து இல்லாத தலைவலியை ஏற்படுத்தியிருந்தார்.

அதனால் மணிகண்டன் புலியுடன் வந்ததும் தவறுக்கு மன்னித்து மண்றாடினர். பன்னிரெண்டு காலம் என்னை வளர்த்து காத்து வந்தீர்கள். நாடாளும் எண்ணம் எனக்கில்லை எனக்கூறி தம்பி இராஜேந்திரனுக்கு முடிசூட்டி இளவரசன் ஆக்குங்கள் இது எனது விருப்பம் ஆகும். பூவுலகில் அவதாரம் எடுத்த எனது நோக்கம் நிறைவேறிவிட்டது வருகிறேன் என்று புறப்பட்டார்.

மன்னன் முதல் அனைவரும் கலங்கி நின்றனர். அன்பு தந்தையே ஆசி கூறுங்கள் சபரி மலைப் பகுதியில் பம்பை நதிக்கரையில் ஒரு அம்பை எய்கிறேன். அந்தச் சரங்குத்தும் இடத்தில் ஆலயம் எழுப்பி என் திரு உருவை பிரதிஸ்டை செய்யுங்கள். என்னை வழிபடும் அடியார்களுக்கு ஆண்டு தோறும் மகர சங்கிராந்தி அன்று நான் ஒளிவடிவில் பொன்னம்பலமேட்டில் திருக்காட்சியளிப்பேன் என்று மறைந்தருளினார்.

ஆலயம் எழுப்பி பதினெட்டு படிகளும் அமைத்து ஐயப்பனை வழிபடுபவர் வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பெருகும். பகவான் தத்துவாதீனாக விளங்குவதையே இப் பதினெட்டுபடிகளும் உணர்த்துகின்றன. பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படும் ஐம்புலன்கள் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்தும் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஐம்பொறிகள் ஓசை ஊறு ரூபம் சுவை நாற்றம் என்ற ஐந்தும், அந்தக்கரணங்களான மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கும். மலங்களாகிய ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றும் ஆன்மாவும் என பதினெட்டு விடயங்களைக் கொண்டுள்ளது.

மேற்குறித்த பதினெட்டு விடயங்களைக் குறித்தே பதினெட்டு படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் ஸ்ரீ சாஸ்தாவாக விளங்கும் ஐயப்ப சுவாமி சபரி பீடத்தின் பதினெட்டு படிகளை கடந்து ஸ்ரீ சுவாமி ஐயப்பனின் பேருண்மைத் தத்துவத்தை பெற்று உய்வதோடு, பொன்னம்பல மேட்டில் தை மகர சங்கராந்தி அன்று தோன்றும் மகர ஜோதி தரிசனம் கண்டு எம் பாவங்களை தீர்க்க ஐயப்பனை வணங்குவோம்.

கூடப்பிறக்காத அண்ணண் அஜீத்: மைனா விதார்த் உருக்கம்




வீரம் படத்தில் அஜீத்தின் தம்பியாக மைனாவில் நடித்த விதார்த்.நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு தற்போது   முடிவடைந்துள்ள நிலையில் தனக்கு கூடப்பிறக்காத அண்ணன் அஜித் என்று விதார்த் உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து விதார்த் கூறுகையில்: அஜீத் சார் படத்துல் நடிக்கவிரும்புகிறீர்காள என்று  டைரக்டர் சிவா சார் என்னை கூப்பிட்டார்.  கரும்பு தின்ன கூலியான்னு மறுநாளே போய் நின்றேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லை. அய்யோ… தல படத்துல நடிக்க முடியாமல்  போயிடுமேன்னு கலங்கி நின்றேன். அப்போது அஜீத்சாரே நான் நடித்து வரும் படத்தின் டைரக்டர் மீரா கதிரவன்கிட்ட பேசி தேதி ஒதுக்கி கொடுக்கச் சொன்னார்.

பொதுவாக அஜீத் சார் நடிக்கிற படங்ககில்  அவரோட ஓப்பனிங் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும். ஆனா “என்னோட ஓப்பனிங் சீன் முன்னாடி வளர்ற ஹீரோ விதார்த்துக்கு நிகரான ஓப்பனிங் சீன் வையுங்க”ன்னு அஜீத் சார் சொன்னார். அப்படியேதான் நடந்தது.

ஒரு நாள் போன்ல கூப்பிட்டார் “சுவிட்சர்லாந்து போயிருக்கீங்களா?” என்று  கேட்டார்., இல்லைன்னு நான் சொன்னேன். “அப்ப கிளம்புங்க போகலாம்” என்றார் ஒரே நாளில் விசாவினை தயார் செய்து என்னை அழைத்துக்கொண்டு சென்றார்.. எனக்கு அங்கே ஷூட்டிங் கிடையாது. அவருக்குதான் ஷூட்டிங். ஆனாலும் என்னை அழைச்சிட்டு போய் ஊர் சுற்றி காட்டி, வேண்டியதை வாங்கித் கொடுத்தார். அந்த நாட்களை இப்போ நினைச்சாலும் புல்லரிக்குது.

ஒரு நாள் “பைக்லேயே டூர் போலாமா?”ன்னு கேட்டார் நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன் சார்னு போயி நின்னேன். விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிஸா வரைக்கும் அவரோட பைக் டூர். அவர் ஓட்டிக்கொண்டே செல்ல நான் பின்னால் உட்கார்ந்து போனேன். அந்த பாக்கியம் யாருக்கும் கிடைச்சிருக்காது. சாலையோர கடையில உட்கார்ந்து சாப்பிட்டு, பிளாட்பாரத்துல ரெஸ்ட் எடுத்து… என்ன ஒரு அனுபவம் அது.

சரியா 108 நாள் அவரோட இருந்திருக்கேன். அந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் என்னால மறக்கவே முடியாது. இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர் எனக்கு கூடப்பிறக்காத அண்ணன் இவ்வாறு உருக்கமாக பேசினார் மைனா விதார்த்.


அந்த விஷயத்துல நாங்க ஒண்ணுதான்...




ஒரு நடிகை தான் வாங்கிய அட்வான்சை ஒரு போதும் திருப்பிக் கொடுப்பதில்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இரண்டு பட பூஜைகள்.

அண்மையில் தெலுங்கு பட இயக்குனர் ஒருவரது தலைமையில் சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரமாண்ட பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சாதாரண ஆட்களில்லை. நயன்தாரா, தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான கோபிசந்த் ஆகியோர். இது நயன்தாரா நடிக்கும் படம் என்பதால் சென்னையிலிருக்கும் தமிழ் நடிகர்களில் முக்கியமான பலரும் கூடிவிட்டார்கள்.

சரி, முதல் வரி மேட்டருக்கு வருவோம். இந்த படம் ஏற்கனவே பூபதி பாண்டியன் டைரக்ட் செய்வதாக இருந்த படம். அதை துவங்கும் முன்பாகவே இவருக்கும் தயாரிப்பாளருக்கும் முட்டிக் கொண்டது. படத்தையே டிராப் செய்துவிட்டார் தயாரிப்பாளர். அப்படியென்றால் நடிகர் நடிகைகளுக்கு கொடுத்த அட்வான்ஸ்? அதை திருப்பி கேட்கும்போதுதான் படமாவே நடிச்சு கொடுத்துடறோம் பாஸ் என்றார்களாம் நயன்தாராவும் கோபிசந்தும். வேறு வழியில்லாமல் புதிய இயக்குனரை வைத்து இந்த படத்தை மீண்டும் துவங்கியிருக்கிறார் தயாரிப்பாளர்.

இதே நிலைமைதான் இப்போது தமன்னா நடிக்க ஒப்புக் கொண்ட தெலுங்கு படம் ஒன்றுக்கும். நாகசைதன்யாவுடன் தமன்னா ஜோடியாக நடிக்கவிருந்த ஹலோ பிரதர்ஸ் படம் டிராப். அட்வான்சை திருப்பி கேட்ட தயாரிப்பாளரிடம், படமே பண்ணிடலாமே. எதுக்கு அட்வான்சை திருப்பி கேட்கிறீங்க என்கிறார்களாம் இருவரும்.

இதே மாதிரி இலியானாவிடம் சில கோடிகளை கொடுத்துவிட்டு விழித்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு தயாரிப்பாளர். இத்தனைக்கும் இந்த படத்தில் இலியானாவுக்கு ஜோடியாக நடிக்க புக் ஆகியிருந்தவர் நம்ம ஊரு ஹீரோ விக்ரம். சீயானாவது திருப்பி கொடுத்தாரா இல்லையா? அது இப்ப தெரியாது...

கொல்கத்தா தாதாவாக விஜய்?




முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாக நடிக்கப் போகிறாராம்.
ஜில்லா படம் முடிவடைந்த நிலையில் விஜய் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை கொல்கத்தா நகரின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் படத்தில் விஜய் தாதாவாக நடிக்கிறாராம்.

கொல்கத்தாவை கலக்கிக்கொண்டிருந்த பிரபல கிரிமினல் வேடம்தான் விஜய்க்கு. மக்களுக்கு நன்மை செய்யும் கிரிமினலாக விஜய் ராபின் ஹூட்டாக வருகிறாராம். உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்கிறார்கள்.

அனிருத் இசையமைப்பில் பாடல்கள் மதன்கார்க்கி எழுதுகிறார். வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். ஏற்கெனவே விஜய்-முருகதாஸ் இணைந்த துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. துப்பாக்கி படத்தை மும்பை பின்னணியில் சொன்ன முருகதாஸ் இந்தப் படத்தை கொல்கத்தா பின்னணியில் சொல்லப் போகிறாராம்.

இதற்காக படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது

சிறந்த பொய்!!!!




ஒரு குட்டி கதை:
ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top