.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 31 August 2013

மதராஸ் கஃபே – சினிமா விமர்சனம்..!

முதல்ல நெடு நாளைக்கு பிறகு மனது மிகவும் கனத்துடன் இந்த விமர்சனத்தை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன். என் இனத்தை பெருமைபடுத்தும் படமா அல்லது இந்தியர்களை சிறுமைபடுத்தும் படமா என்று எனக்கே தெரியாத ஒரு கேள்வி என்னுள் இந்த படத்தை பார்த்ததிலிருந்து எழுந்தது.  இத்தனைக்கும் இந்த படத்தை பற்றி ஒரு மாதம் முன்பே கூறியிருந்தேன் இதை ஒரு தமிழ் படமாய் அல்லது தமிழர் எடுத்திருந்தால் அவர் பாதி ஆயுள் சென்சார் / ரிவைஸிங் கமிட்டியில் முடிந்து போயிருக்கும் என்று ஏன் என்றால் இயக்குனர் செல்வமணி இதே கதை களத்தை வேறு விதமாக எடுத்து அவர் பட்ட பல ஆண்டு துயரம் சொல்லி மாளாது.படத்தின் முதன் முதலில் ஒரு ஸ்லைடு – அதில் 1980 முதல் இலங்கையின் இனக்கலவரத்தில் தமிழர்கள் கொல்லபடுகின்றனர்...

இயற்கை ஆர்வலர்கள் நீர்வழிப் பாதைகளைச் சீரமைக்க வேண்டியது அவசியம்!

மலைகளில் இருந்து உருவாகி பாய்ந்தோடி வரும் நீரைச் சேமிக்க, வாய்க்கால்கள் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதியில்லாத இடங்களில் குளங்களாகவும், ஏரிகளாகவும் இயற்கையான நீர் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்கிவைத்தனர் நம்முடைய முன்னோர்கள்.இவற்றின் நீர்ப்போக்கைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வாய்க்கால்கள் மூலம் ஒரு குளம் நிரம்பி, அடுத்த குளத்துக்கும் நீர் செல்ல பாதை வைத்திருக்கிறார்கள். இதேபோலத்தான் கோவில்களுக்குள் இருக்கும் குளங்களும். எல்லாக் குளங்களுக்கும் நீர்வழிப்பாதை உண்டு. இப்போது அவையெல்லாம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த தகவல்.குளங்கள், ஏரிகள் இல்லாவிட்டால்தான் என்ன என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் வளர்த்துவிடப்பட்டிருப்பதாகப் புரிந்து கொள்ள...

கண்டபடி பேசிவிட்டுப் பிறகு வாபஸ் வாங்கும் போக்கு!

நீபேசாத வார்த்தைக்கு நீ எஜமான் நீ பேசிய வார்த்தை உனக்கு எஜமான் என்ற சொலவடை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நம்மை ஆட்டிவைக்கின்ற அரசியல்வாதிகளுக்கும், அரசு நிர்வாகத்தில் அவர்களுக்குத் துணைபோகின்ற அதிகாரவர்க்கத்தினருக்கும் நிச்சயம் பொருந்தும். அதுவும் தொலைக்காட்சி ஒளிபரப்பு என்பது நமது நாட்டின் நாடி நரம்புகளில் எல்லாம் புகுந்து புறப்பட ஆரம்பித்துவிட்ட இந்த மின்னணு யுகத்தில், பேட்டி என்ற பெயரில் முகத்துக்கு நேராக ஏதாவது ஒரு மைக் நீட்டப்பட்டுவிட்டால் போதும், ஆர்வக்கோளாறு காரணமாக எதையாவது பேசிவிட்டுப் பின்பு தவிப்பது இவர்களுக்கு ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.   அந்தக் காலத்தில் நேருஜி, கிருபளானி, பிலுமோடி, ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள்...

கம்யூட்டருக்கு அடிமையாகி போன சிறார்களுக்கான சிறப்பு முகாம்கள்: ஜப்பான் அரசு உத்தரவு!

தற்போதைய காலகட்டத்தில் கம்யூட்டர் மற்றும் இணையதளத்தின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. அதே சமயம், பல்வேறு சிறார்கள் கம்யூட்டருக்கு அடிமை ஆகிப் போவது அவர்களின் இயல்பான வெளி நடவடிக்கைகளைப் பாதிக்கத் துவங்குவதாக மாறுவது கவலைக்குரிய செயலாக தோன்றுகின்றது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் சமீபத்திய ஆய்வின்படி, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவயதினர் இணையதளம் உபயோகிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 5,18,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.   இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசின் தகவல் அதிகாரி...

செல்போன்களில் எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்றவைகளுக்குத் தடை- பாக். அதிரடி!

செல்போன்களில் வாய்ஸ், தகவல் மற்றும் ‘எஸ்.எம்.எஸ்.’ எனப்படும் குறுஞ்செய்திகள் அனுப்புதல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. அவை சிறுவர், சிறுமிகள் முதல் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கெடுப்பதாக பாகிஸ்தானில் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.இது குறித்து பாராளுமன்றம் மற்றும் சட்ட சபைகளில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேசியுள்ளனர். எனவே, செல்போன்களில் உள்ள எஸ்.எம்.எஸ். வாய்ஸ் மெயில் போன்ற ‘பேக்கேஜ்’ சிஸ்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.   அதற்கான உத்தரவை செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் பிறப்பித்துள்ளது. இந்த திட்டம் வருகிற 2–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.அதற்கான கடிதம் கடந்த ஆண்டு நவம்பர்...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top